புதுடெல்லி: வயிற்றுக்கும், ஆரோக்கியத்திற்கும் முக்கியமானவை சாலடுகள். சாலடுகளுக்கு சுவையூட்டும் பொருட்கள் (Salad Dressing) என்றாலே நம் நினைவுக்கு வருவது சில பொருட்கள் தான்.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாலடுகளை பயன்படுத்துவது என்பது, இன்றல்ல, இந்திய பாரம்பரியத்தில் பல காலமாக தொடர்வது என்பது ஆச்சரியமாக இருக்கிறதா?


உண்மையில் இந்திய உணவுகளில் சாலடுகளுக்கு இடம் கொஞ்சம் குறைவு என்றாலும், அவற்றுக்கு முக்கிய இடம் உள்ளன. ஊட்டச்சத்து நிபுணர் ஸ்மிதா ஷெட்டி பகிர்ந்துள்ள சில ஆரோக்கியமான சாலட் டிரஸ்ஸிங்கள் இவை.


இந்தியா முழுவதுமே உணவுகளின் இறுதியில் தாளித்து கொட்டும் பழக்கம் உள்ளது. அதேபோல சாலட்களில் இறுதியில் சேர்க்கப்படும் சில பொருட்கள் அவற்றின் சுவைகள் மேலும் மேம்படுத்தும்.


மேலும் படிக்க | எடை இழப்புக்கான அடுப்பங்கரை மசாலாக்கள்


ஆனால், இவை சாலட்டின் ஊட்டச்சத்தை குறைக்காமல் அப்படியே இருக்கச் செய்யும். அதேபோல, இந்திய சாலடுகளிலும் தாளிப்பு என்ற விஷயம் சுவையூட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.


தாளிப்புக்கு பயன்படுத்தப்படுவது எண்ணெய் என்றாலும், அது இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. தாளிக்க பயன்படுத்தப்படும் பொருட்களும் ஒருவர் இருக்கும் பகுதியை அடிப்படையாகக் கொண்டது.


நாட்டின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதைப் பொறுத்து தேங்காய், கடுகு, எள் அல்லது வேர்க்கடலை ஆகியவற்றின் எண்ணெய் தாளிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறது.


மேலும் படிக்க | அடடா பார்லியில் இத்தனை ஊட்டச்சத்து இருக்கா: தெரியாம போச்சா


இந்த எண்ணெய்களில் MUFA மற்றும் PUFA போன்ற நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது, இவை இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுவதோடு, உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது.


இந்தியாவின் மிகச் சிறந்த சாலட் சுவையூட்டிகள் இவை:


எலுமிச்சை: கோடையின் சிறந்த உணவு மட்டுமல்ல, சாலட்களுக்கு சிறந்த சுவையையும் சேர்க்கிறது எலுமிச்சை. எலுமிச்சை இந்தியர்களின் உணவுகளில் முக்கியமான இடம் பிடித்துள்ளது.


எலுமிச்சையில் அதிக அளவு கரையக்கூடிய நார்ச்சத்து, தாவர கலவைகள் மற்றும் வைட்டமின் சி ஆகியவை உள்ளன, அவை அவற்றை மிகவும் தனித்துவமாக்குகின்றன. எலுமிச்சை செரிமானம் ஆனதும், அது சரியான PH அளவை உருவாக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 



தேங்காய்


தேங்காய் தற்போதைய காலத்தின் மேற்கத்திய சூப்பர்ஃபுட் ஆகும். இந்தியாவில், குறிப்பாக கடலோரப் பகுதி முழுவதும் தென்னை மரங்கள் உள்லன. தேங்காய் சிறந்த சுவையை மட்டுமல்ல, இயற்கையிலேயே குளிர்ச்சியை தரும் பண்பையும் தருகிறது.


தேங்காய் இரத்த சர்க்கரையை நன்றாக நிர்வகிக்க உதவுகிறது. இது வீக்கம் மற்றும் மலச்சிக்கலை தடுக்கிறது. இது அல்சைமர் ஆபத்தை குறைக்கிறது, நிச்சயமாக, இது எடை இழக்க உதவுகிறது.


தயிர்: தயிர் மிகவும் சுவையான சாலட் டிரஸ்ஸிங்குகளில் ஒன்றாகும். அதன் பெருமைகள் எல்லையற்றவை. சாலட்டில் சேர்க்கப்படும் தயிரால், சுவையான சாலாடாக அது மாறுகிறது. அழகான தோல் மற்றும் முடிக்கு அடிப்படை தயிர்.


பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்றுநோயை எதிர்த்துப் போராட தயிர் உதவுகிறது. அதிலும் பெண்களுக்கு கோடையில் தயிர் செய்யும் அற்புதங்கள் அளவற்றவை ஆகும்.


கொத்தமல்லி: கோடைகால ஸ்பெஷலிட்டியான கொத்தமல்லி இந்தியாவின் சாலட் டிரெஸ்ஸிங்கில் முக்கியமானது. காய்கறிகள் மற்றும் பருப்புகளில் இறுதியில் சேர்க்கப்படாவிட்டால், அவற்றின் முழு சுவையும் கிடைக்காது.


கொத்தமல்லியின் அழற்சி எதிர்ப்பு குணங்கள் குடலை பாதுகாக்கிறது மற்றும் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. முடி, தோல் மற்றும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.


மேலும் படிக்க | தொந்தியையும் கொழுப்பையும் குறைக்கும் உணவுகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQ