Back Pain Reasons In Tamil: உலகளவில் பலர் முதுகுவலியால் அவதிப்படுவதாக சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இந்த வலிகள் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. தசைப்பிடிப்பு, அடிப்பட்ட காரணம் என இதற்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இடுப்பின் கீழ் பகுதியை தீர்ப்பதற்கு பல வழிகள் உள்ளன. ரெஸ்ட் எடுப்பது, சூடாக அல்லது குளிர்ச்சியாக எதையேனும் வைத்து ஒத்தடம் கொடுப்பது ஆகியவை அந்த வழிமுறைகளில் ஒன்றாகும். இதற்காக சில உடற்பயிற்சிகளும், சிகிச்சை முறைகளும் கூட உள்ளன. ஒரு சில நிலைகளுக்கு அறுவை சிகிச்சைகளும் உள்ளன. இது போன்ற முதுகு வலிகள் ஏற்படுவதற்கான காரணங்களையும், அவற்றை தீர்க்க என்ன முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்பதையும் இங்கு பார்ப்போம். 


இடுப்பு வலி குறித்து பேசும் மருத்துவர்கள், இது போன்ற வலிகள் மிகவும் சாதாரணமானவை என்றும் பலருக்கு, அவர்களின் வாழ்வில் பல்வேறு கட்டங்களில் இந்த வலி ஏற்படலாம் என்றும் கூறுகின்றனர். 


இடுப்பு வலி ஏற்படுவதற்கான காரணங்கள்:


சுளுக்கு:


இடுப்பு வலி ஏற்படுவதற்கு பொதுவான காரணங்களுள் ஒன்றாக கூறப்படுவது, சுளுக்கு. எடை அதிகமுள்ள பொருளை தூக்குவதானால், தசைகளுக்கு அதிக அழுத்தம் கொடுத்து செய்யும் விஷயங்கள், அதிகப்படியாக இடுப்பிற்கு வேலை கொடுப்பது போன்ற விஷயங்களால் சுளுக்கு ஏற்படும். 


மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அதிகமானால்... இந்த அறிகுறிகள் தோன்றும், அலட்சியப்படுத்தாதீர்கள்


கீல்வாதம்:


இதனை ஆங்கிலத்தில் artritis என்று அழைக்கின்றனர். இது, அன்றாட பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படும் முதுகெலும்பு பகுதியில் அடிபடுவதால், சதை கிழிவதால் இந்த கீல்வாதம் ஏற்படும். 


கீழ் முதுகு-டிஸ்க் பிரச்சனை:


குடலிறக்கத்தில் இருக்கும் வட்டுப்பகுதியினை டிஸ்க் என்று குறிப்பிடுவர். இந்த பகுதியில் இருக்கும் ஜெல் போன்ற பகுதி வெளியில் வரும், இதனால் அருகில் உள்ள நரம்பு பகுதிகளை இது தொந்தரவு செய்யலாம். இதனால் முதுகு முதல் காலின் கீழ் பகுதி வரை வலி ஏற்படலாம். 


முதுகுத்தண்டு குறுக்கில் பிரச்சனை:


முதுகு எலும்பு இருக்கும் கால்வாய் போன்ற பகுதியில் இருக்கும் நரம்புகளில் அழுத்தம் ஏற்படும். அப்போது வலி, உணர்த்திரன் இல்லாமை, பலவீனமாய் இருத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். 


ஸ்கோலியோசிஸ்:


முதுகெலும்பின் அசாதாரண வளைவு வட்டுகள் மற்றும் மூட்டுகளில் சீரற்ற அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இது முதுகு வலிக்கு வழிவகுக்கும், குறிப்பாக ஸ்கோலியோசிஸ் சிதைவு காரணங்களால் ஏற்படும் போது இந்த வலி ஏற்படும். 


அடிபடுதல்:


எங்கிருந்தாவது கீழே விழுவது, சாலை விபத்து, பிறாடிகள் போன்றவற்றால் முதுகுப்பகுதியில் சிதைவு ஏற்படலாம். இதுவும், முதுகு வலி அல்லது பின்பகுதி வலிக்கு காரணமாக இருக்கலாம். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)


மேலும் படிக்க | ஈறுகளில் பயங்கர வலியா? ‘இந்த’ வீட்டு வைத்தியங்களை வைத்து சரி செய்து கொள்ளலாம்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ