How to stop bleeding in gums: ஈறுகளில் இரத்த கசிவு என்பது ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சனையாகும். இது பலரை பாதிக்கிறது. பல்வலி, நாக்கில் வீக்கம் அல்லது பற்களில் உள்ள குழிவு பிரச்சனை போன்றவற்றால் இந்த பிரச்சனை ஏற்படலாம். உங்களுக்கும் ஈறுகளில் இரத்தக் கசிவு இருந்தால், அதற்கு சில எளிய வீட்டு வைத்தியங்களை கடைபிடிப்பது பலன் தரும். பற்கள் ஆரோக்கியமாக இல்லைஎன்றால், இரத்தக் கசிவு ஏற்படும். எனவேதான் சிலருக்கு பிரெஷ் கொண்டு பல் துலங்கினாலே இரத்தக் கசிவு ஏற்படும். இது தவிர வைட்டமின் C மற்றும் k குறைபாடு, ஈறுகளில் தொற்று, சரியான பராமரிப்பின்மை, அதிகமாக புகையிலை உட்கொள்ளுதல், ஆகியவற்றாலும் ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்படும். எனவே அது சாதாரணமாக விஷயமாகக் கருதாமல் உடனடி தீர்வு காண்பது அவசியம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஈறுகளில் இரத்த கசிவை நிறுத்த உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்களை (Teeth Health) பற்றி அறிந்து கொள்ளலாம்.


ஈறுகளில் இரத்த கசிவை நிறுத்துவது எப்படி?


1. உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிக்கவும்


உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிப்பது ஈறுகளில் இரத்தப்போக்கின நிறுத்த உதவும். ஈறுகளின் வீக்கத்தைக் குறைக்கவும் இந்த மருந்து உதவுகிறது.


2. வேப்ப எண்ணெய்


ஈறுகளில் இரத்தப்போக்கை நிறுத்துவதில் வேப்ப எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. இரவு தூங்கும் முன் ஈறுகளில் தடவி காலையில் கழுவி விடலாம்.


மேலும் படிக்க | அசிங்கமான மஞ்சள் நிற பற்களை நொடியில் வெள்ளையாக்க இந்த வீட்டு வைத்தியம் போதும்


3. அலோ வேரா சாறு


கற்றாழை சாறு ஈறுகளில் இரத்தப்போக்கு நிறுத்த உதவுகிறது. கற்றாழை இலைகளை வெட்டி அதிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றை ஈறுகளில் தடவலாம்.


4. பிரெஷ்ஷான பழங்கள் மற்றும் காய்கறிகள்


புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது ஈறு ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதன் மூலம், உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்து, ஈறுகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.


5. தண்ணீர்


ஈறு ஆரோக்கியத்திற்கு போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் முக்கியம். சரியான அளவில் தண்ணீரை உட்கொள்வது உங்கள் உடலின் புத்துணர்ச்சி அளவை பராமரிக்கிறது மற்றும் ஈறுகள் சரியாக செயல்பட உதவுகிறது.


முறையாகப் பல் துலக்காத நிலையில், பல் இடுக்குகளில் உணவுத் துணுக்குகள் தங்கி பாக்டீரியாக்கள் பெருகுகின்றன. இதனால் அழுக்கு ஒரு மெல்லிய படலமாகப் படிந்து, காரை ஏற்பட்டு ஈறுகளைப் பாதிக்கிறது. பின்னர் இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இந்த நிலையில் ஈறுகள் வீங்கி விடும். சிவப்பாகவும் காணப்படும். சிலருக்கு வாய் துர்நாற்றமும் இருக்கும். ஆனால், வலி இருக்காது. சில சமயங்களில், தாய்மை அடைந்த காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், ஸ்கர்வி போன்ற நோய்கள் இரத்த சோகை போன்றவையும் இத்தகைய பாதிப்புக்குக் காரணமாக அமையலாம்.


பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்குத் தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் எடுத்துள்ளோம். உங்கள் உடல் நலம் தொடர்பான எதையும் நீங்கள் எங்கும் படித்தால், அதை ஏற்றுக்கொள்ளும் முன் கண்டிப்பாக மருத்துவரை அணுகவும்.


மேலும் படிக்க | அதிக யூரிக் அமிலத்தால் அவதிப்படறீங்களா? அப்போ உடனடியாக இதை செய்யுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ