கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில் மாங்காய் சீசனும் ஆரம்பித்துவிட்டது. மாங்காய்களில் பல வகைகள் உண்டு. அல்போன்சா, அம்ரபாலி, பங்கன பள்ளி, ருமானி உள்ளிட்ட மாம்பழங்கள் ருசி அதிகமாக இருக்கும் என்பதால் மக்களால் அதிகம் விரும்பி சாப்பிடப்படுகின்றன. கோடை காலங்களில் பொதுவாக வீடுகளில் இருக்கும் போது மாங்காயில் உப்பு, மிளகாய் போட்டு சாப்பிடும் பழக்கம் பரவலாக இருக்கிறது. இந்த நேரத்தில் விதவிமான ரெசிப்பிக்களும் மாங்காய் வைத்து செய்வார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் ஆரோக்கிய நன்மைகளும் கொட்டிக்கிடக்கின்றன. அந்தவகையில் மாங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்வோம். 


1. சர்க்கரை அளவு குறைவு


மற்றைய பழங்களுடன் ஒப்பிடும் போது மாங்காயில் சர்க்கரை அதிகம் குறைவாக தான் இருக்கிறது. இதனால் சர்க்கரை வியாதியுள்ளவர்கள் பச்சை மாங்காயை பயம் இல்லாமல் எடுத்து கொள்ளலாம். மேலும் இரத்தயோட்டத்தையும் சீர்படுத்துகிறது.


மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா? அதற்கு கண்டிப்பாக இந்த டயட்டை கடைபிடியுங்கள்


2. இதய நோய்


பச்சை மாங்காயில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது. இது சீரான ரத்த ஓட்டம் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றன.


மேலும் இதயத்திற்கு நன்மையளிக்கும் ஆன்டிஆக்ஸிடன்டான மாங்கிஃபெரின் (Mangiferin) மாங்காயில் ஏராளமாக உள்ளது. இதனால் மனழுத்தமும் குறையும்.


3. ஜீரண பிரச்சினை


மாங்காய்களில் இயல்பாக செரிமானத்திற்கு தேவையான amylases எனப்படும் செரிமான நொதிகள் இருக்கிறது. மேலும் amylases என்சைம்கள் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ்களை மால்டோஸ் மற்றும் குளுக்கோஸ் போன்ற சர்க்கரைகளாகவும் மாற்றுவதற்கு உதவியாக இருக்கிறது.


4. கொலஸ்ட்ரால் கன்ட்ரோல்


நமது உடலில் இலகுவில் நச்சு தன்மைகள் அதிகம் இருக்கிறது. இதனை பச்சை மாங்காய்கள் நீக்குகிறது. மேலும் இந்த மாங்காய்கள் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தி கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதனால் பல உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து இலகுவில் விடுபடலாம்.


5. எடை குறைப்பு


எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் பச்சை மாங்காய் சாப்பிடுவது சிறந்தது. ஏனெனின் மாங்காய்களில் ஃபேட், கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை குறைவாக இருக்கிறது. இதிலிருக்கும் சில ஊட்டசத்துக்கள் செரிமானத்தை சீர்படுத்தி எடையை கட்டுக்குள் வைக்கிறது.


இதேபோன்று மாங்காயில் மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து சாப்பிடுவது என்பது மேற்கூறியவற்றுக்கு உதவியாக இருக்கலாம். ஆனால் உடல்நல பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவர்களை ஆலோசனை செய்து மாங்காயுடன் உப்பு மிளகாய் சேர்த்துக் கொள்வது சிறந்தது.


( இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் பொதுவான தகவல்கள். உங்கள் உடல் நலத்துக்கு ஏற்ப மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்)


மேலும் படிக்க | நரை முடி கருமையாக வளர இதை மட்டும் செய்தால் போதும், உடனே ட்ரை பண்ணுங்க 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ