உண்மையில் நமக்கு கொரோனா தடுப்பு மருந்து தேவையா... வல்லுநர்களின் கருத்து என்ன...
நமக்கு கொரோனா தடுப்பு மருந்து தேவையில்லை என்று அறிவியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் COVID-19 தொற்று காரணமாக இறந்தவர்கள் ஏற்கனவே ஏதோ ஒரு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களாக இருந்துள்ளனர் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கொரோனா என்பது அவரது மரணத்திற்கு உடனடி காரணமாக இருக்கலாம், ஆனால் அது தான் ஒரே காரணம் அல்ல.
அதனால், நமக்கு கொரோனா தடுப்பூசி தேவையில்லை என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
புதுடெல்லி (New Delhi): கொரோனா வைரஸ் (Coroana virus) தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொற்று நோய்க்கான மருந்தைத் தயாரிக்க உலகம் முழுவதிலும் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் மருந்து நிறுவனங்கள் இரவும் பகலும் உழைத்து வருகின்றனர்.
ALSO READ | நம் சித்தர்கள் தந்த அற்புத யுக்தி..... கொரோனாவை துரத்தும் ஆற்றல் மிக்க சக்தி...!!!
ஆனால் இதற்கிடையில், பிரிட்டிஷ் விஞ்ஞானி ஒருவர் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட மக்களுக்கு தடுப்பு மருந்து தேவை இல்லை என்று கூறியுள்ளார். தடுப்பு மருந்து இல்லாமலேயே மக்கள் இந்த வைரஸிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம் என்கிறார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி (vaccine) தேவையில்லை என்று இங்கிலாந்தின் பேராசிரியர் சுனேத்ரா குப்தா கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவியதிலிருந்து, தொற்று ஏற்பட்ட பலர் இறப்பதை நாம் பார்க்கிறோம். ஆனால், அதே சமயம் பெரும்பாலான மக்களுக்கு, இந்த வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது.
ALSO READ | தஞ்சையில் பெண் மருத்துவரை பலிவாங்கிய கொரோனா
இதன் காரணமாக கொரோனா வைரஸ் தானே முடிவுக்கு வரும். இந்த வைரஸால் இறந்தவர்கள் ஏற்கனவே உலகம் முழுவதும் ஏதோ ஒரு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அவரது மரணத்திற்கு உடனடி காரணமாக இருக்கலாம், ஆனால் ஒரே காரணம் அல்ல என்பது அவரது கருத்தாக உள்ளது.
உலகில் கொரோனா வைரஸுக்கு எந்த தடுப்பூசியும் தேவையில்லை என்று பேராசிரியர் குப்தா மேலும் விளக்கினார். மக்கள் இந்த வைரஸை தங்களாகவே வெற்றி கொள்வார்கள் என்கிறார். காய்ச்சலைப் போலவே, இந்த தொற்றுநோயும் தானாகவே ஒழிந்து விடும் என்றும் இதற்கு தடுப்பூசி தேவையில்லை என்றும் அவர் கூறுகிறார்.
தடுப்பூசி எந்த அளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்தும் பல ஆராய்ச்சிகள் உள்ளன. கோவிட் -19 தொற்றுநோயும் காய்ச்சல் போன்ற தொற்றுநோயாகும், இதற்கு சிறப்பு தடுப்பூசி எதுவும் தேவையில்லை.
இந்த கொடிய வைரஸ் காரணமாக இதுவரை உலகளவில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.