Weight Loss Tips: நமது சமையலறைகளில் நாம் பல வித மசாலா பொருட்களை பயன்படுத்துகிறோம். இவை உணவின் சுவையையும் மணத்தையும் அதிகரிப்பதோடு பல வித ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றன. அப்படிப்பட்ட மசாலாக்களில் கிராம்பும் ஒன்று. கிராம்பில் வைட்டமின்கள், நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, கார்போஹைட்ரேட் ஆகியவை உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல வித உணவுப்பொருட்களில் கிராம்பை நாம் பயன்படுத்துகிறோம். இதில் உள்ள லேசான இனிப்பு மற்றும் காரத்தன்மை உணவிற்கு வித்தியாசமான மணம் மற்றும் ருசியை அளிக்கின்றது. கிராம்பில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. பலரை பாடாய் படுத்தும் உடல் பருமனுக்கும் இதன் மூலம் தீர்வு கிடைக்கும் என பல ஆரோக்கிய நிபுணர்கள் கூறுகிறார்கள். கிராம்பில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் பண்புகள் உள்ளன. ஆகையால் இவை தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைத்து உடல் எடையை குறைப்பதில் பெரிய வழியில் உதவுகின்றன. 


கிராம்பில்  உடல் பருமனை குறைக்கும் முக்கிய பண்புகள் அதிகம் உள்ளன. உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகளில் கிராம்பை பயன்படுத்தலாம். அந்த வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.


கிராம்பைக் கொண்டு உடல் எடையை குறைக்கும் முறைகளை பற்றி இங்கே காணலாம்


கிராம்பு தண்ணீர் (Clove Water)


ஒரு கிளாஸ் தண்ணீரில் 4-5 கிராம்புகளை போட்டு இந்த தண்ணீரை இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் இந்த தண்ணீரை குடிக்க வேண்டும். இப்படி செய்தால், வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும். மேலும் இதனால் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும். இந்த நீரை தினமும் குடித்து வந்தால், எளிதாக உடல் எடையை குறைக்கலாம் (Weight Loss). கிராம்பு நீர் உங்கள் உடல் கொழுப்பைக் குறைக்க உதவியாக இருக்கும். 


கிராம்பு தேநீர் (Clove Tea)


உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கிராம்பு டீ செய்து அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும். சில கிராம்புகளை தண்ணீரில் போட்டு அடுப்பில் வைத்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். கொதிக்க வைத்த தண்ணீரை வடிகட்டி குடிக்கவும். இந்த கிராம்பு டீயை குடிப்பதால் செரிமான பிரச்சனைகள் குறையும். இதன் விளைவாக, தொப்பை கொழுப்பு கரைந்து, கலோரிகள் எரிந்து உடல் எடை குறையும். 


மேலும் படிக்க | காலையில் இந்த பானங்களை குடித்தால் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கலாம்!


கிராம்பு பொடி (Clove Powder)


கிராம்பை பொடியாகவும் செய்து உட்கொள்ளலாம். கிராம்பை பொடி செய்து வைத்துக்கொண்டு அதை டீயில் கலந்து குடிக்கலாம். மேலும் பல வகையான உணவுகளிலும் இந்த பொடியை சேர்த்து உட்கொள்ளலாம். கிராம்பு சேர்க்கப்பட்ட மசாலா தூள், சூப், காய்கறி பொரியல், பிரியாணி, தயிர் பச்சடி, புலாவ் ஆகியவற்றில் இந்த பொடியை பயன்படுத்தலாம்.   


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | நாள் முழுவதும் ஆற்றலை அள்ளிக் கொடுக்கும்... சில 'சூப்பர்' உணவுகள்...!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ