புற்றுநோய் அல்லது புற்றுநோய் சிகிச்சையின் பக்க விளைவுகளில் பசியின்மையும் ஒன்றாகும். புற்றுநோய் பாதித்தவர்கள், கீமோதெரபி சிகிச்சையை பெறுகின்றனர். கீமோதெரபி என்பது புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை முடித்துக் கட்ட அல்லது குறைக்க கொடுக்கப்படும் மருந்துகளைக் குறிக்கிறது. இந்த மருந்துகளால் ஏற்படும் பாதிப்புகளில் பசியின்மையை போக்க 2 ரூபாய்க்கு மருந்து கொடுத்து சாதனை செய்துள்ளது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புற்றுநோய் பாதித்த நோயாளிகளுக்கு பசியின்மை மருந்து கொடுப்பது எப்படி சாத்தியம் என்ற ஆச்சரியமான கேள்வி பலருக்கும் எழுகிறது. உண்மையில், புற்று நோய் ஆராய்ச்சிக்காக ரூ.9.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவமனையை தலைமையாக கொண்டு குழு 6 மருத்துவமனைகள் ஆராய்ச்சி செய்வதற்கு அமெரிக்கன் சொசைட்டி அங்கீகாரம் வழங்கியுள்ளது.


புற்றுநோய்க்கு சிகிச்சைக் கொடுக்கும்போது பசியின்மை ஏற்படுமா? அது குறித்த முழுத் தகவல்களையும் தெரிந்துக் கொள்வோம். 


மேலும் படிக்க | Figs: நோய்களை போக்கும் அத்தியின் நன்மைகள்! ஆண்மைக் குறைவை சீராக்கும் அற்புதமான பழம்


கீமோதெரபி 


கீமோதெரபி மருந்துகள் (Chemotherapy Medicine), பாதித்த செல்களை மட்டும் அழிப்பதில்லை. அவை உடல் முழுவதும், அதாவது, வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் உள்ள அனைத்து செல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதால் ஆரோக்கியமான செல்களும் பாதிக்கப்படுகின்றன.


கீமோதெரபி பக்கவிளைவுகள்


கீமோதெரபியின் போது ஆரோக்கியமான செல்களும் சேதமடைவதால், உடல் பாதிக்கப்படுகிறது. உடல் பாதிக்கப்படுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் ஆளுக்கு ஆள் மாறுபடும் என்றாலும் பொதுவாக குமட்டல், வாந்தி, பசியின்மை, எடை இழப்பு, சோர்வு மற்றும் இரத்த அணுக்களின் எண்ணிக்கையை குறைக்கிறது.


ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவதால், இரத்த சோகை மற்றும் தொற்றுநோய்களின் அபாயம் அதிகரிக்கிறது. கீமோதெரபி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தலைமுடி இழப்பு என்பது வெளியில் தெரியும் வெளிப்படையான பாதிப்பாக இருக்கிறது. ஆனால் மற்ற பக்க விளைவுகள் மருந்தின் வகைக்கு ஏற்ப மாறுபடும்.


மேலும் படிக்க | குளிர்காலத்தை ஆரோக்கியமாக அனுபவிக்க பேரிச்சம்பழத்தை இந்த காம்பினேஷனில் சாப்பிடலாமே?


இரைப்பை பாதிப்பு
இரைப்பை குடல் குறிப்பாக செரிமானப் பாதையில் சீரற்ற தன்மை ஏற்படுகிறது என்றால், பசியின்மை அதாவது சாப்பிடும் எண்ணமே தோன்றாமல் இருப்பது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். உடல் எடை இழப்பு ஏற்படலாம். பொதுவாக புற்றுநோய் சிகிச்சைப் பெறுபவர்கள், தாங்களுடைய உடல் எடையில் 10% க்கும் அதிகமாக இழப்பதாக  கூறப்படுகிறது.


பசி எடுப்பதில்லை என்பதால், உணவு உண்ணும் எண்ணம் இல்லாமல் போவது மட்டுமே  உடல் எடை குறைய காரணம் அல்ல. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போவது, உடலின் பாகங்கள் சேதமடைவது என பல்வேறு காரணங்களால் புற்றுநோய் பாதித்தவர்கர்ளின் உடல் எடை கிடுகிடுவெனக் குறைகிறது.


அந்த வகையில், தற்போது பசியின்மையை போக்க 2 ரூபாய்க்கு மருந்து கொடுக்கும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை புற்றுநோய் நோயாளிகள் மட்டுமல்ல, அனைவரும் பாராட்டுகின்றனர்.  


மேலும் படிக்க | கீரைகளில் சிறந்தது எது? தயக்கமே இல்லாமல் வரும் ஒரே பதில் முருங்கைக்கீரை தான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ