அதிகமாக மிளகு சேர்த்துக் கொண்டால் என்னென்ன பக்க விளைவுகள் வரும்
கருப்பு மிளகு அதிகளவில் மருத்துவ குணம் வாய்ந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த கருப்பு மிளகை கூடுதலாக எடுத்துக் கொள்ளும் போது சில பக்க விளைவுகளும் உண்டாகிறது.
மிளகு என்பது 'பைப்பரேசியே' என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த , பூத்து காய்த்து படர்ந்து வளரும் கொடி வகையினைச் சார்ந்த தாவரமாகும். மிளகில்,அது பதப்படுத்தப்படும் முறைக்கேற்ப கரு மிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு எனப் பலவகை உண்டு. மிளகுக் கொடியின் பிறப்பிடம் தென்னிந்தியா ஆகும். தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளாவில் பெருமளவு மிளகு பயிரிடப்படுகிறது.
கருப்பு மிளகு (Black Pepper) அதிகளவில் மருத்துவ குணம் வாய்ந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த கருப்பு மிளகை கூடுதலாக எடுத்துக் கொள்ளும் போது சில பக்க விளைவுகளும் உண்டாகிறது. எனவே கருப்பு மிளகால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்று பார்போம்.
ALSO READ | கருமையான தலைமுடி வேண்டுமா?அப்போ இதை செய்யுங்க!
* கருப்பு மிளகை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது அது நுரையீரலுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. இந்த பிரச்சினை குழந்தைகளுக்கு ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
* கருப்பு மிளகை நாம் நமது சருமத்தில் நேரடியாக பயன்படுத்தும் போது சரும பாதிப்பு அதிகளவில் உண்டாக வாய்ப்புள்ளது. சருமம் சிவந்து போதல் மற்றும் எரியும் உணர்வு போன்றவற்றை சந்திக்கின்றனர்.
* கருப்பு மிளகை கற்பகாலத்தில் எடுத்துக் கொள்ளும் போது கர்ப்பத்திற்கு எந்த தீங்கும் இல்லை. ஆனால் அதன் அளவு அதிகமாகும் போது கருப்பு மிளகு கருச்சிதைவை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. எனவே மிதமான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
* கருப்பு மிளகை அதிகம் உட்கொள்வதால் வயிற்று வலி அல்லது பிற இரைப்பை குடல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே இரைப்பை குடல் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கருப்பு மிளகை தவிர்ப்பது நல்லது.
* கருப்பு மிளகு உடலில் அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் வலி நிவாரண பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே, இந்த விளைவுகளை உருவாக்கும் மருந்துகளுடன் எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.
* கருப்பு மிளகை சாப்பிடும் போது வயிறு, தொண்டை போன்ற பகுதிகளில் எரிச்சலை உண்டாக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே நீங்கள் கருப்பு மிளகை எடுதுகிக்கொள்ளும் முன் மருத்துவர் அறிவுரை பேரில் எடுத்துக் கொள்ளுங்கள். மிதமான அளவு எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.
ALSO READ | கருமையான தலைமுடி பெற கருப்பு மிளகு பயன்படுத்துங்கள்...
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR