தக்காளி சூப்பர்புட் தான்... ஆனால் இந்த பிரச்சனை இருக்கிறவங்க தவிர்ப்பது நல்லது

உணவிற்கு சுவையைக் கொடுக்கும் தக்காளி சமையலுக்கு தேவையான இன்றியமையாத காய்கறிகளில், முதலிடம் பிடித்துள்ளது என்றால் மிகையில்லை. இது ஒரு சூப்பர் புட் என்றாலும், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

தக்காளியில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் மற்றும் வைட்டமின்கள் தாதுக்கள் அடங்கிய தக்காளியின் ஆரோக்கிய நன்மைகள் எண்ணில் அடங்காதவை.

1 /8

தாக்காளி ஊட்டச்சத்துக்களின் கலஞ்சியம். இதில் வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் பொட்டாசியம், சோடியம் போன்ற உடலுக்கு தேவையான பல முக்கிய சத்துக்கள் அடங்கியுள்ளன. இதனை தினமும் சாப்பிடுவதால், கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பெரிய பட்டியலே போடலாம்.

2 /8

புற்றுநோய்: தக்காளியில்  உடலில் செல்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும் திறன் கொண்ட லைகோபீன் எனப்படும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றம் உள்ளது. எனவே, புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களின் அபாயத்தை பெருமளவு குறைக்க தக்காளி உதவுகிறது.

3 /8

இதய ஆரோக்கியம்: தக்காளியில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த பொட்டாசியம் சத்து அவசியம். தக்காளி கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மாரடைப்பு, இதய நோய் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தையும் பெருமளவு குறைக்கலாம்.

4 /8

தக்காளி பக்க விளைவுகள்: அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அது தாக்காளிக்கு பொருந்தும்.  தக்காளியில் சோலனைன் மற்றும் லைகோபீன் என்னும் அமிலங்கள் உள்ளது. இது அளவிற்கு அதிகமானால் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து கொள்ளலாம்.

5 /8

மூட்டு வலி: தக்காளியை அதிகமாக உட்கொள்வது மூட்டு வலி மற்றும் எடிமா என்னும் உடல் வீக்கதை ஏற்படுத்தும். ஏனெனில் இதில் காய்கறியில் சோலனைன் என்ற அல்கலாய்டு உள்ளது. இது மூட்டுகளில் வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். எனவே, மூட்டுவலி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இதை அளவோடு சாப்பிட வேண்டும்.

6 /8

அஜீரண கோளாறு: தக்காளி செரிமானத்திற்கு ஒரு சிறந்த காய்கறியாக கருதப்பட்டாலும், நீங்கள் அதை ஒரு வரம்பிற்கு மேல் உட்கொண்டால், நீங்கள் அமிலத்தன்மை அல்லது அமில வீக்கத்தால் பாதிக்கப்படலாம். அமிலத்தன்மை கொண்டது என்பதால், ஆசிடிட்டி பிரச்சனை அதிகரிக்கும்.

7 /8

சிறுநீரக நோய்:  பொட்டாசியம் சத்து சிறுநீரக பிரச்சனைகளை அதிகரிக்கும். தக்காளியில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின்னரே தக்காளியை சாப்பிட வேண்டும். இவர்கள் தக்காளி சூப், தக்காளி சாஸ் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.