குழந்தைகளையும் பாடாய் படுத்தும் சிறுநீரகக் கல்! நொறுக்குத்தீனிக்கு நோ சொல்லுங்க பெற்றோர்களே!
Kidney Stones In Children : சிறுநீரகக் கல் என்பது இன்று அனைவருக்கும் வரும் நோயாக மாறிவிட்டது. குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை...
இன்றைய காலகட்டத்தில் பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் நோய்கள அதிகரித்து வருகின்றன. அதிலும் சிறுநீரக கற்கள் போன்ற மோசமான நோய்களும் சிறார்களுக்கும் ஏற்படுவது கவலை தருகிறது. இதுபோன்ற நோய்கள் ஏற்படுவதற்கான காரணத்தைத் தெரிந்துக் கொண்டு அவற்றை தவிர்த்தால், குழந்தைகள் ஆரோக்கியமாக வாழலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிறுநீரக நோய்கள் வேகமாக அதிகரித்து வருவதற்கு ஆரோக்கியமற்ற உணவு முறையே இதற்குக் காரணம். அதிலும் சிறுநீரகக் கல் என்பது இன்று அனைவருக்கும் வரும் நோயாக மாறிவிட்டது. குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை.
சிறுநீரகக் கல் என்றால் என்ன?
சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப் பாதையில் அளவுக்கு அதிகமான யூரிக் அமிலம், கால்சியம் போன்ற தாது உப்புகள் தேங்குவதால் உருவாகும் கற்கள் சிறுநீரகக்கற்கள் என்று அறியப்படுகின்றன. உண்மையில் இந்த பிரச்சனை ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால் சுலபமாக சரி செய்துவிடலாம். ஆனால் தாமதமாக கண்டறியப்பட்டால், சிறுநீரக கல்லை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உருவாகிவிடும்.
சிறுநீரக கல் ஏற்படுவதற்கான காரணங்கள்
உடலில் இருந்து வெளியேறும் கழிவுகளில் இருந்து உருவாகும் இரசாயனப் பொருட்கள் நீரில் கரைந்து சிறுநீராக வெளியேற வேண்டும். ஆனால், இரசாயனங்கள் வெளியேறாமல் சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப் பாதைகளில் சேரும்போது, அவை படிகமாக படிந்து கற்களாக மாறுகின்றன.
சிறுநீரக கற்கள் அளவுகளில் மாறுபடுகின்றன. சில நேரங்களில், சிறுநீர் பாதையில் உணரவோ கவனிக்கவோ முடியாத அளவுக்கு கல் சிறியதாக இருக்கும். உருவாகிய கல்லானது சிறுநீர் ஓட்டத்தைத் தடுக்கும் போது, சிறுநீர் வெளியேறுவதற்காக சிறுநீர்க்குழாய் விரிவடையும்போது தசைப்பிடிப்புகளை ஏற்படுத்துகிறது. இதனால் பெருங்குடலில் வலி உண்டாகிறது. பாதிக்கப்பட்ட பக்கத்தின் பக்கவாட்டுப் பகுதிகள், அடிவயிறு, இடுப்பு மற்றும் வயிற்று பகுதிகளில் வலி ஏற்படுகிறது.
மேலும் படிக்க | TasteAtlas: சுவையான காபிகள் பட்டியலில் இரண்டாவது இடம் தமிழ்நாட்டின் ஃபில்டர் காஃபிக்குத் தான்!
சிறுநீரக கற்களின் வகைகள்
அனைத்து சிறுநீரகக் கற்களும் ஒரே மாதிரியான படிகங்களால் உருவாவதில்லை. சிறுநீரக கற்களில் கால்சியம் கற்கள் மற்றும் கால்சியம் பாஸ்பேட் மற்றும் மெலேட் ஆகியவை கலந்து உருவாகும் கற்கள் உருவாகின்றன.
பொதுவாக அதுவும் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தில் உள்ளவர்கள், அதிக ஆக்சலேட் உள்ளடக்கம் உள்ள உணவுகளான சிப்ஸ், கார வகைகள், கீரை, சாக்லேட் ஆகியவற்றை உண்பதால் கற்கள் உருவாகின்றன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சில சிறுநீரகக் கற்கள் கால்சியத்தால் உருவானவை என்றாலும், உணவில் கால்சியம் போதுமான அளவில் இருப்பது சிறுநீரகக் கல் உருவாவதைத் தடுக்கிறது. ஆனால் உணவில் சோடியத்தை குறைப்பது கால்சியம் கற்கள் உருவாதைத் தடுக்க உதவுகிறது.
யூரிக் அமில கற்கள்
சிறுநீரகக் கற்கள் பிரச்சனை பெண்களுடன் ஒப்பிடுகையில், ஆண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. அதற்கு காரணம் உடல்வாகு என்றாலும், கீல்வாத பிரச்சினைகள் உள்ளவர்கள் மற்றும் கீமோதெரபி சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களுக்கும் யூரிக் அமிலத்தால் ஏற்படும் சிறுநீரக கற்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதேபோல கடுமையான அமிலத்தன்மை கொண்ட சிறுநீரும் கற்கள் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கிறது. சிறுநீரை அமிலமாக்கும் செயல்முறையில் பியூரின்கள் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, பியூரின்கள் அதிகம் கொண்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அதிலும் குறிப்பாக விலங்கு புரதங்களில் பியூரின்கள் அதிக அளவில் உள்ளன.
சிறுநீர் கல் பிரச்சனையை தவிர்க்க வழி
நமது உடலில் ஏற்படும் பலவகையான பிரச்சினைகளுக்கு தீர்வு தரக்கூடியது தண்ணீர் ஆகும். சிறுநீர் கல் பிரச்சனை இருப்பவர்கள், கல்லைக் கரைக்க அதிக அளவு தண்ணீரைக் குடிக்க வேண்டும். வழக்கத்தைவிட அதிக அளவு தண்ணீர் குடித்தால், அமிலத்தில் இருந்து உருவாகும் இராசயனங்கள் சிறுநீர் வழியே கரைந்து ஓடிவிடும். கல் கரைந்த பின்பும் கூட தினமும் 8 முதல் 12 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். நீர் மூலம் சிறுநீரக கற்களை எளிதாக கரைக்க முடியும்
குழந்தைகளுக்கும் சிறுநீரக கற்கள்
குழந்தைகளின் உணவுப் பழக்கம் சிறுநீரகத்தை பலவீனப்படுத்துகிறது. குழந்தைகளின் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகள் ஆகியவற்றால் சிறுநீரகம் பலவீனப்படுகிறது. இதனால் தான் குழந்தைகளுக்கு சிறுநீரக கற்கள் முதல் சிறுநீரக நோய்கள் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
உடற்பயிற்சி இல்லாமை
உடல் இயக்கம் மற்றும் உடற்பயிற்சி குறைவதால், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற பிற நோய்களும் மக்களில் அதிகரிக்கின்றன, இந்த நோய்கள் சிறுநீரகங்களை நேரடியாக பாதிக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஆகியவை சிறுநீரக கல் உருவாவதற்கு காரணமாகிறது.
சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க குறிப்புகள்
ஆரோக்கியமான சிறுநீரகம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்காக, தினசரி சில ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றவேண்டும்.
தினமும் உடற்பயிற்சி
அதிக பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ள ஆரோக்கியமான உணவை உண்பது
உணவில் உப்பின் அளவை குறைப்பது
அதிக சர்க்கரை கொண்ட இனிப்புப் பொருட்களை தவிர்ப்பது.
(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ