மஞ்சள்-பால் அருமருந்து தான்... ஆனால் ‘இந்த’ பிரச்சனை இருந்தால் NO சொல்லவும்!
சிறுவயதில் இருந்தே, மஞ்சள் பால் குடிப்பது மிகவும் நல்லது என பலர் கூற கேட்டிருப்போம். ஏனென்றால் மஞ்சள் பாலில் புரதம், கால்சியம், வைட்டமின் பி போன்ற வைட்டமின்கள் போன்ற பல அத்தியாவசிய ஊட்ட சத்துக்கள் காணப்படுகின்றன.
சிறுவயதில் இருந்தே, மஞ்சள் பால் குடிப்பது மிகவும் நல்லது என பலர் கூற கேட்டிருப்போம். ஏனென்றால் மஞ்சள் பாலில் புரதம், கால்சியம், வைட்டமின் பி போன்ற வைட்டமின்கள் போன்ற பல அத்தியாவசிய ஊட்ட சத்துக்கள் காணப்படுகின்றன. ஆனால் அனைவருக்கும் மஞ்சள் பால் ஏற்றதாக இருக்கும் என கூற இயலாது. சிலருக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அத்தகைய சூழ்நிலையில், எந்தெந்த நபர்கள் மஞ்சள் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
கீழ்கண்ட பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சள் பால் குடிக்கக் கூடாது:
சிறுநீரக நோயாளிகள்
சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், மஞ்சள் பால் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். மஞ்சளில் ஆக்சலேட் இருப்பதால், சிறுநீரகம் தொடர்பான நோய்கள் தீவிரமடைந்து, உங்களுக்கு கடுமையான பிரச்சனைகள் ஏற்படலாம்.
மேலும் படிக்க | நோய்களை ஓட விரட்டும் இந்த ‘மேஜிக்’ மசாலாக்கள் தினசரி உணவில் இருக்கட்டும்!
செரிமான பிரச்சனை உள்ளவர்கள்
வயிற்றில் வாயு, வீக்கம், நெஞ்செரிச்சல் போன்ற செரிமானப் பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால், மஞ்சள் பால் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் மஞ்சள் கலந்த பாலை குடித்தால் செரிமான பிரச்சனை அதிகரிக்கும்.
இரத்த சோகை உள்ளவர்கள்
மஞ்சள் பால் உட்கொள்வது உடலில் இரும்புச்சத்தை உறிஞ்சும் சக்தியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்காமல் போகலாம். எனவே, இரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், மஞ்சள் பாலை உட்கொள்வதை தவிர்க்கவும்.
இரத்த சர்க்கரை அளவு குறைவாக உள்ளவர்கள்
இரத்தச் சர்க்கரை அளவு குறைவாக உள்ள நோயாளிகள் மஞ்சள் பாலை உட்கொள்ளக் கூடாது. ஏனெனில் மஞ்சளில் குர்குமின் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை மேலும் குறைக்கும். எனவே, குறைந்த இரத்த சர்க்கரை உள்ள நோயாளிகளின் பிரச்சனை மேலும் அதிகரிக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ