Barley Benefits: அடடா பார்லியில் இத்தனை ஊட்டச்சத்து இருக்கா: தெரியாம போச்சா

பார்லி ஊட்டச்சத்துக்கான ஆதாரமானது. பல நோய்களின் அபாயத்தைக் குறைக்க பார்லி பயன்படுத்தப்படுகிறது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 27, 2022, 02:28 PM IST
  • நார்ச்சத்து நிறைந்த பார்லியின் நன்மைகள்
  • ஊட்டச்சத்துக்களின் சுரங்கம் பார்லி
  • பார்லியின் மலகிளக்கப் பண்பு
Barley Benefits: அடடா பார்லியில் இத்தனை ஊட்டச்சத்து இருக்கா: தெரியாம போச்சா title=

பார்லி ஊட்டச்சத்துக்கான ஆதாரமானது. பல நோய்களின் அபாயத்தைக் குறைக்க பார்லி பயன்படுத்தப்படுகிறது.

இதய நோய் மற்றும் கொழுப்பைக் குறைப்பதில் பார்லி மிகவும் பிரபலமானது. அதுமட்டுமல்ல, நீரிழிவு, உடல் பருமன், புற்றுநோய் எதிர்ப்பு திறன்களையும் கொண்டது பார்லி. 

பார்லி உணவு தானியமாகவும், இயற்கை இனிப்பூட்டும் தானியமாகவும் உள்ளது. மதுபானங்கள் தயாரிப்பதற்கும் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது பார்லி.

மேலும் படிக்க | இதய நோயாளிகளுக்கான ஆரோக்கியமான எடை இழப்பு உணவுகள்

பார்லியின் ஆரோக்கிய நன்மைகள்
ஆரோக்கியமான வாழ்வுக்கு பார்லியை தொடர்ந்து உண்பது நல்லது. இதிலுள்ள அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் உடல் எடையையும் குறைக்கும்.

எடை குறைக்கும் பார்லி
கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளபார்லி, பசியை குறைக்க உதவுகிறது. சாப்பிட்டவுடன் நீண்ட நேரம் பசியெடுக்காது என்பதால், எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. 

பார்லியில் உள்ள பீட்டா-குளுக்கன் போன்ற கரையக்கூடிய நார்ச்சத்துகள், வயிற்றில் ஜெல் போன்ற பொருளை உருவாக்குகின்றன. இது செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் செயல்முறையை மெதுவாகிறது. இதன் விளைவாக, பசி அடக்கப்பட்டு வயிறு நிறைந்திருக்கும் உணர்வே இருக்கும்.

மேலும் படிக்க | எடை இழப்பு டிப்ஸ்: வெறும் வயிற்றில் பெருங்காயம் + தேன் செய்யும் மேஜிக்

செரிமானத்தை மேம்படுத்தும் பார்லி
தி அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, பார்லியில் கரையாத நார்ச்சத்து அதிகம் உள்ளது, இதனால் மலத்தை இளக்க வைத்து, குடல் இயக்கம் துரிதமாவதால், மலச்சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

கொலஸ்ட்ராலை குறைக்கும் பார்லி
பார்லியில் காணப்படும் பீட்டா-குளுக்கன்கள் பித்த அமிலங்களுடன் சேர்ந்து, கெட்ட "எல்டிஎல்" கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. புதிய பித்த அமிலங்களை உருவாக்க உங்கள் கல்லீரல் அதிக கொலஸ்ட்ராலைப் பயன்படுத்த வேண்டியிருப்பதால், ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைகிறது.  

நீரிழிவு நோயிலிருந்து பாதுகாப்பு
இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதன் மூலமும், இன்சுலின் சுரப்பை அதிகரிப்பதன் மூலமும், பார்லி வகை 2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்கலாம். இது பார்லியின் அதிக மெக்னீசியம் செறிவு காரணமாகும்.

மேலும் படிக்க | தொந்தியையும் கொழுப்பையும் குறைக்கும் உணவுகள்

இன்சுலின் தொகுப்பு மற்றும் உடலில் சர்க்கரை பயன்பாட்டிற்கு உதவும் கனிமமான மெக்னீசியம்,  பார்லியில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துடன் இணைந்து  ​​நீர் மற்றும் பிற மூலக்கூறுகளுடன் பிணைந்து, உங்கள் இரத்த ஓட்டத்தில் சர்க்கரையை உறிஞ்சுவதைக் குறைக்கிறது.

ஒரு ஆய்வின்படி, ஓட்ஸ் போன்ற மற்ற முழு தானியங்களைக் கொண்ட உணவை விட பார்லியுடன் கூடிய காலை உணவு என்பது, இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவுகளில் சிறிய அதிகபட்ச உயர்வைக் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் பார்லி
இதய நோய்கள் உலகம் முழுவதும் இறப்புகளுக்கு முக்கிய காரணமாக அறியப்படுகிறது. இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் பல காரணிகள் உள்ளன.

இதய நோய்களின் இரண்டு முக்கிய ஆபத்து காரணிகள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகள் ஆகும். பார்லியில் இந்த காரணிகளின் ஆபத்தை குறைக்க உதவும் பண்புகள் உள்ளன, இதனால் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

மேலும் படிக்க | எடை இழப்புக்கான அடுப்பங்கரை மசாலாக்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQY

Trending News