கண்ணுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் அழகைத் தரும் ராஸ்பெர்ரியின் ஆரோக்கிய நன்மைகள்
Fruits for Health: ராஸ்பெர்ரிகளை தினமும் உட்கொள்வதால் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தேவையான அளவு கிடைக்கும்
ஊட்டச்சத்துக்கள் கொண்ட பழங்கள், நமது ஆரோக்கியத்திற்கு அடிப்படையானவை. அவற்றில் பெர்ரி பழங்கள் மிகவும் நல்லவை. அதிலும், ராஸ்பெர்ரி மூளையின் செயல்பாட்டிற்கு நல்லது ஆகும். அறிவாற்றல் குறைவைத் தடுக்கவும் மற்றும் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் இதில் அதிகளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. ராஸ்பெர்ரியில் இயற்கையான சாலிசிலேட் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஸ்பெர்ரியின் சத்துக்கள்
ராஸ்பெர்ரி நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி, கே, ஈ மற்றும் பி காம்ப்ளக்ஸ் ஆகியவற்றில் நிறைந்துள்ளது. ஆரோக்கியத்திற்கும் எலும்பு ஆரோக்கியத்திற்கும் அவசியமான தாதுக்கள் மற்றும் மெக்னீசியம், தாமிரம் மற்றும் இரும்பு கொண்ட ராஸ்பெர்ரியில் நார்ச்சத்தும் நிரைந்துள்ளது.
மருத்துவ குணங்கள்
ராஸ்பெர்ரியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கலாம். அதோடு, இதய ஆரோக்கியம் மற்றும் இரத்த அழுத்தத்தை மேம்படுத்தும் அருமையான பழம் இது.
மேலும் படிக்க | Prune For Health: அனீமியா, செரிமானக் கோளாறுகளை போக்கும் கொடிமுந்திரி!
ராஸ்பெர்ரி சுவை
புளிப்புத் தொனியுடன் கூடிய இனிப்பு சுவை கொண்ட ராஸ்பெர்ரி நான்கு வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது: சிவப்பு, கருப்பு, ஊதா மற்றும் தங்கம். சிவப்பு ராஸ்பெர்ரி பொதுவாக ஜூன் முதல் அக்டோபர் வரை கிடைக்கும்
நீரிழிவு மேலாண்மை
பெரும்பாலான பழங்களை விட அதிக நார்ச்சத்து கொண்ட ராஸ்பெர்ரியில் பிற பழங்களுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவான சர்க்கரை உள்ளது. எனவே இந்த பழத்தை உண்டால் சர்க்கரை அளவு உடனடியாக அதிகரிக்காது.
நோய் தடுப்பு
ராஸ்பெர்ரியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன, அவை செல்களை ஃப்ரீ ரேடிக்கல்களால் சேதப்படுத்தாமல் பாதுகாக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை உறுதிப்படுத்துகின்றன. கருப்பு ராஸ்பெர்ரி அதிக ஆக்ஸிஜனேற்றத்தை வழங்குகிறது,
வைட்டமின் சி
ராஸ்பெர்ரியில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது, இது கொலாஜன் உற்பத்திக்கு இன்றியமையாதது. இது சூரிய ஒளியில் இருந்து சருமத்திற்கு ஏற்படும் சேதத்தைத் தடுக்கவும் சரிசெய்யவும் உதவும்.
மேலும் படிக்க | எலும்பு முறிவுக்கு காரணமாகும் ஹைபர்கால்சீமியா! இந்த அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கை
ராஸ்பெர்ரிகளை தினமும் உட்கொள்வதால் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தேவையான அளவு கிடைக்கும். குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட ராஸ்பெர்ரி, செரிமான செயல்முறை மற்றும் குடல் இயக்கங்களுக்கு உதவுகிறது.
ஆனா, ராஸ்பெர்ரி எல்லா பருவத்திலும் கிடைப்பதில்லை என்பதால், உறைய வைத்த ராஸ்பெர்ரிகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | அதிக கால்சியமும் ஆபத்து தான்! தமனிகளில் கால்சியம் படிந்தால் என்ன ஆகும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ