Figs: நோய்களை போக்கும் அத்தியின் நன்மைகள்! ஆண்மைக் குறைவை சீராக்கும் அற்புதமான பழம்

Figs For Health: அத்திப்பழங்கள் சுவையான மற்றும் ஆரோக்கியமான பழங்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இடம் பிடித்துவிடும். பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள அத்திப்பழம், எந்தெந்த நோய்களை போக்கும் தெரியுமா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 22, 2023, 05:52 PM IST
  • சுவையான மற்றும் ஆரோக்கியமான பழங்களின் பட்டியல்
  • அத்திப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்
  • ஊட்டச்சத்து மிகுந்த அத்திப்பழம்
Figs: நோய்களை போக்கும் அத்தியின் நன்மைகள்! ஆண்மைக் குறைவை சீராக்கும் அற்புதமான பழம் title=

அத்திப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்: சுவையான மற்றும் ஆரோக்கியமான பழங்களில் அத்திப்பழங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. அத்திப்பழங்களைப் பச்சையாகவோ அல்லது உலர வைத்தோ சாப்பிடலாம்.  உலரவைத்துப் பயன்படுத்தும் அத்திப்பழம், வெகுநாட்கள் வரை பலன் கொடுக்கும். அத்தி பழங்களில் ஊட்டச்சத்து மிகுந்தவை.  அத்தியில், வைட்டமின்களில், ஏ, சி, பி, கே உள்ளது. மேலும், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, காப்பர், ஜிங்க், மான்கனீஸ் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.

இதய நோய்கள்   
நமது உடலில் ஆரோக்கியமாக இருக்க வேண்டிய உறுப்புகளில் ஒன்று இதயம் என்று சொல்வதற்கு காரணம், உடலின் அனைத்து பாகங்களுக்கும் ரத்தத்தை பாய்ச்சும் பணியை செய்வது தான். இதயம் ரத்தத்தையும், ஆக்சிஜனையும் உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லாவிட்டால் என்ன ஆகும்? இதயம் ஆரோக்கியமாக இருக்க அத்திப்பழங்களை சாப்பிட வேண்டும். இதில் உள்ள பீனோல் மற்றும் ஒமேகா-6 இதயத்தை வலுப்படுத்துகின்றன.
 
உடலை ஒல்லியாக்க அத்தி

உடல் எடை அதிகரிக்காமல் இருக்க சரியான உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையை கடைபிடிப்பது அவசியம். நார்ச்சத்துள்ள  அத்திப்பழத்தை தினசரி நான்கு அல்லது ஐந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடை அதிகரிக்காது.  

மேலும் படிக்க | Year Ender: சமூக ஊடகங்களில் உடல்நலம் & உடற்பயிற்சி பற்றிய வித்தியாசமான தேடல்கள்

மலச்சிக்கலைப் போக்கும் அத்திப்பழம்  

உலர் அத்திப்பழங்களையோ அல்லது அத்திப்பழ ஜூஸ் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும். மலச்சிக்கல் இல்லாமல் இருந்தாலே, உடலில் பல நோய்கள் வராமல் உடல் அரோக்கியம் மேம்படும்.

மூலநோயை போக்கும் அத்திப்பழம் 
மூலம் நோய் நாட்பட்ட மலச்சிக்கல் மற்றும் உஷ்ணம் நிறைந்த சூழல்களில் அதிகம் இருப்பதாலும், உலகின் வெப்பத்தை அதிபடுத்தும் உணவு பொருட்களை அதிகம் உண்பதாலும் ஏற்படுகிறது. மூல நோயில் பல வகைகள் உண்டு. எந்த வகை மூல நோயாக இருந்தாலும் உலர் அத்திப்பழங்கள் மற்றும் அத்திப்பழ ஜூஸ் அதிகம் சாப்பிட்டு வந்தால் மூல நோய் பிரச்சனை விரைவில் குணமாகும்.

கொலஸ்ட்ராலை குறைக்கும் அத்திப்பழம்   
உடலில் கொழுப்புகள் அளவுக்கு அதிகமாக சேர்ந்து விடுவதால் ஏற்படும் கொலஸ்ட்ரால் பிரச்சனையை போக்க அத்திப்பழங்களை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. இதிலுள்ள பெக்டின் எனப்படும் நார்ச்சத்து பொருள், உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து கொலஸ்ட்ரால் அளவை சமப்படுத்துகிறது.

புற்று நோயைப் போக்கும் அத்திப்பழம்   
வயிற்றில் ஏற்படும் புண்கள், அமில சுரப்பு குறைபாடுகள் போன்ற்வற்றை சரி செய்வதில் அத்திபழங்கள் நன்றாக செயலாற்றுகின்றன. பெருங்குடலில் தங்கியிருக்கும் சில நச்சுக்களால் பெருங்குடலில் புற்று நோய் ஏற்படாமல் தவிர்க்க அடிக்கடி அத்திப்பழத்தை உணவில் சேர்த்து வர வேண்டும். 

மேலும் படிக்க | குளிர் காலத்தில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சூப்பர் டிப்ஸ்

கல்லீரல் பாதுகாப்புக்கு அத்திப்பழம்
 கல்லீரல் வீக்கத்தை போக்க சில அத்திப்பழங்களை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வரலாம். கல்லீரலில் சேர்ந்திருக்கும் போதை பொருட்களின் நச்சுக்களை நீக்கும் அத்திப்பழம் என்பதால், மது, புகைப்பழக்கம் போன்ற பழக்கங்கள் உள்ளவர்கள் தினசரி அத்திப்பழத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் அத்திப்பழம்  

ரத்தத்தில் பல வகையான உப்புகள் கலந்திருக்கின்றன. அதில் சோடியம் அளவு அதிகமாகவும், பொட்டாசியம் உப்பின் அளவு குறைவாகவும் இருக்கும் போது ரத்த அழுத்தம் மற்றும் உயர் ரத்த அழுத்தம் பிரச்சனைகள் ஏற்படுகிறது. அத்திப்பழங்களை அடிக்கடி சேர்த்து வந்தால், ரத்தத்தில் உள்ள உப்புகளின் அளவு சமநிலை பெற்று ரத்த அழுத்தம் சீராகிறது.

உடலை வலுவாக்கும் அத்திப்பழம்
உடலில் சிலருக்கு வலுவில்லாமல் இருப்பதால் தொடர்ந்து வேலை செய்வது கடினமாக இருக்கும்.  தினமும் இரவில் பசும்பாலில் சில காய்ந்த அத்திப்பழங்களை ஊற வைத்து காலையில் அப்பழங்களை சாப்பிட்டு அப்பாலை அருந்தினால் உடல் பலம் பெற தொடங்கும். நரம்பு சம்பந்தமான குறைபாடுகளும் நீங்கும். இது, ஆண்மைக் குறைவை சீராக்கும் அற்புதமான பழம்

கண்பார்வையை மேம்படுத்தும் அத்திப்பழம் 
கண்களின் பார்வை திறன் தெளிவாக இருக்க வைட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை மிகவும் முக்கியமாகும் அத்திப்பழங்களில் இந்த சத்துக்கள் அனைத்தும் அதிகம் இருப்பதால் வாரத்திற்கு இருமுறையாவது சாப்பிடுவது கண்பார்வை மேம்பட உதவும்.

மேலும் படிக்க | குளிர்காலத்தை ஆரோக்கியமாக அனுபவிக்க பேரிச்சம்பழத்தை இந்த காம்பினேஷனில் சாப்பிடலாமே?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News