எவ்வளவு அழகா இருந்தாலும் சாப்பிடமாட்டேன் போ! கத்தரிக்காயுடன் ஊடல் கொள்ளும் நோய்கள்!

Caution To Eat Brinjal: கத்தரிக்காய் இந்திய சமையலில் முக்கியமானதாக இருந்தாலும், சிலருக்கு மிகவும் மோசமான விளைவுகளைத் தரும். யாரெல்லாம் கத்தரிக்காயை உண்ணக்கூடாது?  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 17, 2024, 10:24 PM IST
  • மூட்டுவலி நோயாளிகளுக்கு கத்தரிக்காய் எச்சரிக்கை
  • சிறுநீரக கற்கள் உருவாவதற்கு காரணமாகும் கத்தரி

    பைல்ஸ் நோயாளிகள் கத்தரிக்காயை தவிர்க்கவும்
எவ்வளவு அழகா இருந்தாலும் சாப்பிடமாட்டேன் போ! கத்தரிக்காயுடன் ஊடல் கொள்ளும் நோய்கள்! title=

கத்தரிக்காயில் பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன, பலருக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காய், சிலருக்கு மட்டும் எதிரியாக மாறுகிறது. இந்திய சமையலில் முக்கிய இடம் பிடித்திருக்கும் கத்தரிக்காய், நமது  அன்றாட உணவில் ஒன்றாகிவிட்டது. கத்தரியின் நிறமும், மணமும், சுவையும் அனைவருக்கும் பிடித்தமானதாக இருந்தாலும், அதன் ஊட்டச்சத்துக்கள், மருத்துவர்களையும் அசர வைப்பவை.

அதனால் தான், கத்தரிக்காயில் காணப்படும் பல்வேறு ஊட்டச்சத்துக்களை பெறுவதற்காக குறைந்தபட்சம் வாரத்தில் 2 நாட்களாகவது சாப்பிட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். போட்டோ நியூட்ரியெண்ட்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் 
புற்றுநோய் வராமல் காக்கும் கத்தரிக்காயில் வைட்டமின் ‘பி’ போதுமான அளவில் உள்ளது. இது இதய நோய்கள் வருவதைத் தடுக்கும்.

கருநீலம், இளம்பச்சை, வெண்மை என பல நிறங்களில் கத்தரிக்காய் விளைகிறது. உருண்டை, நீள் உருண்டை என பலா வடிவங்களில் உற்பத்தியாகும் கத்தரிகாய்களில் சிறிதளவு கசப்பு இருக்கும். கத்தரிக்காயின் தோல், சதை, விதை என முற்றாத அனைத்து பகுதிகளுமே உணவாக பயன்படுத்தப்படுகின்றன.

எந்தவொரு விஷயத்திற்கும் இரு பகுதிகள் இருப்பதுப்போல, பெரும்பாலானவர்களுக்கு ஊட்டச்சத்தை அளிக்கும் கத்தரிக்காய், சிலருக்கு மட்டும் நஞ்சாக மாறுகிறது. 

கத்தரிக்காயை உட்கொள்வது சில நோய்களை மேலும் மோசமாக்கும். அதேபோல சிலருக்கு கத்தரிக்காய் சாப்பிட்டால் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். எந்தெந்த நபர்கள் கத்தரிக்காயை சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | அடிவயிற்று தொப்பையை குறைக்கணுமா? இரவில் இவற்றை மறக்காம சாப்பிடுங்க!

எலும்பு பலவீனம்
எலும்பு சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் கத்தரிக்காயை சாப்பிடக்கூடாது. உண்மையில், கத்தரிக்காயில் உள்ள ஆக்சலேட், கால்சியத்தை உறிஞ்சும் திறனைக் குறைக்கிறது. இது எலும்புகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எனபதால், எலும்பு பிரச்சனைகள் உள்ளவர்கள் கத்தரிக்காயை சாப்பிட வேண்டாம் என பரிந்துரைக்கப்படுகிறது.
 
மூட்டுவலி நோயாளிகள்
மூட்டுவலி நோயாளிகள் அல்லது முழங்கால் வலியால் அவதிப்படுபவர்களும் கத்தரிக்காயை சாப்பிடக்கூடாது. உடலில் வாத தோஷத்தை அதிகரிக்கும் கத்தரிக்காய், மூட்டுகளில் அழுத்தத்தை அதிகரிக்கிறது இதனால், கத்தரிக்காய் சாப்பிடும்போது உங்கள் மூட்டுகளில் வலி அதிகரிக்கும்.

சிறுநீரகக் கற்கள்
கத்தரிக்காயை உட்கொள்வது சிறுநீரகக் கற்கள் பிரச்சனை உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். கத்தரிக்காயில் உள்ள விதைகள் சிறுநீரக கற்கள் உருவாவதற்கு ஒரு காரணமாகும், எனவே அவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
 
பைல்ஸ் நோயாளிகள்
பைல்ஸ் எனப்படும் மூலநோய் உள்ளவர்களும் கத்தரிக்காயை உட்கொள்ளக்கூடாது. கத்தரிக்காயை சாப்பிடுவது பைல்ஸ் பிரச்சனையை மேலும் தீவிரமாக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | தொப்பை அதிக தொந்தரவு செய்கிறதா? இரவு தூங்கும் முன் இவற்றை குடியுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News