எடை குறைப்பு குறிப்புகள்: இன்றைய காலகட்டத்தில் அனைவரும் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். மக்கள் தங்கள் உடல் எடையை பராமரிக்க பல வழிகளை பின்பற்றுகிறார்கள். உடல் எடையைக் குறைக்க, ஜிம்மில் மணிக்கணக்கில் செலவிடுகிறார்கள், டயட்டில் இருக்கிறார்கள். இருப்பினும், பல சமயங்களில், இவற்றாலும் எந்த நல்ல பலனையும் பெறுவதில்லை. எனினும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் நாம் நம் உடல் எடையை குறைக்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல நேரங்களில் நாம் தினசரி சாப்பிடும் உணவிலேயே உடல் எடையை குறைப்பதற்கான வழி உள்ளது என்பது நமக்கு தெரிவதில்லை. இவற்றை சரியான முறையில் உட்கொண்டால் திறம்பட உடல் எடையை குறைக்க முடியும். அப்படி ஒன்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.


நாம் அன்றாடம் உண்ணும் பல விஷயங்கள் உடல் எடையைக் குறைக்கும் வல்லமை படைத்தவையாக உள்ளன. இவற்றில் ஒன்று வெங்காயம். பொதுவாக அனைவரது சமையல் அறைகளிலும் வெங்காயம் காணப்படுகின்றது. நமது சமையலில் பெரும்பாலான வகைகளில் வெங்காயத்தை நாம் உட்கொள்கிறோம். வெங்காயம் சமையலில் சுவையை கூட்டுவதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எடையைக் குறைக்க வெங்காயம் எவ்வாறு உதவுகிறது என்பதை இங்கே காணலாம். 


வயிறு நீண்ட நேரம் நிறைவான உணர்வுடன் இருக்கும்


வெங்காயத்தில் காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். இது எடையை குறைக்க உதவுகிறது. ஒரு கப் வெங்காயத்தில் 64 கலோரிகள், 15 கிராம் கார்போஹைட்ரேட், 16 கிராம் கொழுப்பு, 7 கிராம் நார்ச்சத்து, 76 கிராம் சர்க்கரை மற்றும் வைட்டமின்கள் உள்ளன. கூடுதலாக, வெங்காயத்தில் க்வெர்செடின் என்ற கலவை உள்ளது. இந்த ஃபிளாவனாய்டு உடல் பருமன் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது எடையைக் குறைக்க உதவுகிறது.


மேலும் படிக்க | சூப்பரா வேலை செய்ய சூப்பர்ஃபுட்ஸ் இருக்கே! சைவப்பிரியர்களுக்கு ஊக்கமூட்டும் உணவுகள்


வெங்காயத்தை எவ்வாறு பயன்படுத்துவது


எடை இழப்புக்கு வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்வதற்கான சிறந்த வழி, அதன் சாற்றை தொடர்ந்து குடிப்பதாகும். வெங்காயத்தை காய்கறிகளில் சேர்க்க வதக்கும் போது அதன் சத்துக்கள் அழிந்து விடும். வெங்காயத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து சாறு தயாரிக்கலாம்.


வெங்காய சூப்


வெங்காய சூப்பை மதிய உணவு அல்லது இரவு உணவில் குடிக்கலாம். அனைத்து சத்துக்களும் நிறைந்த இதன் சூப் நீண்ட நேரம் முழுமையான உணர்வுடன் இருக்க உதவும். சுவையில் சிறப்பாக இருக்கும் இந்த சூப், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. வெங்காய சூப்பில் புரதத்திற்காக பனீரையும் பயன்படுத்தலாம். இது தவிர பச்சை வெங்காயத்தையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.


வெங்காயத்தின் பிற நன்மைகள்


நீரிழிவு நோய்


வெங்காயம் சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. நீங்கள் தினமும் வெங்காயம் சாப்பிட்டு வந்தால், நீரிழிவு டைப் 2 நோயாளிகளுக்கு ஃபாஸ்டிங் சர்க்கரை அளவைக் குறைக்க உதவலாம்.


இரும்புச்சத்து குறைபாடு


உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், வெங்காயத்தை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வெங்காயம் இரும்பு மற்றும் பொட்டாசியம் பண்புகள் நிறைந்ததாக கருதப்படுகிறது.


தொற்றுநோய்களை தவிர்க்க உதவுகிறது


தொற்றுநோயைத் தவிர்ப்பதற்கு வெங்காயம் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது. வெங்காயத்தில் ஒவ்வாமை எதிர்ப்பு, ஆண்டி ஆக்சிடண்ட் பண்புகள் உள்ளன. இது பல வகையான நோய்த்தொற்றுகளிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது.


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்


நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த விரும்பினால், நீங்கள் வெங்காயத்தை சாலட் வடிவில் உட்கொள்ள வேண்டும். வெங்காயத்தில் உள்ள பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி போன்ற பண்புகள் காணப்படுகின்றன. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.


எலும்புகளை வலுப்படுத்தும்


எலும்புகளை வலுப்படுத்த வெங்காயத்தைப் பயன்படுத்தலாம். வெங்காயத்தில் உள்ள கூறுகள் எலும்புகளை வலுப்படுத்த உதவுகின்றன.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | தினமும் காலையில் தேங்காய் தண்ணீர் குடித்தால் எக்கச்சக்க நன்மைகள் - நீரஜ் சோப்ராவின் ஹெல்த் சீக்ரெட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ