நரம்பு வெடிப்பு நோயினால் பாடி பில்டர் மரணம்-இந்த நோய் தாக்கத்தை கண்டறிவது எப்படி?
ஜெர்மன் நாட்டைச்சேர்ந்த பிரபல உடற்பயிற்சியாளர் ஒருவர் தனது 30ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். இதற்கு காரணம், நரம்பு வெடிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. நரம்பு வெடிப்பு என்றால் என்ன?
30 வயதான ஜோ லிண்ட்னெர் ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர். இவர், உடற்பயிற்சி செய்து அதை வீடியோவாக பதிவிட்டு பலருக்கு ஹெல்த் டிப்ஸ் கொடுக்கும் யூடியூப் பிரபலம். அன்றும் அவர் நன்றாகத்தான் இருந்திருக்கிறார். திடீரென்று தன் காதலியின் மடியில் விழுந்தவாரு இவரது உயிர் பிரிந்திருக்கிறது. இதற்கு காரணம், நரம்பு வெடிப்பு என கூறப்பட்டிருக்கிறது. நரம்பு வெடிப்பு என்றால் என்ன..? இந்த பிரச்சனை ஆளையே காலி செய்யுமா..?
உயிரிழப்பு..
ஜோ லிண்ட்னர், இன்ஸ்டாகிராமிலும் யூடியுபிலும் மில்லியன் கணக்கிலான ஃபாலோவர்ஸ்களை கொண்டுள்ளார். இவரது இறப்பு செய்தியை கேட்ட பலர், மிகவும் அதிர்ந்து போயினர். தனது வர்க் அவுட் வீடியோக்களை பதிவிட்டு பிறர் உடல் எடையை ஏற்றவும் இவர் உதவி வந்தார். அடிக்கடி தனது வீடியோவில் தசையில் ஏற்படும் வலி குறித்து பேசுவார். ஆனால், அப்போதெல்லாம் அதை வெறும் வலி என்றும் விட்டிருக்கிறார். இதுவே இவருக்கு தற்போது எமனாக வந்து முடிந்துள்ளது. இவர் குறித்து பேசியுள்ள இவரது காதலி ஜோ, தனக்கு அடிக்கடி கழுத்து வலி வருவதாக கூறியதாகவும் அதை அவர் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நோயின் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டு பிடிக்கலாம்.
மேலும் படிக்க | தக்காளி இல்லாமல் சமைக்க கூடிய உணவு பொருட்கள்-விலை ஏற்றத்தை சமாளிக்க எளிய வழி!
நரம்பு வெடிப்பு நோய் என்றால் என்ன..?
நரம்பு வெடிப்பு நோய், Rippling muscle disease என ஆங்கிலத்தில் அழைக்கப்படும். அமெரிக்காவில் நடத்தப்பட்டுள்ள ஒரு ஆராய்ச்சியின் படி, இந்த நோய் மிகவும் அரிதான ஒரு நோயாக கருதப்படுகிறது. இந்த நோய் இருப்பதற்கான அறிகுறி சிறுவயதிலேயே காண்பிக்கப்படுமாம். இது, நம் உடலில் உள்ள CAV3ஜீனில் இருந்து வரக்கூடிய நோய் என அமெரிக்க மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த CAV3ஜீன், நம் தசை செல்களை சுற்றி இருக்குமாம். இதுதான் நம் தசையில் ஏற்படும் அசைவுகளை கட்டுப்படுத்துமாம். இதில் ஏற்படும் பாதிப்பைதான் நரம்பு வெடிப்பு என அழைக்கிறோம்.
அறிகுறிகள் என்னென்ன..?
நரம்பு வெடிப்பு நோயின் அறிகுறிகள் நமக்கு சிறுவயதில் இருந்தே காண்பிக்கப்படும். இதன் பொதுவான அறிகுறிகளாக தசையில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வெளிப்படையாக தெரியக்கூடிய தசையின் தழும்புகள் ஆகும். இந்த நோய் உள்ளவர்கள் தசைக்கு அதிக வேலை கொடுத்த பிறகு நமக்கு சோர்வு, வலி, தசை பிடிப்பு ஏற்படும். இந்த நோய் பாதிப்பு இருப்பவர்கள் குளிரான பகுதியில் இருந்தாலும் அவர்களது தசையில் மாற்றங்கள் உண்டாகும்.
வலி உணர்வு எப்படியிருக்கும்..?
நரம்பு வெடிப்பு பாதிப்புகள் உள்ளவர்களுக்கு தொடை பகுதியில் அதிக வலி ஏற்படும். அப்படி வலி ஏற்படும் சமயங்களில் அவர்களுக்கு தொடையில் தழும்பு போன்றவை தோன்றி மறையும் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு ஏற்படும் வலியானது 5 முதல் 20 விநாடிகள் வரை நீடிக்குமாம். ஒரு சில மருத்துவர்களின் கூற்றின் படி, இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு சமயங்களில் 30 விநாடிகள் வரை கூட இந்த வலி நிடிக்குமாம்.
தசை நோயுடன் தொடர்புடைய அபாயங்கள் என்ன?
மேற்கூறிய அறிகுறிகள் பிற தசை பிடிப்பு நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம் என்றும் நரம்பு வெடிப்பு நோய், பிற தசை பிடிப்பு நோயுடன் சம்பந்தப்பட்டவையாக இருக்கலாம் என்றும் சில மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதனால், தசையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் உடனே அவரவர் ஆலோசனை பெரும் மருத்துவர்களை அனுக வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க | கர்ப்பபை பிரச்சனைகளுக்கு நிவாரணம் கொடுக்கும் முடக்கத்தான் கீரையின் பலன்கள் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ