உடல் எடையை குறைக்கும் உணவுகள்: உடல் பருமன், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் பிற வாழ்க்கை முறைக் கோளாறுகளைத் தவிர்க்க ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். நமது உடலுக்கு அனைத்து சத்துகளும் கண்டிப்பாக சரியான அளவில் தேவை. அதேபோல், குறைந்த அளவு கலோரி உட்கொள்ளலும் உடலுக்கு அவசியம். நாம் நாள் முழுவதும் கலோரி நிறைந்த உணவுகளை உட்கொண்டால், உடல் தேவைக்கு அதிகமான கலோரிகளை சேமித்து வைக்கிறது. மேலும் நாள் முழுவதும் எவ்வளவு கலோரிகளை நாம் எடுத்துக்கொள்கிறோமோ அவ்வளவு கலோரிகளை நாம் எரிக்க வேண்டும். ஆனால் இதைச் செய்யாவிட்டால், கூடுதல் கலோரிகள் உடலில் கொழுப்பு வடிவில் சேமிக்கப்படும். இதன் காரணமாக உடல் பருமன் பிரச்சனை ஏற்படுகின்றது. அதே போல் உடல் பருமன் பல்வேறு வாழ்க்கை முறை கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
உடல் எடயை குறைக்க பலரும் பல வழிகளில் முயற்சி செய்கிறார்கள். உடல் பருமன், தொப்பை விழுதல், அதிகப்படியான உடல் எடை ஆகிய பிரச்சனைகள் இந்த காலத்தில் மிகவும் பொதுவான பிரச்சனைகள் ஆகிவிட்டன. சில உணவு முறை மாற்றங்கள் மர்றும் வாழ்வியல் மாற்றங்களை செய்ய வேண்டியது இதற்கு மிக அவசியமாகும். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், தினசரி டயட்டில் சரியான உணவுகளை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். அவற்றின் உதவியுடன், உடலில் இருந்து கூடுதல் கொழுப்பை குறைக்கலாம்.
சில உணவு சேர்க்கைகள் உடல் எடையை குறைப்பதில் மிகவும் நல்ல விளைவுகளை காட்டுகின்றன. சில குறிப்பிட்ட உணவுகளை ஒன்றாக சாப்பிடுவதால் கொழுப்பு வேகமாக எரிகிறது. இந்த உணவுகள் கொழுப்பைக் குறைப்பதுடன் தசைகளையும் அதிகரிக்கின்றன. இதனால் உடல் வலுவாக இருக்கும். உடல் எடையை குறைக்க உதவக்கூடிய அப்படிப்பட்ட 5 உணவுக் கலவைகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பருப்பு-தக்காளி
பருப்பு வகைகளில் புரதம், நார்ச்சத்து மற்றும் பிற சத்துக்கள் காணப்படுகின்றன. இவை வயிற்றை நிரம்ப வைப்பதோடு, தசைகளை அதிகரிக்கவும் உதவுகின்றன. தக்காளியை இதனுடன் கலந்து சாப்பிட்டால், அதில் உள்ள பயோஆக்டிவ் பைட்டோகெமிக்கல் பிஎம்ஐ -ஐ கட்டுப்படுத்த உதவுகிறது.
பச்சை தேயிலை மற்றும் எலுமிச்சை
கிரீன் டீ மற்றும் எலுமிச்சை உடல் எடையை குறைக்க சிறந்த பானமாகும். இது கொழுப்பை வேகமாக குறைக்கும் வேலையை செய்கிறது. இந்த இரண்டு பொருட்களையும் சாப்பிடுவதால், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி மற்றும் கேட்டசின்கள் உடலுக்குக் கிடைக்கும். இது கல்லீரலுக்கு கொழுப்பை பயன்படுத்த உதவுகிறது மற்றும் தொப்பையை குறைக்கிறது.
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்கனுமா? அப்போ இந்த நீரை தினமும் குடியுங்கள்
அன்னாசி மற்றும் எலுமிச்சை
உடல் எடையை குறைக்க, அன்னாசி மற்றும் எலுமிச்சை சாற்றை உங்கள் உணவில் சேர்க்க வேண்டும். இரண்டுமே புளிப்பு பொருட்கள் மற்றும் கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டவை. இவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் வேலையை செய்கின்றன. மேலும் இவற்றின் பயன்பாட்டால் சருமமும் அழகாக இருக்கும்.
அத்திப்பழம்-பிரேசில் நட்ஸ்
அத்திப்பழம் மற்றும் பிரேசில் பருப்புகளை கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடுவது நன்மை பயக்கும். இதில் புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இவற்றை ஒன்றாகச் சாப்பிடுவதால், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் போதுமான அளவில் கிடைக்கும்.
முட்டை-குடைமிளகாய்
முட்டையில் குறைந்த கலோரி மற்றும் அதிக புரத உணவு உள்ளது. இது வயிற்றை நீண்ட நேரம் நிரம்பிய உணர்வுடன் வைத்திருக்க உதவுகிறது. குடை மிளகாய் கொழுப்பை விரைவில் குறைக்கும். குடை மிளகாயில் கேப்சைசின் உள்ளதாகவும், இது பசியைக் கட்டுப்படுத்துவதாகவும் பல ஆராய்ச்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக குடைமிளகாய் விரைவாக எடையைக் குறைக்க உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | நோய் எதிர்ப்பு சக்தியை மோசமாக்கும் உணவுகள்! உங்களுக்கு நீங்களே ஆப்பு வைக்கலாமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ