கால்சியம் மனித உடலில் இயற்கையாகவே உள்ளது மற்றும் பெரும்பாலும் பற்கள் மற்றும் எலும்புகளில் காணப்படுகிறது. தமனிகளில் கால்சியம் படிவுகள் ஏன் ஏற்படுகின்றன என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தமனிகளில் கால்சியம் படிவுகள் ஏற்பட்டால், இரத்த நாளங்கள் செயல்படுவது சிக்கலாகிறது. உண்ணும் உணவு தமனிகளில் கால்சியம் படிவுகளின் அளவைக் குறைக்கலாம் என்றாலும், வயது, மரபணு வரலாறு மற்றும் பிற ஆபத்து காரணிகளுக்கும் கால்சியம் தமனியில் படிவதற்கும் தொடர்பு உண்டு.
மனிகளில் கால்சியம் படிவுகளை சமாளிப்பது எளிது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றன. கரோனரி கால்சிஃபிகேஷன் சிகிச்சையில், உங்கள் தமனிகளில் கால்சியம் குவிவதை மெதுவாக்கலாம். இதன் மூலம் இருதய இரத்த ஓட்டத்தை அதிகரிக்க முடியும். தமனிகளில் கால்சியம் படிவுகளை அகற்றுவதற்கான சில சிறந்த வழிகளைப் பார்ப்போம்.
வாழ்க்கை முறையை மாற்றவும்
உங்கள் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் தமனிகளில் கால்சியம் படிவுகளை ஏற்படுத்துகிறது. அது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உங்கள் தமனிகளில் கால்சியம் படிவுகளின் அளவைத் தடுக்கவும் மெதுவாகவும் நீங்கள் செய்யக்கூடிய குறிப்பிட்ட வாழ்க்கை முறை மாற்றங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:
மேலும் படிக்க | Health Tips: உடலுக்கு ஆக்ஸிஜனை அள்ளி வழங்கும் 'சில' பழங்கள்!
இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகளை உண்ண வேண்டும். கொழுப்பு மற்றும் சோடியம் உட்கொள்ளலை கட்டுப்படுத்துங்கள்
புகைபிடிப்பதை நிறுத்துங்கள்
ஆல்கஹால் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துங்கள்
உடற்பயிற்சி மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பராமரிக்கவும்
உடல் எடையை பராமரிக்கவும்
அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை போதுமான அளவு உட்கொள்ளவும்
உங்கள் தமனிகளில் கால்சியம் படிவதை குறைக்க உதவும் சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அவற்றை அதிக அளவு உட்கொள்வதால் இயற்கையாகவே கால்சியம் கட்டமைப்பு சீராகும்.
வைட்டமின் K2
வைட்டமின் K2 அதிகப்படியான கால்சியத்தை உங்கள் தமனிகளில் குறைத்துவிடும். வைட்டமின் K2 உங்கள் மூட்டு மற்றும் தமனிகள் போன்ற இடங்களில் இருந்து கால்சியத்தை அகற்றி எலும்புகள் மற்றும் பற்களுக்கு நகர்த்தும். MK7, K2 சீஸ், கோழி, முட்டையின் மஞ்சள் கரு, சார்க்ராட் மற்றும் மாட்டிறைச்சி கல்லீரல் உள்ளிட்ட உணவுகளில் இயற்கையாகவே காணப்படுகிறது.
மேலும் படிக்க | Health Tips: உடலுக்கு ஆக்ஸிஜனை அள்ளி வழங்கும் 'சில' பழங்கள்!
கால்சியம் அதிகமாக உள்ள உணவுகள்
பச்சை காய்கறிகள், பாதாம் உட்பட பல உலர் பழங்கள், வாழைப்பழம், முட்டை, எள் என பல உணவுகளில் கால்சியம் உள்ளது. ஹைபர்கால்சீமியா ஏற்பட்டால், உணவு உட்கொள்வதில் மருத்துவர்களின் பரிந்துரையை கடைபிடிப்பது அவசியம் ஆகும். கால்சியம் தமனிகளில் படியும் பிரச்சனை உள்ளவர்கள் கால்சியம் கொண்ட உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.
வைட்டமின் D3
வைட்டமின் டி 3 (கோல்கால்சிஃபெரால், cholecalciferol) என்பது உங்கள் உடல் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவும் ஒரு வைட்டமின் ஆகும். இந்த வைட்டமின் வைட்டமின் K2 உடன் இணைந்து உங்கள் தமனிகளில் இருந்து கால்சியம் படிவுகளை இழுக்க உதவுகிறது. சால்மன் மற்றும் மத்தி உள்ளிட்ட மீன் வகைகளில் வைட்டமின் டி 3 உள்ளது.
முட்டை மற்றும் மாட்டிறைச்சி கல்லீரலிலும் காணப்படுகிறது. இருப்பினும் அதிகப்படியான வைட்டமின் டி எடுத்துக் கொள்வதும் பிரச்சனை தான். எனவே, வைட்டமின் டி, 25-OH அளவைச் சரிபார்க்க வேண்டியது அவசியம்.
மெக்னீசிய சத்து
உங்கள் உடலில் அதிகப்படியான கால்சியம் இருந்தால் மெக்னீசியம் சத்துக்கள் கொண்ட உணவை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகுக்ம். ஏனெனில் இது உங்கள் உடலில் கால்சியம் கட்டமைப்பை சமப்படுத்த உதவுகிறது. உங்கள் உடலில் மெக்னீசியத்தை அதிகரித்தால், கால்சியம் அளவு தானாகவே குறைகிறது. சியா விதைகள், பாதாம், வேர்க்கடலை, பூசணி விதைகள் மற்றும் முந்திரி உள்ளிட்ட மெக்னீசியம் நிறைந்த உணவுகளில் மெக்னீசியம் சத்து நிறைந்துள்ளது.
மேலும் படிக்க | எலும்பு முறிவுக்கு காரணமாகும் ஹைபர்கால்சீமியா! இந்த அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ