இன்றைய காலக்கட்டத்தில் மக்களின் உடல் ரீதியான செயல்பாடுகள் வெகுவாக குறைந்து விட்டதால், வயிற்றை சுற்றி அதிக கொழுப்பு சேருகிறது. அதிலிருந்து விடுபட எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளும் பல சமயங்களில் தோல்வியடைகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொப்பை பிரச்சனை பலருக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. எனினும், சில பானங்கள் மூலம் தொப்பையையும் அதிகரிக்கும் எடையையும் குறைக்கலாம். 


இந்த பானங்கள் மூலம் தொப்பையை குறைக்கவும்


1. தண்ணீர் மற்றும் துளசி விதைகள்


துளசி இலைகளின் நன்மைகள் பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். எனினும் இவற்றின் விதைகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன என்பது பலருக்குத் தெரியாது. வைட்டமின்கள் ஏ, பி, ஈ மற்றும் கே தவிர, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. துளசி விதைகளை தண்ணீரில் கலந்து குடிப்பதன் மூலம் கொழுப்பு எரியும் செயல்முறை துரிதப்படுத்தப்படுகிறது. தொப்பை கொழுப்பு குறையத் தொடங்குகிறது.


2. மோர்


மோர் ஒரு சிறந்த எடை இழப்பு பானமாக கருதப்படுகிறது. இதை ஒரு நாளைக்கு சுமார் 3 முறை குடிக்கலாம். இது உடல் சூட்டை குறைக்கிறது. செரிமானத்தை சரியாக்கி, வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதைத் தவிர, உடல் கொழுப்பை தகர்க்க உதவுகிறது.


மேலும் படிக்க | நரை முடி கருமையாக வளர வீட்டிலேயே இத செஞ்சா போதும் 


3. சூடான நீர் மற்றும் எலுமிச்சை


காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால், அதிகரிக்கும் எடையில் அதன் தாக்கம் நேரடியாக இருக்கும். இதனால் வளர்சிதை மாற்றம் மேம்படுத்துவதோடு, செரிமானமும் நன்றாக இருக்கும்.


4. காபி


காபி பொதுவாக ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுவதில்லை, ஏனெனில் அதில் உள்ள காஃபின் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. ஆனால் கருப்பு காபி அதாவது பிளாக் காப்பி குடித்தால், அது எடையைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். காலையில் சர்க்கரை இல்லாமல் கருப்பு காபி குடிப்பதால் கொழுப்பு எரிகிறது, இருப்பினும் அதை குறைந்த அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ நியூஸ் இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR