காலை முதல் இரவு வரை... கொழுப்பை எரிக்கும் புரதம் நிறைந்த ‘சில’ உணவுகள்!

புரோட்டீன் உடல் எடையை குறைக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், தசைகளை வலுவாக்குகிறது. எடை இழப்பை எளிதாக்குகிறது. உங்கள் உடலில் அதிக தசை இருந்தால், கொழுப்பை சேமிக்கும் வாய்ப்பு குறைவு.   

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 20, 2023, 03:41 PM IST
  • புரதம் நமது உடலுக்கு மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும்
  • புரோட்டீன் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.
  • அதிக கலோரிகளை எரிக்க புரோட்டீன் உதவுகிறது.
காலை முதல் இரவு வரை...  கொழுப்பை எரிக்கும் புரதம் நிறைந்த ‘சில’ உணவுகள்! title=

புரதம் நமது உடலுக்கு மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். குறிப்பாக நீங்கள் எடையைக் குறைக்க முயற்சிக்கும் போது சேர்க்கப்பட வேண்டிய இன்றியமையாத ஊட்டசத்து என்றால் மிகையில்லை. புரதம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், பசியைக் குறைக்கவும், எடையைக் கட்டுப்படுத்தும் பல ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. புரோட்டீன் உடலில் வயிறு நிறைந்த திருப்தி கொடுக்கும் உணர்வின் அளவை அதிகரிக்கிறது. அதே நேரத்தில் உங்கள் பசி ஹார்மோன்களின் அளவைக் குறைக்கிறது. புரோட்டீன் அதிக வெப்ப விளைவு மற்றும் பல காரணிகளால் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இது அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. கூடுதலாக, புரதம், காலை நேர உணவு,  இரவு நேர உணவு மற்றும் சிற்றுண்டி ஆகிய அனைத்திலும் சேர்க்கும் போது வியக்கத் தக்க பலன்களை கொடுக்கிறது. எனவே, காலை உணவின் போது நீங்கள் போதுமான புரதத்தை உட்கொண்டால், நாள் முழுவதும் உங்களுக்கு பசி குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன, மேலும் நீங்கள் தேவையில்லாமல் ஆரோக்கியமற்ற விஷயங்களில் ஈடுபட வேண்டியதில்லை.

உடலுக்கு புரதம் எவ்வளவு முக்கியம் என்பதை  இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். குறிப்பாக உங்கள் தொப்பையைக் குறைக்க முயற்சிக்கும் போது, ​​இந்த ஊட்டச்சத்தின் முக்கிய ஆதாரங்கள் மற்றும் அவற்றை உங்கள் அன்றாட உணவில் இதனை எவ்வாறு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம். அதிலும், சைவ உணவு உண்பவர்கள் புரதம் நிறைந்த உணவு மூலங்களைப் பற்றி நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்.

புரதத்தின் ஆதாரங்கள்

இறைச்சி, கோழி மற்றும் மீன் ஆகியவற்றில் அதிக அளவிலான புரதம் காணப்படுகிறது. அசைவ உணவு உண்பவர்கள் போதுமான புரதத்தை எளிதில் பெற முடியும். அதே நேரத்தில் சைவ உணவை விரும்புபவர்களுக்கு உதவும் வகையில்,  உடல் எடையை குறைக்க மற்றும் தொப்பை கொழுப்பை எரிக்க புரதம் நிறைந்த சிறந்த சைவ உணவுகளை  அறிந்து கொள்ளலாம்

எடை இழப்புக்கான புரதம் நிறைந்த  சைவ உணவுகள்

1. பருப்பு வகைகள்
சுமார் 1 கப் சமைத்த பருப்பில் 18 கிராம் புரதம் உள்ளது. பருப்பை மட்டும் தனியாக சாப்பிடாமல், அதனுடன் சாலட், சூப் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். பருப்புகளில் மெதுவாக ஜீரணிக்கப்படும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளன மற்றும் நார்ச்சத்துக்கான நல்ல ஆதாரமாக அறியப்படுகிறது. இது உங்கள் எடை இழப்பு முயற்சிகளுக்கு முக்கியமானது. இது தவிர, அவற்றில் ஃபோலேட், மாங்கனீஸ் மற்றும் இரும்பு ஆகியவை உள்ளன, இவை அனைத்தும் ஆரோக்கியமாக இருக்க மிக முக்கியம்.

2. கொத்துக்கடலை
கொத்துகடலையும் பருப்பு வகைகளின் கீழ் தான் வருகிறது. இதில் மிக அதிக புரத உள்ளடக்கம் உள்ளது. ஒரு கப் சமைத்த அல்லது வேகவைத்த பருப்பில் சுமார் 15 கிராம் புரதம் உள்ளது. கூடுதலாக, அவை இரும்பு, காம்பிளக்ஸ்  கார்போஹைட்ரேட்டுகள்,  நார்ச்சத்து, ஃபோலேட், பாஸ்பரஸ், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பல தாவர கலவைகளின் சிறந்த மூலமாகும்.

மேலும் படிக்க | தினமும் வெற்றிலை பாக்கு போட்டால் போதும்... கருத்தரிப்பு மையம் போகவே வேண்டாம்!

3. தண்டு கீரை விதைகள் மற்றும் குயினோவா

பசையம் இல்லாத தானியங்களான, தண்டு கீரை விதைகள் மற்றும் குயினோவா ஒரு நாளைக்கு போதுமான புரத தேவையை பூர்த்தி செய்வதாக அறியப்படுகிறது. தண்டு கீரை விதைகள் மற்றும் குயினோவா ஆகியவை புரதத்தின் முழுமையான ஆதாரங்கள் மற்றும் உங்களை நீண்ட நேரம்  பசியின்றி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.  இதனால் நீங்கள் அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது.

4. கீரை

கீரையில் வேகவைத்த முட்டையில் உள்ள அளவு புரதம் உள்ளது. அதுவும் பாதி கலோரிகள் மட்டுமே உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதனை பச்சையாக சாப்பிடுவதற்குப் பதிலாக ஆவியில் வேகவைத்தால் அதன் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கலாம். வேகவைத்த கீரை வைட்டமின்களைத் தக்கவைக்க உதவுகிறது, கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது மற்றும் உடலில் உள்ள வீக்கத்திலிருந்து விடுபட உதவுகிறது.

5. பாதாம்

இயற்கையான முறையில் எடை இழப்புக்கான இயற்கை மாத்திரை பாதாம் எனலாம். தினமும் ஒரு சில பாதாம் பருப்புகளை உட்கொள்வது உடல் எடையை திறம்பட குறைக்க உதவும். இன்டர்நேஷனல் சொசைட்டி ஆஃப் ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனின் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி,  அதிக கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை எரிக்க உதவும் அமினோ அமிலமான எல்-அர்ஜினைன் இதில் இருப்பதால், உடற்பயிற்சி அல்லது ஜிம்மிற்குச் செல்வதற்கு முன்பு நீங்கள் பாதாம் சாப்பிடலாம் .

6. பாலாடைக்கட்டி அல்லது பன்னீர்

பாலாடைக்கட்டிகளில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் மிகக் குறைவு, மேலும் புரதம் அதிகம். கூடுதலாக, இது கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி 12, ரைபோஃப்ளேவின் மற்றும் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க தேவையான பல ஊட்டச்சத்துக்களின் வளமான மூலமாகும்.

7. ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி ஒரு சூப்பர்-ஆரோக்கியமான காய்கறி, வைட்டமின் சி, புரதம், வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவை அனைத்தும் எடை இழப்புக்கான முக்கிய ஊட்டச்சத்துக்கள். இது உங்கள் எடை இழப்பு இலக்குகளை அடைய உதவும்.

ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க உதவும் இந்த சைவ உயர் புரத உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உடற்பயிற்சி மற்றும் சரியான வாழ்க்கை முறையுடன் இந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் வெற்றி உங்கள் கையில்.

மேலும் படிக்க | சர்க்கரை நோயா... உடல் பருமன் குறையணுமா... ‘இந்த’ சர்க்கரைகளை தாராளமா சாப்பிடலாம்!

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News