வெறும் வயிற்றில் காலை தேநீர்: இந்தியாவில் தேநீர் பிரியர்களுக்கு பஞ்சமில்லை. அதனால்தான் தண்ணீருக்குப் பிறகு அதிகம் உட்கொள்ளும் பானமாக இது உள்ளது. மக்கள் காலை முதல் மாலை வரையிலும் பின்னர் இரவிலும் டீயை குடிக்கிறார்கள். சிலர் மன அழுத்தத்தை நீக்க இதை ஒரு வகையான வழியாக பார்க்கிறார்கள். ஒரு முறை டீ குடித்துவிட்டால், அற்புதமான புத்துணர்ச்சி கிடைப்பதுடன் உடலில் சோர்வும் நீங்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பலர் வெறும் வயிற்றில் டீ குடிக்கிறார்கள்


சிலருக்கு அதிகாலையில் எழுந்தவுடன் டீ குடிக்கும் கெட்ட பழக்கமும் உள்ளது. இதை 'பெட் டீ' என்றும் சொல்வார்கள். இதற்கு பழக்கப்பட்டவர்களால், இது இல்லாமல் அன்றைய வேலையைச் சரியாகச் செய்ய முடியாது. இது தவிர, அலுவலகத்தில் அதிகாலை ஷிப்ட் இருப்பவர்களால், நிச்சயமாக டீ இல்லாமல் வாழ முடியாது. ஏனென்றால் அவர்கள் தூங்குவதற்கு இந்த பானத்தை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள்.


'பெட் டீ' ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல


காலையில் தேநீர் அருந்தும் பழக்கம் மனதிற்கு ஒரு வகை அமைதியை தரலாம். ஆனால், இது உடல் ஆரோக்கியத்திற்கு அதிக கேடை விளைவிக்கும். ஏனெனில் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் பல பக்க விளைவுகள் ஏற்படும். பசித்த வயிற்றில் தேநீர் அருந்துவது நல்லதல்ல என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | நிம்மதியா தூங்கணுமா: இரவில் இந்த டீ குடிச்சா போதும் 


'பெட் டீ' குடிப்பதால் ஏற்படும் கடுமையான தீமைகள்


1. பெட் டீ குடிப்பதால் வரும் மிகப்பெரிய பிரச்சனை அசிடிட்டி, மலச்சிக்கல். இது செரிமான அமைப்புக்கு நல்லதல்ல.


2. காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் பித்த சாற்று செயல்முறை சரியாக நடக்காமல், உடலில் பதட்டம் உண்டாகிறது. 


3. நீங்கள் அதிகமாக டீ குடித்தால், அது சிறிது நேரம் உங்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தலாம். ஆனால் அது தூக்கக் கலக்கத்தை உண்டுபண்ணும்.


4. காலையில் எழுந்தவுடன் டீ குடிப்பதால், அதில் சர்க்கரை உள்ளடக்கம் இருப்பதால், உங்கள் எடையை இது வேகமாக அதிகரிக்கக்கூடும்.


5. பசியுடன் இருக்கும்போது டீ குடிப்பதால் அல்சர் பிரச்சனை வரக்கூடும். அதே போல் புரோட்டீன் குறைபாடு ஏற்படும் அபாயமும் உள்ளது.


6. பெட் டீ குடிப்பதால் நரம்பியல் பிரச்சனைகள் ஏற்படலாம். இதன் காரணமாக பசியின்மை ஏற்படும் அபாயமும் உள்ளது.


7. தேநீரில் காஃபின் அளவு அதிகமாக உள்ளது. இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Healthy Meat: சிக்கனை எப்படி சமைத்தால் நோயாளிகளுக்கு நல்லது 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR