முதுமையை தள்ளிப்போட வேண்டுமா; ‘இந்த’ பழக்கங்களுக்கு ‘No’ சொல்லுங்க!
இளம் வயதிலேயே முதுமையின் இந்த அறிகுறிகள் தோன்றுவதற்கு, நமது சில பழக்கங்களே முக்கிய காரணம் இதைத் தவிர்க்க, சில பழக்கங்களை நாம் கைவிட வேண்டும்.
உலகில் எந்த சக்தியும் முதுமையை தடுத்து நிறுத்த முடியாது என்பது உண்மை தான். ஆனாலும் முதுமை வருவதை ஒத்தி போட முடியும். இன்றைய காலகட்டத்தில், இளைஞர்கள் பலர் சீக்கிரமே முதியவர் போல் தோற்றமளிப்பதையும் பார்க்கிறோம். முதுமைக்கான அறிகுறிகளான, உடல் பலவீனம், தோலில் சுருக்கங்கள், பொலிவிழந்த சருமம், நரை முடி, வழுக்கை, நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் இளைஞர்களை சீக்கிரமே தாக்குகின்றன.
இளம் வயதிலேயே முதுமையின் இந்த அறிகுறிகள் தோன்றுவதற்கு, நமது சில பழக்கங்களே முக்கிய காரணம் இதைத் தவிர்க்க, சில பழக்கங்களை நாம் கைவிட வேண்டும்.
1. கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகள், வொர்க் ப்ரம் ஹோம் கலாச்சாரம் காரணமாக, குழந்தைகள் மடிக்கணினிகள், மொபைல்கள் மற்றும் டிவி திரைகளில் அதிக நேரம் செலவிடுகிறர்கள், இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை கம்ப்யூட்டர் முன்னால் மணிக்கணக்கில் அமர்ந்திருக்கிறார்கள். இதன் காரணமாக மன அழுத்தம், உடல் பருமன், மனச்சோர்வு போன்ற பிரச்சினைகளால் உங்கள் உடலை பாதிக்கும். இதனை முழுமையாக தவிர்ப்பது இயலாத காரியம் என்றாலும், முடிந்த அளவு அதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
2. இளம் வயதிலேயே, குறிப்பாக பள்ளிப்பருவத்திலேயே புகைப் பிடிக்கும் பழக்கத்திற்கு சிலர் ஆளாகின்றனர். புகையிலையில் உள்ள நச்சுகள் சருமத்தின் ஆக்ஸிஜனேற்றத்தை பாதிக்கின்றன. அதனால் சருமம் உயிரற்ற வறண்ட சருமாக மாறி, சுருக்கங்கள் உண்டாகி, முதுமை தோற்றம் ஏற்படுகிறது.
மேலும் படிக்க | Cancer: புற்று நோய் அண்டாமல் இருக்க ‘இந்த’ மசாலாவை உணவில் தினமும் சேர்க்கவும்!
3. ஆல்கஹால் மற்றும் காஃபின் அதிகம் எடுத்துக் கொள்வதால், உடலில் உள்ள நீர் சத்து பெருமளவில் குறைகிறது. அதிகப்படியான ஆல்கஹால் அல்லது காஃபின் காபியை அதிகம் உட்கொள்வதால், செல்கள் உயிரிழந்து உங்கள் தோல், முடி மற்றும் பிற உறுப்புகள் பலவீனமடையத் தொடங்குகின்றன.
4. சிலருக்கு எல்லாவற்றையும் மனதில் போட்டுக் கொண்டு அதிகம் சிந்திக்கும் பழக்கம் உண்டு. இது மன அழுத்த பிரச்சினைகளை ஏற்படுத்தும். மன அழுத்தம் உங்கள் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். உடலில் மன அழுத்த ஹார்மோன்கள் அதிகம் சுரந்தால், அதனால், முதுமை விரைவில் உங்களை ஆட்கொள்ளும்
5. சூரிய ஒளி நிச்சயம் உடலுக்கு தேவை. ஆனால், உங்கள் தொழில் அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் வெயிலில் அதிக நேரம் செலவிட்டால், அது உங்கள் சருமத்தை பாதிக்கும். மத்தியானம் வேளையில், கடுமையான சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதா கதிர்கள் உங்கள் சரும செல்களில் இருக்கும் மரபணுவை சேதப்படுத்தி, சருமம் கருத்து, சுருக்கங்களும் ஏற்படும். இதை தவிர்க்க சன்ஸ்கீரின் லோஷன் பயன்படுத்தவும்.
மேலும் படிக்க | தினம் ஒரு வெள்ளிரிக்காய் போதும்; புற்று நோயும் அஞ்சி ஓடும்..!!
6. ஆழ்ந்த தூக்கம் நம் உடலின் செல்களை புத்துயிர் பெறச் செய்கிறது. ஆரோக்கியமான உணவு செல்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது. இந்த காரணத்தால், குறைவான தூக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்ளும் நபர்கள் உடல், பல தோல் மற்றும் உடல் பிரச்சினைகளுக்கு விருந்தாகிறது. தினமும் 6-8 மணி நேரம் ஆழ்ந்து தூங்க வேண்டும். உங்கள் உணவில் புரதம், இரும்பு, கால்சியம், வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை சேர்க்க வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR