கல்லீரலை மெல்ல கொல்லும் ‘இந்த’ உணவுகளுக்கு ‘NO’ சொல்லுங்க!
கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால் உடலில் பல செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்கும். நம் உடலில், மீண்டும் வளரக் கூடிய ஒரேயொரு உள்ளுறுப்பு என்றால் அது கல்லீரல் மட்டுமே.
கல்லீரல் என்பது செரிமான அமைப்பின் ஒரு முக்கியமான உறுப்பு ஆகும். கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால் உடலில் பல செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்கும். நம் உடலில், மீண்டும் வளரக் கூடிய ஒரேயொரு உள்ளுறுப்பு என்றால் அது கல்லீரல் மட்டுமே. உடலில் புரதங்கள், கொலஸ்ட்ரால் மற்றும் பி த்த உற்பத்தி முதல் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை சேமித்து வைப்பது வரை பல முக்கிய செயல்பாடுகளைச் செய்யும் ஆற்றல்மிக்க உறுப்பு கல்லீரல். எனவே, ஆரோக்கியமான கல்லீரலுக்கு என்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.
வாழ்க்கை முறை மோசமாக இருக்கும் போது அல்லது உணவில் அலட்சியம் காட்டுவது போன்றவற்றால், கல்லீரலில் பாதிப்பு ஏற்படுகிறது. கல்லீரலில் நோய் ஏற்பட்டால் அது உடலின் இயக்கத்தைப் பாதிக்கிறது. அதிலும், உடல் எடை அதிகரிப்பதால் ஏற்படும் பல்வேறு நோய்களில் மிகவும் பொதுவானது கல்லீரல் பாதிப்பு என்று சொல்லலாம்.
மைதா
மைதா மாவில் செய்யப்பட்ட உணவுகள் சுவையானது தான். ஆனால் தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் இல்லாத மைதாவை சாப்பிடுவதை நீங்கள் தவிர்க்க வேண்டும். இது கல்லீரலுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி இவற்றை உட்கொள்வதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கலாம்.
உப்பு
அதிக உப்பை சாப்பிடுவதும் கல்லீரலை சேதப்படுத்தும். உப்பில் சோடியம் உள்ளது. அதிக உப்பை உண்பதால் உடலில் கூடுதல் நீர் தேங்குகிறது. இதனால், கல்லீரலில் வீக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. கொழுப்பு கல்லீரல் மற்றும் கல்லீரல் ஈரல் அழற்சியின் விஷயத்தில் உப்பு தவிர்க்கப்படுவதற்கு இதுவே காரணம்.
மேலும் படிக்க | குழந்தையின் மூளை கம்ப்யூட்டரை போல் இயங்க வைக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!
குளிர் பானங்கள் மற்றும் சோடா
குளிர் பானங்கள் மற்றும் சோடா கல்லீரலில் பிரச்சனையை ஏற்படுத்தும். இவற்றில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. அவை கல்லீரலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும். இவை உடல் பருமனை அதிகரிக்கின்றன.
வலி நிவாரண மாத்திரைகள்
அளவிற்கு அதிகமான வலி நிவாரணிகள் கல்லீரலில் மிகவும் மோசமான விளைவையும் ஏற்படுத்துகின்றன. இத்தகைய மருந்துகளை நீண்ட நேரம் உட்கொண்டால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும். மனச்சோர்வு மருந்தும் சில நேரங்களில் இதற்கு காரணமாகிறது. மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளும் தவறை செய்யாதீர்கள்.
துரித உணவுகள்
துரித உணவுகளும் கல்லீரல் பாதிக்கப்படுவதற்கு ஒரு பெரிய காரணமாகும். துரித உணவுகள் நீண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்க அவற்றில் அஜினோமோட்டோ பயன்படுகிறது. இதனை பயன்படுத்துவதினால் உங்கள் கல்லீரலின் செயல் திறன் பலவீனமடைகிறது.
சர்க்கரை
பலர் இனிப்புகளை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் உடல் பருமனை அதிகரிக்க சர்க்கரை வேலை செய்கிறது. இதனுடன், இது கல்லீரலையும் அதிக அளவில் சேதப்படுத்தும். எனவே, சர்க்கரையை சாப்பிட அதிகம் விரும்புகிறீர்கள் என்றால், கவனமாக இருங்கள். ஏனெனில் சர்க்கரை ஆல்கஹாலை போலவே கல்லீரலை சேதப்படுத்தும்.
மது அருந்துதல்
அதிகப்படியான ஆல்கஹால் கல்லீரலை மோசமாக பாதிக்கிறது. தினமும் மது அருந்தினால், அது உங்கள் கல்லீரலை சேதப்படுத்தும். இதனால் ரத்த வாந்தி, மஞ்சள் காமாலை, புற்றுநோய் போன்ற பிரச்னைகள் ஏற்படும். அதனால் மது அருந்தக் கூடாது.
மேலும் படிக்க | மூளையை பலவீனமாக்கும் விட்டமின் B12 குறைபாடு! தவிர்க்க சாப்பிட வேண்டியவை!
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ