புதுடெல்லி: உணவுகளே நமது உடல் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாகும். தக்காளியில் உள்ள லைகோபீன் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் இதய நோய் மற்றும் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே ஆகியவற்றின் சிறந்த மூலமாக இருக்கும் தக்காளியின் நிறம் சிவப்பு தவிர, மஞ்சள், ஆரஞ்சு, பச்சை என ஊதா உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களிலும் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? தக்காளியின் பல கிளையினங்கள் வெவ்வேறு வடிவங்களையும், வழக்கமாக நாம் உண்ணும் தக்காளியின் சுவையில் இருந்து மாறுபட்ட சுவையிலும் தக்காளிகள் விளைகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? எந்த வகையாக இருந்தாலும், என்ன நிறமாக இருந்தாலும், தக்காளியின் ஊட்டச்சத்துகள் ஏறக்குறைய ஒன்றுபோலவே இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தக்காளியில் சுமார் 95% நீர்ச்சத்து உள்ளது, எஞ்சிய 5% சத்துக்களில் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே, தக்காளி நார்ச்சத்துக்கான நல்ல மூலம் என்று சொல்லப்படுகிறது. வைட்டமின் சி ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்பைக் கொண்ட தக்காளியில் பொட்டாசியம், வைட்டமின் கே1 ஆகியவை உள்ளன.


மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க ஓட்ஸை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?


அதுமட்டுமா? ஃபோலேட் (வைட்டமின் B9) கொண்ட தக்காளி, சாதாரண திசு வளர்ச்சிக்கும் செல் செயல்பாட்டிற்கும் முக்கியமானது. கர்ப்பிணிப் பெண்களுக்கு இது மிகவும் முக்கியமான வைட்டமின் பி 9 சத்து கொண்ட சுலபமான உணவுப் பொருள் தக்காளி ஆகும்.


வைட்டமின் ஏ அதிகமாக அடங்கியுள்ளதால் கண் பார்வையை மேம்படுத்தும் சக்தி கொண்டுள்ள தக்காளி, மாலைக்கண் வியாதியைத் தடுக்கும் ஆற்றலும் தக்காளிக்கு உண்டு.



தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில்  மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது.  உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவுகிறது. தினமும் உணவில் தக்காளியை சேர்த்துக் கொள்பவர்களுக்கு உடல் எடை அதிகரிப்பதில்லை என்று பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | நீரிழிவு நோயால் அவதியா? சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இந்த வீட்டு வைத்தியம் உதவும் 


பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. எனவே, உணவை அதிக அளவு  சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிப்பதில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், தக்காளி நமது சருமத்தில் உள்ள மைட்டோகாண்ட்ரியல் என்ற மரபணுவை பாதுகாப்பதால், சரும ஆரோக்கியம் மேம்படுவதுடன் சருமத்தின் வயதாகும் தன்மையும் மட்டுப்பாடுகிறது. எலும்புகளையும் பற்களையும் வலுவாக்கும் தக்காளி, அழகையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கும் ஒரு அற்புதமான கனி ஆகும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஊட்டச்சத்தில் தயிருடன் போட்டியிடும் சோயாபீன் தயிர்! பால் அலர்ஜி உள்ளதா? இதை சாப்பிடுங்க


மேலும் படிக்க | ஆண்களுக்கு விறைப்புத் தன்மையை அதிகரிக்கும் சாம்பிராணி! ஆயுர்வேத மருத்துவ ரகசியம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ