Guava Fruits For Rapid Weight Loss: உடல் பருமன் என்பது இந்நாட்களில் மிகவும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. தவறான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் போன்ற காரணங்களால் பெரும்பாலானோர் உடல் பருமனை எதிர்கொள்கின்றனர். உடல் பருமன் அல்லது அதிகரித்த எடை ஒரு நபரின் முழு ஆளுமையையும் கெடுத்துவிடுகிறது. இதனால், பலரது தன்னம்பிக்கையும் நிலைகுலைந்து விடுகிறது. இது மட்டுமல்லாமல் உடல் எடை அதிகரிப்பதால் பல வித நோய்களும் உடலை ஆட்கொள்ளக்கூடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எடையைக் குறைக்கும் பழம்: பழங்கள் ஊட்டச்சத்துக் களஞ்சியமாகும். இவற்றை உண்பதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. தினமும் பழங்களை உட்கொள்வதால் பல வகையான பிரச்சனைகள் உடலில் இருந்து விலக்கி இருக்கின்றன. பழங்களில் இயற்கையாகவே கலோரிகள் குறைவாக இருப்பதால், எடையைக் கட்டுப்படுத்த (Weight Loss) இவை பெரிய அளவில் உதவுகின்றன. பல வித ஆரோக்கிய நன்மைகள் இருக்கும் பழங்களில் கொய்யாவும் ஒன்று. இதை உட்கொள்வதால் பல நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம். இவற்றை தினமும் உட்கொள்வதன் மூலம் உடல் எடையும் வேகமாக குறையும். இந்த பழம் குளிர்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழம் என்பதால் இந்த காலத்தில் இதை உட்கொண்டால் இதனால் கிடைக்கும் பலன்களும் அதிகமாக இருக்கும். தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைத்து உடல் எடையை குறைக்க கொய்யா எவ்வாறு உதவுகிறது என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம். 
 
குறைந்த கலோரி


கொய்யா உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும். இதை சாப்பிடுவதால் வயிறு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வுடன் இருக்கும். இதில் மிகக் குறைவான கலோரிகளே காணப்படுகின்றன. ஒரு கொய்யாவில் 37-55 கலோரிகள் மட்டுமே உள்ளன. இவற்றில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவில் உள்ளன. ஆகையால் உடல் எடையை குறைக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


மேலும் படிக்க |  Gout Health: குளிர்காலத்தில் வேகமெடுக்கும் யூரிக் அமில பிரச்சனைகள்! கட்டுப்படுத்த 5 வழிகள்


புரதம் நிறைந்தது


கொய்யாவில் (Guava) புரதச்சத்து அதிகம் உள்ளது. புரதம் மற்றும் நார்ச்சத்து இரண்டும் ஜீரணிக்க நீண்ட நேரம் எடுக்கும். இதனால் நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும். கொய்யாவில் அதிக நார்ச்சத்து உள்ளது, இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். 100 கிராம் கொய்யாவில் 5.4 கிராம் நார்ச்சத்து உள்ளது, இது எடையைக் குறைக்க உதவுகிறது.
 
இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் குறைக்க உதவும்


கொய்யா குறைந்த ஜிஐ கொண்ட பழம். இது எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இரத்த சர்க்கரையை அதிகரிக்க அனுமதிக்காது. மேலும் இந்த பழம் ஹார்மோன்களின் சமநிலையை பராமரிக்கும். இது நீரிழிவு நோயாளிகள் மற்றும் அதிக எடை கொண்டவர்களுக்கு நல்லது. கொலஸ்ட்ராலும் இதில் மிகக் குறைவாகக் காணப்படுவதால், உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது ஏற்ற பழமாக இருக்கும். 
 
வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருக்கும்


கொய்யாவில் உள்ள குணங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்க உதவுகின்றன. இது உடல் கொழுப்பை குறைக்கும். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், கொய்யாவை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். அதிகரித்து வரும் உடல் எடையை கட்டுப்படுத்த கொய்யா ஒரு சிறந்த தேர்வாக கருதப்படுகிறது. எனினும், நாள்பட்ட நோய் உள்ளவர்கள் இதை உட்கொள்ளும் முன் மருத்துவரை அணுகவும்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கொழுப்பை எரிக்க... புரதம் நிறைந்த ‘சூப்பர்’ சைவ உணவுகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ