Neurological Health: நரம்பு தளர்ச்சி நீங்க.... தேவையான விட்டமின்களும் உணவுகளும்!

மனித உடம்பில் நரம்பு மண்டலம் ஓர் அதிசயம். மூளையும், தண்டுவடமும் மூளையும், தண்டுவடமும் மைய நரம்பு மண்டலமாக (Central nervous system) அமைகின்றன. அவற்றில் இருந்து புறப்படும் நரம்புகள் அனைத்தும் சேர்ந்து நரம்பு மண்டலத்தை உருவாக்குகின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 11, 2023, 09:51 AM IST
  • வலுவான நரம்புகள் நல்ல ஆரோக்கியத்திற்கு அவசியம்.
  • உடலில் நரம்புகளின் வலைப்பின்னல் உள்ளது.
  • நரம்புகளின் வலிமைக்கு வைட்டமின் பி12 மிகவும் முக்கியமானது.
Neurological Health: நரம்பு தளர்ச்சி நீங்க.... தேவையான விட்டமின்களும் உணவுகளும்! title=

நம் உடலில் நரம்புகளின் வலைப்பின்னல் உள்ளது. மனித உடம்பில் நரம்பு மண்டலம் ஓர் அதிசயம். மூளையும், தண்டுவடமும் மூளையும், தண்டுவடமும் மைய நரம்பு மண்டலமாக (Central nervous system) அமைகின்றன. அவற்றில் இருந்து புறப்படும் நரம்புகள் அனைத்தும் சேர்ந்து நரம்பு மண்டலத்தை உருவாக்குகின்றன. உடலின் ஒவ்வொரு செயல்பாடு மற்றும் வேலைக்கும் அவை தேவைப்படுகின்றன. இது நினைவகம் மற்றும் உணர்வுள், காட்சி, கேள்வி, சுவை, மணம் ஆகியவற்றுடன் மூளை நரம்புகள் பிரதானமாகச் சம்பந்தப்பட்டிருக்கின்றன.

வலுவான நரம்புகள் நல்ல ஆரோக்கியத்திற்கு அவசியம். இது உடலுக்கு பலம் தரும். உங்கள் நரம்புகள் ஆரோக்கியமாக இருந்தால், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற நோய்களின் ஆபத்து கணிசமாகக் குறையும். இன்றைய இளைய தலைமுறையினரை அதிகம் பாதிக்க கூடிய ஒரு பிரச்சனை தான் நரம்பு தளர்ச்சி. எழுதும் போது நடுக்கம், சோர்வு, களைப்பு, தலைவலி, நிலைத்தடுமாற்றம் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. நரம்பு தளர்ச்சியை நீக்கும் 5 வைட்டமின்கள், மற்றும் அந்த விட்டமின்கள் நிறைந்த உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

நரம்புகளை வலிமையாக்கும் 5 வைட்டமின்கள் மற்றும் உணவுகள்

வைட்டமின் பி12

நரம்புகளின் வலிமைக்கு வைட்டமின் பி12 மிகவும் முக்கியமானது. அவற்றின் குறைபாடு காரணமாக, நரம்புகள் பலவீனமடைகிறது. இந்த வைட்டமின் பெற, முட்டை, இறைச்சி, காளான் மற்றும் கீரையை அதிகம் சாப்பிட வேண்டும்.

வைட்டமின் B9

வைட்டமின் B9, ஃபோலிக் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது. இது நரம்புகளுக்கு அவசியமான மற்றொரு வைட்டமின் ஆகும். கருவின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு இது அவசியம். அதனால்தான் கர்ப்பிணிப் பெண்கள் இதை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். பச்சை இலைக் காய்கறிகள், சோயாபீன்ஸ், கருப்பு பீன்ஸ் மற்றும் கிவி சாப்பிடுவதன் மூலம் நீங்கள் அதைப் பெறலாம்.

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் கவலைப்படாம மாம்பழம் சாப்பிடலாம்... ‘இதை’ மட்டும் கவனத்தில் கொள்ளவும்!

வைட்டமின் E

மூன்றாவது அத்தியாவசிய ஊட்டச்சத்து வைட்டமின் ஈ. இதன் குறைபாடு நரம்புகளை பலவீனப்படுத்தும். காய்கறி எண்ணெய், பாதாம், அக்ரூட் பருப்புகள், கிவி சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் ஈ பெறலாம்.

வைட்டமின் B6 மற்றும் வைட்டமின் B1

கடைசி இரண்டு வைட்டமின்களின் பெயர்கள் B6 மற்றும் B1 ஆகும். இந்த சத்துக்கள் உடலின் அனைத்து நரம்புகளையும் வலுப்படுத்த பயன்படுகிறது. வாழைப்பழம், நிலக்கடலை, பச்சை இலைக் காய்கறிகள் போன்றவை வைட்டமின் பி6 இன் சிறந்த ஆதாரங்கள். வைட்டமின் பி1 குறைபாட்டைப் போக்க, ஓட்ஸ் மற்றும் பச்சை இலைக் காய்கறிகளை சாப்பிடுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | Diabetes Control: இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் திரிபலா மூலிகையை ‘இப்படி’ பயன்படுத்தவும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News