கொலஸ்ட்ரால் குறைக்கும் உணவாக டிராகன் பழம் அமையும்: இந்தியாவில் எண்ணெய் உணவுகள் அதிகம் உண்ணப்படுகிறது, இது நம் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கிறது. இதனால், ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் (Bad Cholesterol) அளவு கணிசமாக அதிகரித்து, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது, இதனால் மாரடைப்பு போன்ற கொடிய நோய் ஏற்படும் அபாயம் உள்ளது, இதுபோன்ற சூழ்நிலையில், ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே அன்றாட உணவில் சேர்ப்பது அவசியம். அதன்படி இதில் நீங்கள் டிராகன் பழத்தை தேர்ந்தெடுக்கலாம். இது தோற்றத்தில் விசித்திரமாகத் தோன்றலாம் மற்றும் சந்தையில் அதன் விலையும் மிக அதிகமாக இருக்கும், ஆனால் இது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிராகன் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் அபரிதமான நன்மைகள்
டிராகன் பழத்தின் (Dragon Fruit) உட்புறம் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இதை பலரும் ஆர்வத்துடன் சாப்பிடுவார்கள். இந்த ஜூசி (Juicy) பழத்தில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது தவிர, இது கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின் சி (Vitamin C) ஆகியவற்றின் வளமான மூலமாகும். எனவே கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் புகழ்பெற்ற உணவுக் கலை நிபுணர் டாக்டர் ஆயுஷி யாதவ், இந்த அற்புதமான பழத்தை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்று ZEE NEWS (ஜீ நியூஸ்) இடம் கூறியுள்ளார். வாருங்கள் அதை பற்றி விரிவாக தெரிந்துக்கொள்வோம். 


மேலும் படிக்க | மல்டிகிரைன் பிரெட் உண்மையில் நல்லது தானா... நிபுணர்கள் கூறுவது என்ன!


1. கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்
டிராகன் பழத்தில் (Dragon Fruit) கொழுப்பு மிகவும் சிறிய அளவில் உள்ளது, இது உடலில் கொலஸ்ட்ராலை (Bad Cholesterol) அதிகரிக்காது, இது இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது. உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால், கண்டிப்பாக இந்த ஜூசி பழத்தை உங்கள் வழக்கமான உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். ஒமேகா -3 கொழுப்பு அமிலம் அதன் விதைகளில் காணப்படுகிறது, இது ஒரு முக்கிய ஊட்டச்சத்து ஆகும்.


2. இதய நோய்கள் நீங்கும்
டிராகன் பழத்தில் நிறைய நார்ச்சத்து உள்ளது. இதை உங்களின் வழக்கமான உணவில் சேர்த்துக் கொண்டால், கரோனரி தமனி நோய் மற்றும் இருதய நோய் (Heart Problem) அபாயமும் தவிர்க்கப்படும். உண்மையில், நார்ச்சத்து நிறைந்த உணவுகள் இதயத்திற்கு நல்லது, மேலும் இது இரத்த அழுத்தம் மற்றும் எடையைக் கட்டுப்படுத்தவும் செயல்படுகிறது.


3. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity Booster) அதிகரிப்பதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது, அத்தகைய சூழ்நிலையில், டிராகன் பழம் (Dragon Fruit) உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும். இந்த பழத்தில் வைட்டமின் சி, பொட்டாசியம், தாதுக்கள் அதிக அளவில் உள்ளது, இது உடலின் பல தேவைகளை பூர்த்தி செய்கிறது.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | நாம் தினமும் சாப்பிடும் இந்த உணவுகளில் இவ்வளவு ஆபத்துகள் இருக்கிறதா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ