உடம்பில் ஏதேனும், வலி ஏற்பட்டால், டாக்டரிடம் செல்லாமல் தானே வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் பழக்கம் பலருக்கு உள்ளது. அருகில் உள்ள மருந்து கடைக்கு சென்று, அவர்களிடம் தாங்கள் அனுபவிக்கும் வலிக்கான மாத்திரைகளை பெற்றுக் கொண்டு சாப்பிடும் வழக்கம் இருப்பவை என்றால் இந்த செய்தி உங்களுக்கானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வலி நிவாரணிகள் உடலில் ஏற்படும் வலி, உபாதைகள், வீக்கம் ஆகியவற்றை தற்காலிகமாக மட்டுமே குறைக்கின்றன என்பதை அனைவரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். உங்களாகவே சாப்பிடும் வழி மாத்திரைகளால், ஓரளவுக்கு வலி நிவாரணம் கிடைத்தாலும், அந்த மருந்துகளின் அளவு அதிகமாகும் போது மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று சமீபத்தில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் கேம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கூறுகிறது.


வலி நிவாரணி மாத்திரைகளை எப்போதாவது எடுத்துக் கொண்டால் உடல் நலத்திற்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்று கூறியுள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழக அறிக்கை, அதன் அளவு அதிகரித்தால், உடல் நலத்தை மிக மோசமாக பாதிக்கும் எனக் கூறியுள்ளது. அதிலும் நீரழிவு நோயாளிகள் மற்றும் உயர் ரத்தம் அழுத்தம் நோயாளிகள், அளவிற்கு அதிகமான வலி நிவாரணிகள் உட்கொள்வதால் சிறுநீரகம் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


மருத்துவரின் பரிந்துரை மற்றும் மருந்து சீட்டு இல்லாமல், இப்யூபுரூஃபன், டிக்ளோஃபெனாக், நாப்ராக்ஸன் போன்ற ஸ்டெராய்ட் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள்  அதிகம் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஆஸ்பிரின், அசெட்டமினோஃபென் மற்றும் காஃபின் ஆகியவற்றுடன் கூடிய சில வலி நிவாரணி மருந்துகளும் எளிதில் கிடைக்கின்றன. இதன் விளைவாக, இந்த மருந்துகள் தலைவலி மற்றும் முதுகுவலிக்கு நிவாரணத்தை வழங்குகின்றன. ஆனால், வலி நிவாரணிகள் சிறுநீரகத்தை பல வழிகளில் பாதிக்கலாம்.


வலி நிவாரணிகளால் ஏற்படும் பாதிப்பு


வலி நிவாரணிகள் மருத்துவம் பரிந்துரை இல்லாமல் அதிக அளவில் எடுத்துக் கொள்ளப்படும் போது, அவை சிறிநீரகத்தை பெரிதும் பாதிக்கும். உடலில் பொட்டாசியம் கிரியேட்டினின் அளவும் அதிகரிப்பதால், சுவாசிப்பதில் சிரமம், வாந்தி, பசியின்மை மற்றும் உடல் முழுவதும் வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். 


மேலும் படிக்க | மலச்சிக்கலுக்கு மரண அடி கொடுக்கும் சூப்பர் டிரிங்க்! பல சிக்கல்களை போக்கும் பானம்!


சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க செய்ய வேண்டிவை


வைட்டமின் சப்ளிமெண்ட்ஸ் மற்றும் வலி நிவாரணிகள் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்


வலி நிவாரணிகள் மட்டுமல்ல, வைட்டமின் சப்ளிமெண்ட்ஸ் அல்லது மூலிகை சப்ளிமெண்ட்ஸ் ஆகியவை எடுத்துக்கொள்வதால் சிறுநீரக கற்கள் உருவாகலாம். எனவே, இவற்றைப் பயன்படுத்துவதற்கு முன், மருத்துவரை கலந்தாலோசிப்பது அவசியம். மருத்துவர் அலோசனை அல்லது மருந்து சீட்டு இல்லாமல், நீங்களாகவே மர்நுது எடுத்துக் கொள்வது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும்.


உடற்பயிற்சி


பொதுவாகவே, ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி மிக அவசியம். தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால், உங்கள் எடையும் கட்டுக்குள் இருக்கும் மற்றும் உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை இருக்காது. இதனால், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயாளிகள், சிறுநீரகம் பாதிக்கப்படமால் பாதுகாக்கலாம்.


ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்


உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் போன்ற நோய்களால் சிறுநீரக நோய்கள் ஏற்படுகின்றன. எனவே ஆரோக்கியமான உணவை உண்பது மிக அவசியம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | மருத்துவச் செலவுக்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு திட்டம் - பெறுவது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ