ஓவர் எடையால் ஒரே டென்ஷனா? காலையில் இதையெல்லாம் செய்தால்... உடனே குறையும்
Weight Loss Morning Tips: உடல் எடையை குறைக்க பயனுள்ள சில காலை வேளை டிப்ஸ்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
எடை குறைப்பு குறிப்புகள்: இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை குறைப்பது கடினமான மற்றும் சவாலான பணியாக மாறியுள்ளது. இதில், சரியான உடற்பயிற்சியுடன், நீங்கள் என்ன, எப்போது சாப்பிட வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இதனுடன், தினமும் ஒரே மாதிரியான சலிப்பான உணவைச் சாப்பிடுவதற்குப் பதிலாக, நீங்கள் சுவாரஸ்யமாகவும் சுவையாகவும் இருக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும். நமது உணவில் சரியான அளவு நார்ச்சத்து மற்றும் புரதத்தை சேர்ப்பதால், நமது எடையை சரியாக வைத்திருக்க முடியும்.
உடல் எடையை குறைக்க உதவும் காலை பழக்கவழக்கங்கள்
இன்றைய அவசர வாழ்க்கையில், உடல் பருமன், தொங்கும் தொப்பை, அதிக எடை என இப்படிப்பட்ட பிரச்சனைகளால் பலரும் அவதிப்படுகிறார்கள். இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, நமது தன்னம்பிக்கையையும் நாம் இழக்கிறோம். தொப்பை உள்ளவர்களுக்கு உள்ள பெரிய அசௌகரியமாக இருப்பது என்னவென்றால் அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம், அவர்களைத் தாண்டி அவர்களது தொப்பை தான் அனைவரது கண்களிலும் படுகின்றது. சிலர் உடல் எடையை குறைக்க எவ்வளவு யோசித்தாலும் சோம்பல் காரணமாக ஒன்றுமே செய்யாமல் விட்டி விடுகிறார்கள்.
ஆனால், அப்படி செய்யாமல் உடல் எடையை குறைப்பதை ஒரு தவமாக நினைத்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். ஆனால், அதற்காக உங்கள் உடலை வருத்திக்கொள்ள வேண்டும் என்பதில்லை. கடுமையான எந்த முயற்சியும் எடுக்காமலும், இயற்கையான எளிய வழிகளிலும் நாம் நமது உடல் எடையை குறைக்க முடியும்.
ஒரு குறுகிய காலத்திற்கு எளிய எடை இழப்பு வழக்கங்களை நேர்மையாக பின்பற்றினால், அனைவரும் தங்கள் இலட்சிய உடலை பெற முடியும். எடை இழப்புக்கு சிறந்த நேரம் காலை நேரமாகும். நீங்கள் காலையில் ஆரோக்கியமான மற்றும் நல்ல பழக்கங்களைக் கடைப்பிடித்தால், அதன் மூலம் உங்களால் அற்புதமான விளைவுகளை பெற முடியும். இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்துவது மட்டுமல்லாமல், கலோரிகளை வேகமாக எரிக்கவும் செய்கிறது.
உடல் எடையை குறைக்க பயனுள்ள சில காலை வேளை டிப்ஸ்களை பற்றி இந்த பதிவில் காணலாம். உடல் எடையை குறைக்க காலையில் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் பழக்கவழக்கங்கள் பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்.
உடல் எடையை குறைக்க உதவும் காலை பழக்கங்கள்:
காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும்
தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை உட்கொண்டால், நமது செரிமானம் சிறப்பாக இருக்கும். அதே நேரத்தில், வெதுவெதுப்பான நீரை குடிப்பதால், வளர்சிதை மாற்றமும் இதன் மூலம் அதிகரிக்கிறது. நீங்கள் விரும்பினால், அதில் எலுமிச்சை அல்லது தேன் கலந்தும் குடிக்கலாம்.
மேலும் படிக்க | அடிவயிறு தொப்பை குறைக்கணுமா? இந்த டயட் சார்ட்டை ஃபாலோ செய்தால் போதும்
தண்ணீர் பாட்டிலை உடன் வைத்திருங்கள்
நீங்கள் நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீரை உட்கொண்டால், அது உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கிறது. இது உங்கள் எடையைக் குறைக்க உதவுகிறது. தண்ணீரில் அதிக கலோரிகள் உள்ளன, எனவே தண்ணீரை உட்கொள்வதன் மூலம் பிற உனவுகளிலிருந்து கூடுதல் கலோரிகளை எடுப்பதைத் தவிர்க்கலாம்.
அதிக நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த காலை உணவு
அதிக நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவை உட்கொண்டு உங்கள் நாளைத் தொடங்கினால், உங்கள் வயிறு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வுடன் இருக்கும். இதன் காரணமாக நீங்கள் கூடுதலாக சாப்பிடுவதைத் தவிர்க்க முடியும்.
உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது
நீங்கள் தினமும் வழக்கமான உடற்பயிற்சிகளை செய்து வந்தால், அது எடையைக் குறைக்க உதவுகிறது. காலையில் உடற்பயிற்சி செய்வது ஒரு நல்ல பழக்கமாகும். இதன் மூலம் உங்கள் எடையை பராமரிக்கலாம், எனவே தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இந்த மூலிகை நீரால் முடி கருப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ