மாதவிடாயின் போது கண்களிலிருந்து இரத்தப்போக்கா? பதற வைக்கும் அரிய வகை நோய்!!
டாக்டர்கள் இதைப் பற்றி மேலும் பரிசோதித்தபோது, அவர்கள் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை கண்டறிந்தனர். இரண்டு முறை அந்த பெண்ணிற்கு இப்படி ஏற்பட்டபோதும், அவருக்கு மாதவிடாய் இருந்தது கண்டறியப்பட்டது.
சண்டிகர்: ஒரு அரிய வகை உடல் கோளாறு மருத்துவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. ஒரு பெண் தனது கண்களில் இருந்து இரத்தப்போக்கு ஏற்பட்டதாக புகார் கூறினார். ஆம், வினோதமாக இருந்தாலும், இது உண்மைதான்!! 25 வயதான, திருமணமான பெண் ஒருவர் சமீபத்தில் சண்டிகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவசர பிரிவிற்கு சென்றார். அவரது கண்களில் இருந்து இரத்தம் வந்ததாக அவர் புகார் அளித்தார். ஆனால், அதிசயமாக அவருக்கு எந்த வித வலியோ அசௌகரியமோ ஏற்படவில்லை. ஒரு மாதம் முன்னரும் தனக்கு இப்படி நடந்ததாக அவர் மருத்துவர்களிடம் கூறினார்.
அவரது கண்களில் (Eyes) ஏற்பட்ட இரத்தப்போக்குக்கான காரணத்தை தெரிந்துகொள்ள அவர் பலவிதமான சோதனைகளை மேற்கொண்டார். ஆனால் அனைத்து சோதனை முடிவுகளும் இயல்பாகவே இருந்தன. அவருக்கு கண்களில் எந்த காயங்களும் ஏற்படவில்லை, அவரது குடும்பத்திலும் இது மாதிரியான நிலை யாருக்கும் வந்ததில்லை. அவருக்கு இதற்கு முன்னர் கண்களில் எந்த வித பிரச்சனையும் ஏற்பட்டதும் இல்லை. இப்படி இருக்க, அவர் கண்களில் இரத்தப்போக்கு ஏற்பட என்ன காரணம்?
டாக்டர்கள் இதைப் பற்றி மேலும் பரிசோதித்தபோது, அவர்கள் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை கண்டறிந்தனர். இரண்டு முறை அந்த பெண்ணிற்கு இப்படி ஏற்பட்டபோதும், அவருக்கு மாதவிடாய் (menstruation) இருந்தது கண்டறியப்பட்டது. மற்ற அனைத்து காரணங்களும் வலுவற்று போகவே, அந்த பெண்ணிற்கு ஆக்யூலர் விகாரியஸ் மாதவிடாய் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டது (ocular vicarious menstruation).
ALSO READ: X-ray கொடுத்த ஷாக்... பிறப்பில் தான் ஆண் என்பதை அறிந்த மணமான பெண் அதிர்ச்சி..!!
Ocular Vicarious Menstruation என்றால் என்ன?
மெடிஸியின் படி, இது மிகவும் அரிதான ஒரு மருத்துவ நிலையாகும். இந்த நிலையில் மாதவிடாயின் போது வெளிப்புற உறுப்புகளில் சுழற்சி இரத்தப்போக்கு ஏற்படும் என்று கூறப்படுகிறது. உதடுகள், கண்கள், நுரையீரல் மற்றும் வயிறு மற்றும் பொதுவாக மூக்கு ஆகியவற்றிலிருந்து இரத்தப்போக்கு ஏற்படலாம்.
இந்த பெண்ணிற்கு இப்படிப்பட்ட அரிய நிலை இருப்பது கண்டறியப்பட்ட பின்னர், அவரது வழக்கு பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் சுட்டிக்காட்டப்பட்டது, அதில் மாதவிடாயின் போது ஏற்படும் ஹார்மோன் (Horomone) மாற்றங்கள் இந்த உறுப்புகளில் 'வாஸ்குலர் ஊடுருவலை' எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஆய்வாளர்கள் விளக்கினர். இதனால் இரத்தப்போக்கு ஏற்படுகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"வெளிப்புற இடங்களில், எண்டோமெட்ரியல் திசு இருந்தாலோ அல்லது இல்லாதிருந்தாலோ, ஹார்மோன்களுக்கு வாஸ்குலேச்சரின் தாக்கம் காரணமாக ஏற்படும் மாற்றம் விகாரியஸ் மாதவிடாய் என்று கருதப்படுகிறது. இருப்பினும் அதன் சரியான நோயியல் இயற்பியல் இன்னும் முழுமையாக தெளிவாக இல்லை. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் நுண்குழாய்களின் ஊடுருவலை அதிகரிக்கும். இதன் விளைவாக ஹைபர்மீமியா, நெரிசல் மற்றும் எக்ஸ்ட்ராடூரின் திசுக்களில் இருந்து இரண்டாம் நிலை இரத்தப்போக்கு ஏற்படுகிறது” என்று ஆய்வு குறிப்பிடுகிறது.
சிகிச்சை
அந்த பெண் நோயாளிக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் கலவையை உள்ளடக்கிய வாய்வழி கருத்தடை மாத்திரைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. மூன்று மாத பின்தொடர்தலுக்குப் பிறகு, தனக்கு சிகிச்சைக்குப் பிறகு, கண்களில் இரத்தப்போக்கு ஏற்படவில்லை என்று அந்த பெண் குறிப்பிட்டார்.
ALSO READ: வேக வைத்த முட்டை சாப்பிட்ட பின் சாப்பிடவே கூடாத உணவுகள் எது தெரியுமா..!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR