காலிஃபிளவர் பக்கவிளைவுகள்: காலிஃபிளவர் என்பது அனைவராலும் விரும்பப்படும் காய்கறிகளில் ஒன்று. காலிஃபிளவர் குருமா, பக்கோடாக்கள், பிரியாணி ஆகியவற்றை மிகவும் விரும்பி உண்பவர்கள் ஏராளம். உண்பதற்கு சுவையானது மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் காலிஃப்ளவரில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி ஆகிய வைட்டமின்களுடன் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலிஃப்ளவரில் பைட்டோநியூட்ரியண்ட்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ள நிலையில், இதை சாப்பிடுவதால் நல்ல தூக்கம் கிடைக்கும், தசைகள் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கும். மேலும், காலிஃபிளவரில் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளது, இருப்பினும், இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது உங்களை நீண்ட நேரம் பசியை உணராமல் தடுக்கிறது, இதன் மூலம் நீங்கள் உடல் எடையை குறைக்கலாம். இவ்வளவு நன்மைகள் இருந்தபோதிலும், காலிஃபிளவரை அளவோடு தான் சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பதால் காலிஃபிளவரை அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது அதோடு, சில நோய்கள் பாதித்தவர்கள், இதை உட்கொள்வது பிரச்சனையை மேலும் அதிகரிக்கும். 


காலிஃபிளவர் அளவிற்கு அதிகமானால் ஏற்படும் பக்கவிளைவுகள்


வயிற்று பிரச்சனைகள்


காலிஃபிளவர் போன்ற கோஸ் வகை காய்கறிகளில் ரஃபினோஸ் என்ற சிறப்பு வகை சர்க்கரை உள்ளது. இது எளிதில் உடையாது. பெரிய குடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் அதை நொதிக்கச் செய்கின்றன. இவ்வாறு நொதிக்க செய்யும் போது வயிற்றில் வாயு மற்றும் வீக்கம் ஏற்படும். இதனால், மலச்சிக்கல் மற்றும் ஆசிடிட்டி ஆகிய பிரச்சனைகள் ஏற்படும். அதனால்தான் காலிஃபிளவரை அளவோடு சாப்பிட வேண்டும்.


மேலும் படிக்க | சரும பொலிவை அதிகரிக்கும் சீரக நீர்: தினமும் குடிச்சா ஜொலிக்கும் முகம்


சிறுநீரக கல் பிரச்சனை


காலிஃபிளவரில் பியூரின் என்ற கரிம சேர்மம் உள்ளது. எனவே சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் காலிஃபிளவர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதோடு மூட்டு வலி, கீல் வாதம் யூரிக் அமில பிரச்சனை இருப்பவர்களும் இதனை அளவோடு சாப்பிட வேண்டும். 


ஹைப்போ தைராய்டிசம்


தைராய்டு சுரப்பி நமது உடலின் பல முக்கிய செயல்பாடுகளுக்கு உதவுகிறது, இந்த சுரப்பி குறைவான ஹார்மோன்களை வெளியிடுகிறது என்றால், இந்த நிலை ஹைப்போ தைராய்டிசம் என்று அழைக்கப்படுகிறது. காலிஃபிளவரை அதிக அளவில் சாப்பிட்டால், அது தைராய்டு சுரப்பியில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே, கண்டிப்பாக உணவு நிபுணரிடம் ஆலோசனை பெறவும்.


ஒவ்வாமை


காலிஃபிளவர் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும் பலருக்கு உண்டு. இதில் தோல் அரிப்பு, வீக்கம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை அடங்கும். நாள்பட்ட அலர்ஜி பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் காலிஃபிளவரை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதால் வீக்கம் அல்லது மூச்சுத் திணறல் பிரச்சனை அதிகரிக்கலாம்.


இரத்தத்தை மெலிதாக்கும் மருந்தை உட்கொள்பவர்கள்


காலிஃபிளவரில் வைட்டமின்-கே உள்ளதால், இரத்தத்தை மெலிதாக்கும் மருந்தை உட்கொள்பவர்கள் அதிகமாக சாப்பிடக்கூடாது. காலிஃபிளவரில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், இரத்தம் படிப்படியாக கெட்டியாகும். மாரடைப்பு மற்றும் இதய நோயினால் பாதிக்கப்பட்ட பலர் இரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளை உட்கொள்கின்றனர். எனவே அவர்கள் அளவிற்கு அதிகமாக காலிஃபிளவர் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். 


மேலே குறிப்பிட்ட பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால், காலிஃபிளவரை சாப்பிடுவதற்கு முன்பு நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.


பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | தக்காளி சூப்பர்புட் தான்... ஆனால் இந்த பிரச்சனை இருக்கிறவங்க தவிர்ப்பது நல்லது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ