பொதுவாக உடலில் கொலஸ்ட்ரால் ஒன்று மட்டும் அதிகமாக இருந்தால் போதும், உங்களை தேடி பல நோய்களும் ஓடிவந்துவிடும்.  அதனால் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.  இனிமேல் வேர்க்கடலைகளை பயிர் செய்ய தொடங்கிவிடுவார்கள், பலருக்கும் வேர்க்கடலை என்றதும் சந்தேகம் வரும் ஒரே கேள்வி கொலஸ்ட்ரால் நோயாளிகள் வேர்க்கடலை சாப்பிடலாமா? கூடாதா? என்பது தான்.  பல கார்ப்பரேட் நிறுவனங்கள் நம்மை வேர்க்கடலை கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்று நம்ப வைத்துள்ளனர், ஆனால் உண்மையாகவே வேர்க்கடலை ஆரோக்கியமான ஒரு உணவுப்பொருள் தான்.  இருப்பினும் கொலஸ்ட்ரால் நோயாளிகள் எந்தவொரு பொருளையும் சாப்பிடுவதற்கு முன்னர் அவர்களது மருத்துவர்களிடம் ஆலோசனை செய்து கொள்வது நல்லது.  பொதுவாக வேர்க்கடலை மலிவான பாதாம் என்று அழைக்கப்படுகிறது, விலை உயர்வான பாதாமில் எவ்வளவு சத்து உள்ளதோ அதைவிட அதிகமாக விலை மலிவாக கிடைக்கும் வேர்க்கடலையில் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இந்த பழம் கொலஸ்ட்ராலின் எதிரி, கட்டாயம் சாப்பிடுங்க 


வேர்க்கடலையில் உள்ள மோனோ-அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன, இதனால் இதய நோய் அபாயம் குறைகிறது.  வேர்க்கடலை சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் என நினைப்பது தவறு.  வேர்க்கடலை கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்காது, உண்மையில் தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. வேர்க்கடலையில் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்புகள் இருப்பதால், அது கொலஸ்ட்ராலுக்கு கெட்டது என்று பலர் கருதுகின்றனர், ஆனால் அது உண்மையல்ல. அதுமட்டுமின்றி, வேர்க்கடலை எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.



வேர்க்கடலை சாப்பிடுவதால் நீண்ட நேரம் வயிறு நிறைவான உணர்வு ஏற்படுகிறது, இதனால் அதிகப்படியான உணவு சாப்பிடுவது தடைபடுகிறது.  நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்திற்கு ஐந்து முறையாவது வேர்க்கடலை சாப்பிட வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.  வேர்க்கடலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் மற்றும் இது சர்க்கரை நோயின் தாக்கத்தை குறைப்பது மட்டுமின்றி கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது.  மேலும் உடல் எடை குறைப்பதில் தொடங்கி இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது வரை இது பல நன்மைகளை செய்கிறது.


மேலும் படிக்க | நீரிழிவு நோயை விரட்ட ‘இந்த’ பழத்தின் விதைகளே போதும்! பயன்படுத்தும் முறை! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ