நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள், நமது உடலின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக அமைகிறது. காய்கறிகளும், கீரைகளும் கொடுக்கும் ஊட்டச்சத்துக்களை ஈடு செய்யவே முடியாது. அதிலும் பெரும்பாலானவர்களுக்கு அவ்வளவாக பிடிக்காத முள்ளங்கி மற்றும் முள்ளங்கிக் கீரையின் மகத்துவம் மிகவும் பெரியது. முள்ளங்கியில் வைட்டமின் ஏ,சி,ஈ, கே உள்ளது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் கந்தகம் அதிகமாக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவ்வளவு ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும், முள்ளங்கியை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது, இரவில் சாப்பிடுவது தேவையில்லை. ஏனென்றால், அது வாயு பிரச்சனை மற்றும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.  


முள்ளங்கி சாப்பிட சிறந்த நேரம் மதியம் தான், சாலடாக உண்டால், உணவுக்கு முன் சாப்பிட்டுவிடுங்கள். இல்லாவிட்டால் வாய் துர்நாற்றம் உங்களுக்கு அல்ல, உங்கள் அருகில் இருப்பவருக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம்.  


முள்ளங்கியில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. இதனால் செரிமானம் மேம்படும். முள்ளங்கியை சாப்பிடுவது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. முள்ளங்கிக்கு உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும் ஆற்றல் உள்ளது. இது சிறுநீரகத்தை சுத்தப்படுத்துகிறது. இதனால் சிறுநீர்ப்பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கப்படும்.


மேலும் படிக்க | இந்த பானங்கள் குடிச்சா உடல் எடை குறையும்... வெயிலுக்கும் இதமா இருக்கும்


முள்ளங்கியில் அதிக பொட்டாசியம் இருப்பதால் ரத்த நாளங்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கிறது. இதனால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். சுருங்கிப்போன காற்றுக் குழாய்களை விரிவடையச் செய்யும் திறன் உள்ளதால் ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் பிரச்னைகளை தீர்க்கும். 


முள்ளங்கி மட்டுமல்ல, முள்ளங்கிக் கீரையையும் சமைத்தும் சாப்பிடலாம், சமைக்காமல் மெல்லிய துண்டுகளாக்கி சாலட் போலவும் சாப்பிடலாம். முள்ளங்கி மற்றும் அதன் கீரை இரண்டுமே இரைப்பைக் கோளாறுகள், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், மூலம், மஞ்சள் காமாலை என பல மோசமான நோய்களையும் குணப்படுத்துகின்றன. நீரிழிவு நோய்க்கும் முள்ளங்கி மிகச் சிறந்த மருந்தாக உள்ளது.


பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் முள்ளங்கி ஏற்றது. சிறுநீர்ப் பாதையில் பிரச்சினை உள்ளவர்களுக்கு முள்ளங்கிச் சாறு ஏற்றது. அதேபோல், முள்ளங்கியில் உள்ள கந்தக சத்துக்கள் பித்தநீரை சீராக சுரக்கச் செய்து செரிமானத்தை ஊக்குவிக்கிறது. எனவே, பித்தப்பையில் கற்கள் தோன்றும் வாய்ப்பும் குறையும். 


மேலும் படிக்க | Prediabetes இருந்தால் கண்டிப்பாக நீரிழிவு நோய் வருமா? இதன் அறிகுறிகள் என்ன?


முள்ளங்கியை சமைப்பது போல, முள்ளங்கிக் கீரையையும் சமைக்கலாம், பச்சையாகவும் உண்ணலாம். முள்ளங்கிக் கீரையில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கிறது. வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகிறது.  


முள்ளங்கியை காயாகவோ, சாம்பார் போன்றவற்றில்  சேர்த்தோ பயன்படுத்தலாம். உடலில் நோய்  எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் முள்ளங்கியில் கலோரிகள் குறைவாகவும், கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாகவும் உள்ளதால் அடிக்கடி முள்ளங்கியை உணவில் சேர்த்துக் கொண்டால் எடையைக் குறைப்பிற்கு உதவம் என்று நம்பப்படுகிறது.


சரி, முள்ளங்கி மற்றும தன் கீரையை சமைத்தும் சாலடாகவும் பயன்படுத்தலாம், ஆனால் ஜூஸாகவும் குடிக்கலாம் என்பது தெரியுமா? முள்ளங்கி சட்னி, முள்ளங்கி பரோட்டா, முள்ளங்கி சாம்பார், முள்ளங்கி துவையல் என சமைத்து உண்பதைப் போல, முள்ளங்கியை சமைக்காமல் உண்ணும்போது, சாலட் தவிர, முள்ளங்கியை சாறு எடுத்து ‘முள்ளங்கி ஜூஸ்’ செய்தும் குடிக்கலாம்.


முள்ளங்கியில் வாயில் நாற்றம் ஏற்படுத்தும் தன்மை இருப்பதால், முள்ளங்கியுடன் வேறு சில பழங்களை சேர்த்துக் கொள்ளலாம். முள்ளங்கி, இஞ்சி, கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து மிக்சியில் அடித்து, வடித்து எடுத்துக் கொள்ளவும். அந்த சாற்றுடன் கொஞ்சம் தேன் மற்றும் சில துளிகள் எலுமிச்சை ரசம் சேர்த்து குடித்தால் சுவை மிகுந்த, ஊட்டச்சத்துள்ள ஜூஸ் ரெடி.


(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | தைராய்டு பிரச்சனையா? இந்த உணவுகள் உங்கள் உணவில் அவசியம் இடம்பெற வேண்டும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ