எதற்கெடுத்தாலும் ஆன்டிபயாட்டிக் எடுத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளதா... இந்த செய்தி உங்களுக்கு தான்
Side Effects of Antibiotic Medicine: நம்மில் பெரும்பாலானோர், சளி இருமல் காய்ச்சல் போன்ற நோய்களிலிருந்து விடுபட ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளது. நுண்ணுயிர் எதிர்ப்புகள் என்றும் அழைக்கப்படும் இந்த ஆன்டிபயாட்டிகளை, மருத்துவர் ஆலோசனை இல்லாமல், பலர் எடுத்துக் கொள்கின்றனர்.
நம்மில் பெரும்பாலானோர், சளி இருமல் காய்ச்சல் போன்ற சாதாரண நோய்களிலிருந்து விடுபட ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளது. நுண்ணுயிர் எதிர்ப்புகள் என்றும் அழைக்கப்படும் இந்த ஆன்டிபயாட்டிகளை, மருத்துவர் ஆலோசனை இல்லாமல், பலர் எடுத்துக் கொள்கின்றனர். உடல் நல பாதிப்பு ஏதேனும் இருந்தால், பார்மசியில் இருப்பவர்களிடம், உடல் பிரச்சினை எடுத்துக்கூறி, அவர்கள் தரும் மருந்துகளை சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது. இது மிகவும் ஆபத்தான பழக்கம். அடிக்கடி ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொள்வதாலும், அளவிற்கு அதிகமான ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதாலும் ஏற்படும் பாதிப்புகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
நுண்ணுயிர் எதிர்ப்புகள் என்னும் ஆண்டிபயாட்டிக் மருந்துகள், உடல்நலப் பிரச்சினைகளை தீர்க்கும் என்றாலும், மூக்கு ஒழுகுதல், தொண்டைப்புண் போன்ற சிறிய பிரச்சனைகளுக்கு கூட, ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது மிகவும் தவறு என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறும்போது, அவர்கள் உங்கள் உடல்நிலை (Health Tips) பார்த்து, உண்மையிலேயே தேவைப்படும் போது மட்டுமே அதை எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைப்பார்கள்.
மருத்துவர் ஆலோசனை இன்றி ஆண்ட்டிபயாடிக் மருந்துகளை கொள்ளக்கூடாது
ஆன்ட்டிபயாடிக் மருந்துகளை பொறுத்தவரை கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கிய விஷயம் என்னவென்றால், மருத்துவரின் ஆலோசனை இன்றி அதனை இஷ்டத்திற்கு உட்கொள்ளக்கூடாது. மருத்துவர் பரிந்துரைத்த கால அளவிற்கு மட்டுமே உட்கொள்ள வேண்டும். அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வதும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அதேபோல் சிலர், உடல்நிலை சரியாகி விட்டது என்று, ஆன்டிபயாட்டிக் முழுமையாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதுவும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். அதோடு ஆன்டிபயாட்டிக் சாப்பிடும் போது உணவு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் பக்க விளைவுகளை குறைக்கும் உணவுகள்
ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது, பொதுவாக வயிற்று பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த நேரத்தில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொண்டால், ஆன்டிபயாடிக் மருந்துகளால் ஏற்படும் பாதிப்பை குறைக்கலாம். உணவில் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், நட்ஸ், விதைகள், பருப்பு வகைகள் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். அவர் உங்கள் உடல் நிலைக்கு ஏற்ற உணவை பரிந்துரைப்பார்.
ஆய்வு ஒன்றில் வெளியான அதிர்ச்சி தகவல்
லேண்ட்செட் என்னும் மருத்துவ இதழில், ஆய்வு ஒன்று, சுமார் ஒன்றரை ஆண்டுகள் முன்பாக வெளியாகியிருந்தது. அதில் இந்தியர்கள், சுயமாக அதிக அளவில் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர் என்றும், இவை பெரும்பாலும் மதியம் மருந்துகள் தர கட்டுப்பாடு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாதவை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் மருத்துவர் பரிந்துரை இன்றி தாமாகவே மருந்துகள் எடுத்துக் கொள்வதால், சரியான அளவு டோஸ் நாம் எடுத்துக் கொள்ளாமல் போகும் நிலை ஏற்படும். இதனால் மருந்து எதிர்ப்பு திறன் உடலில் ஏற்பட்டு நோய் கிருமிகளின் வீரியம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். அதாவது எந்த மருந்து சாப்பிட்டாலும் நோய் குணமாகாத நிலை ஏற்படலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ