Sevvalai Benefits : வாழப்பழத்தின் பிற ரகங்களைவிட, சிவப்பு வாழைப்பழம் ருசியானது. செவ்வாழை சாப்பிட மட்டும் சுவையாக இருப்பதில்லை, அது ஆரோக்கியத்திற்கும் பயனுள்ள பழம் ஆகும். சாதாரண வாழைப்பழத்தை விட செவ்வாழையில் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. தமனிகளில் இரத்தம் உறைவதைத் தடுக்ம் பீட்டா கரோட்டின், புற்றுநோய் மற்றும் இதயம் தொடர்பான நோய்களையும் தடுக்க உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாழையில் பொட்டாசியம் அதிகமாகக் காணப்படுகிறது. சிவப்பு நிறத்தில் இருக்கும் செவ்வாழையை தினமும் உண்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். நாள்பட்ட நோய்களில் இருந்து நிவாரணம் கொடுக்கும் செவ்வாழையின் முக்கிய பண்புகளைத் தெரிந்து கொள்வோம்.


சிவப்பு நிற வாழைப்பழமான செவ்வாழையில் பொட்டாசியம், பீட்டா கரோட்டின், வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதயத்திற்கு இரத்த விநியோகத்தை மேம்படுத்துவதில் செவ்வாழை முக்கிய பங்கு வகிக்கிறது.


மேலும் படிக்க | எவ்வளவு அழகா இருந்தாலும் சாப்பிடமாட்டேன் போ! கத்தரிக்காயுடன் ஊடல் கொள்ளும் நோய்கள்!


உணவு சாப்பிட்ட பிறகு வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது நமது பாரம்பரியமான வழக்கம். வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் செரிமானம் மேம்படும். வயிற்றில் பிரச்சனைகள் ஏற்படாமல் காக்கும்.


பண்புகள் கடுமையான நோய்களையும்  குணப்படுத்தும் செவ்வாழையின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.


பொட்டாசியம், பீட்டா கரோட்டின், வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளதால், செவ்வாழையை தினமும் உட்கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். 


மேலும் படிக்க | ஆரோக்கியமாக வாழ யாருக்குத் தான் ஆசையில்லை? தவிர்க்க வேண்டிய ஆபத்தான உணவுகள்!


உடல்நலக் கோளாறுகளை நீக்கும் செவ்வாழை, கண்களின் பார்வைத் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.


பல்வலி பிரச்சனைகளைப் போக்கும் பொட்டாசியம் நிறைந்துள்ளதால், பல்வலிக்காரர்கள், தினசரி இதனை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்தத்துடன் இதயத்திற்கு இரத்த விநியோகத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் செவ்வாழை உடலுக்கு உடனடியாக ஆற்றலை வழங்குகிறது.
 
கருவுற்றிருக்கும் பெண்களுக்கு செவ்வாழை ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். தினமும் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.


உடலில் உள்ள வெப்பத்தை குறைக்கும் செவ்வாழை, நரம்புத் தளர்ச்சியால் அவதிப்படுபவர்களுக்கும் நிவாரணம் கொடுக்கும். இவற்றைத் தவிர, செவ்வாழையை தொடர்ந்து உண்டு வருவதால் செரிமானம் மேம்படும். மலச்சிக்கல் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.  


(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த  பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கிட்னி பிரச்சனை இருக்கா... இந்த உணவுகளுக்கு NO சொல்லுங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ