எடை இழப்புக்கான குறிப்புகள்: இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஃபிட்டாக இருக்க விரும்புகிறார்கள். ஏனெனில் உடல் பருமனாக இருப்பதால் பல நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது. உடல் எடை அதிகரித்தால், அதனால் பல வித உடல் நல குறைபாடுகள் ஏற்படுகின்றன. உடல் எடையை குறைக்க பலரும் பல வித முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, ஜிம் என பல வழிகளில் எடையை குறைக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சிறிய பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்தினால் போதும். அதேபோல் சில பழக்கங்களை நிறுத்திவிட்டாலும், எடை குறைப்பதில் அதிக கவனம் செலுத்த முடியும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொப்பை கொழுப்பை எரிப்பது எப்படி?


இந்த கேள்வி பலரது மனதில் இருக்கும் ஒரு பொதுவான கேள்வியாகும். இதற்காக பலர் பல முயற்சிகளை எடுத்தாலும், இவற்றால் வேண்டிய விளைவுகளை பெரும்பாலும் பெற முடிவதில்லை. தொப்பையில் சேரும் கொழுப்பு கரையாமல் அப்படியே தான் இருக்கின்றது. அத்தகைய சூழ்நிலையில், தினசரி உடற்பயிற்சியுடன், உடல் எடை குறைப்பில் கண்டிப்பாக விளைவைக் காட்டும் சிலவற்றை உட்கொள்வது அவசியமாகும். உடல் எடையை குறைப்பதில் உங்களுக்கு பலன் அளிக்கக்கூடிய ஒரு பொருளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


கசகசாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள்


கசகசா  விதைகள் மருத்துவ குணங்கள் நிறைந்தவையாக கருதப்படுகின்றன. அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் ஆகியவை இதில் உள்ளன. மேலும் இது காப்பர், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம், நார்ச்சத்து மற்றும் மாங்கனீஸ் ஆகியவற்றின் வளமான மூலமாகவும் உள்ளது.


எடை இழப்புக்கு கசகசாவை இந்த வகையில் பயன்படுத்தலாம்


வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றி அதிகரிக்கும் கொழுப்பால் அவதியில் உள்ளவர்களுக்கு கசகசா ஒரு சஞ்சீவியாக இருக்கும். ஏனெனில் அதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் எடையைக் குறைக்க உதவுகின்றன. கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல உணவியல் நிபுணரான டாக்டர் ஆயுஷி யாதவ், கசகசா விதைகளை எடையைக் குறைக்கும் உணவாக எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை விளக்குகிறார். அந்த வழிகளை பற்றி தெரிந்துகொள்ளலாம். 


1. உணவை அலங்கரிக்க, தாளிக்க கசகசா விதைகளை பயன்படுத்தலாம்


கசகசாவில் நார்ச்சத்து இருப்பதால் உடல் எடையை குறைக்க இது பெரிதும் உதவுகிறது. தினமும் இதை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதன் விதைகளை உணவின் மேல் அலங்கரித்து, தொடர்ந்து இந்த முறையை செய்து பார்க்கலாம். அதன் பலன் சில வாரங்களில் தெரியும்.


மேலும் படிக்க | கொலஸ்ட்ராலை எரித்து... மாரடைப்பை தடுக்கும்.... சில அற்புத மூலிகை தேநீர்!


2. கசகசா விதை சிரப் குடிக்கவும்


கசகசா கொண்டு உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சந்தையில் இருந்து பாப்பி சிரப்பை, அதாவது கசகசா சிரப்பை வாங்கி அதிலிருந்து ஷர்பத் தயாரித்து குடிக்கலாம். இதை குடிப்பதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதனால் தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவை உண்பது தவிர்க்கப்படும். இதை தொடர்ந்து செய்து வந்தால், அதிகரித்து வரும் உங்கள் எடை குறைய ஆரம்பிக்கும்.


3. கசகசாவை பாலுடன் சேர்த்து உட்கொள்ளலாம்


கசகசாவையும் பாலையும் கலந்து சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இதன் பயன்பாடு தசைகள் மற்றும் எலும்புகளை பலப்படுத்துகிறது. ஒரு டம்ளர் கசகசாவை ஒரு டம்ளர் பாலில் கொதிக்க வைத்து, அது வெதுவெதுப்பான நிலைக்கு வந்தவுடன் குடிக்கவும். இதனால் நீண்ட நேரம் வயிறு நிரம்பி இருப்பதோடு, அதிகமாக சாப்பிடுவதையும் தவிர்க்கலாம். உடல் எடையை குறைக்க, காலை உணவில் இதை சாப்பிடுவது நன்மை பயக்கும். 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உங்கள் ஈறுகளில் ரத்தம் வருகிறதா... இதை செய்து ரிலாக்ஸ் ஆகுங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ