COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகை ரகுல் ப்ரீத் சிங், சில நாட்களுக்கு முன்னர் நடுங்கும் குளிரில் ஒரு பணிசூழ்ந்த ஒரு குளத்தில் இறங்கி குளிப்பது போன்ற வீடியோ வைரலானது. இதன் பெயர், கிரையோதெரபி. இப்படி குளிப்பதனால் உடலுக்கு என்ன பயன் தெரியுமா?


ரகுல் ப்ரீத் சிங்கின் வைரல் வீடியோ!


பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங், சில நாட்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில், உறைய வைக்கும் குளிரில் பிகினி போட்டுக்கொண்டு பணி சூழ்ந்த இடத்தில் உள்ள ஒரு குளத்தில் மூழ்கி எழுந்திருப்பார் ரகுல். இதை 15 நொடிகளுக்கு செய்திருப்பார். இது என்ன என்பது குறித்து ஆரம்பத்தில் பலரும் குழம்பி போயினர். ஆனால், இதற்கு பின்னால் மருத்துவ பின்னணி உள்ளது என்பது பலருக்கு தெரியாது. 



கிரையோ தெரபி என்றால் என்ன? 


கிரையோ தெரபி எனப்படுவது, தசையில் ஏற்படும் பிரச்சனைகளை நீக்கும் ஒரு சிகிச்சையாகும். இந்த சிகிச்சையை கடுமையான குளிரில் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் நமது உடலில் உள்ள திசுக்களில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனையை அது நிவரத்தி செய்யும். 


மேலும் படிக்க | கோடையில் ஹீட் ஸ்ட்ரோக்கைத் தவிர்க்க சிறந்த வழி..! அமிர்த பானத்தை பருகுங்கள் - பிபி குறையும்


கிரையோ தெரிபியை யார் யார் மேற்கொள்ளலாம்?


குளிரில் நடுங்க வைக்கும் இந்த கிரையோ தெரபி சிகிச்சை முறையை விளையாட்டு வீரர்கள், நீண்ட தூரம் பயணம் செய்து வேலைக்கு செல்பவர்கள், தினசரி வாழ்வில் அதிக உடல் உழைப்பை போடுபவர்கள் என பலரும் மேற்கொள்வதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. கிரையோ தெரபியை புற்றுநோய் உள்ளவர்களுக்கும் உபயோகிப்பதாக சில மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 


கிரையோ தெரபியை எப்படி மேற்கொள்ள வேண்டும்?


இந்த வகையான குளிரில் நடுங்க வைக்கும் சிகிச்சை முறையை, குளத்தில் மூழ்கி மட்டும்தான் மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. குளிக்கும் போது 15 டிகிரிக்கு கீழுள்ள தண்ணீரை பயன்படுத்தி 30 நொடிகள் முதல் 3 நிமிடங்கள் வரை குளிக்கலாம். வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்தாலும் கடைசியாக தண்ணீரை உடம்பில் ஊற்றுகையில் குளிர்ந்த நீரை ஊற்றிக்கொள்ளலாம். 


கிரையோ தெரபி முறையின் பயன்கள் என்னென்ன?


இந்த வகையான தெரபி முறைகளை பின்பற்றுகையில் உங்கள் உடல உங்களை அறியாமலேயே சர்வைவல் மோட் (உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்) எனப்படும் ஒருவித பயத்திற்குள் போய் விடும். இதனால், உங்களது இரத்த ஓட்டம் அதிகமாகி உடலில் தேவைப்படும் இடத்திற்கெல்லாம் சீறான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். 


இந்த கிரையோ தெரபி முறையை, தினமும் வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்த பிறகு பின்பற்றினால் காலமாற்றத்தினால் வரும் காய்ச்சலையும், தொற்று நோய்களையும் தவிர்க்க முடியும். உங்கள் உடலில் உள்ள தசைகளில் ஏற்படும் வலியை குறைக்கவும் கிரையோ தெரபி முறை உதவுகிறது. 


கவலையை போக்குமா?


நமக்கு ஏற்படும் மனசோர்வு, பதற்றம் மற்றும மன அழுத்தத்தையும் கிரையோ தெரபி நிவர்த்தி செய்யும் என சில ஆராய்ச்சிகள் கூறுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சில நரம்பு பிரச்சனைகளை சீர் செய்யும் சக்தியும் கிரையோ தெரபிக்கு உள்ளது. 


மேலும் படிக்க | சுகர் இருக்கா, உங்க உடல் எடை கூடாம இருக்க இதை மட்டும் பண்ணுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ