குறைந்த இரத்த அழுத்தம் இருக்கா; அப்போ இந்த டிரை ஃப்ரூட்ஸ் சாப்பிடுங்க

Low Blood Pressure: இரத்த அழுத்தம் குறைவாக இருக்கும் போது ஒரு சில டிரை ஃப்ரூட்ஸ்களை சாப்பிட்டால் சற்று நிவாரணம் பெறலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 25, 2022, 08:45 AM IST
  • குறைந்த இரத்த அழுத்தத்தில் உலர் திராட்சை
  • குறைந்த இரத்த அழுத்தத்தின் சில அறிகுறிகள்
  • சோடியம் நிறைந்த உணவும் உதவும்
குறைந்த இரத்த அழுத்தம் இருக்கா; அப்போ இந்த டிரை ஃப்ரூட்ஸ் சாப்பிடுங்க title=

மாறிவரும் வாழ்க்கைமுறையில், குறைந்த இரத்த அழுத்தப் பிரச்சனை சர்வ சாதாரணமாகி வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், மருந்து இல்லாமல் எப்படி இந்தப் பிரச்சனையை குணப்படுத்த முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள். இருப்பினும், பிபி லோ பிரச்சனைக்கு நிவாரணம் தரும் சில விஷயங்கள் உள்ளன. அதன்படி இரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் நீங்கள் சாக்லேட் மற்றும் காய்ந்த திராட்சை சாப்பிடலாம். இதன் மூலம் குறைந்த இரத்த அழுத்தப் பிரச்சனைய்யில் இருந்து சற்று நிவாரணம் பெறலாம். எனவே பிபியைக் கட்டுப்படுத்துவதில் எந்த விஷயம் மிகவும் முக்கியமானது என்பதைப் தெரிந்துக்கொள்ளுங்கள்.

குறைந்த இரத்த அழுத்தத்தில் உலர் திராட்சையில் இருந்து நிவாரணம் பெறுவது எப்படி
உண்மையில், உலர் திராட்சை ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்தது. அத்தகைய சூழ்நிலையில், இந்த உலர் பழம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த முயற்சிக்கிறது, இது குறைந்த இரத்த அழுத்தம் பிரச்சனையில் நிவாரணம் அளிக்கிறது. உலர் திராட்சையை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், லோ பிபி பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

மேலும் படிக்க | வறண்ட கண்களால் வாட்டமா? இவை காரணமாக இருக்கலாம், இப்படி தீர்வு காணலாம் 

குறைந்த இரத்த அழுத்தத்தில் காபி குடிக்கலாம்
குறைந்த இரத்த அழுத்தத்தில் இருந்து உடனடி நிவாரணம் பெற காபி அருந்துதலாம். குறைந்த பிபி பிரச்சனை உள்ளவர்கள், பால் காபி அல்லது கருப்பு காபி குடிக்கலாம், இது உங்களுக்கு நிவாரணம் தரும்.

சோடியம் நிறைந்த உணவும் உதவும்
குறைந்த ரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விடுபட விரும்புபவர்கள் சோடியம் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதன் மூலம் பலன் பெறுவீர்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உங்கள் உணவில் செர்ரி, கமல்கத்தா, பாகற்காய், கொத்தமல்லி, ஆப்பிள், வெள்ளரி, முட்டைக்கோஸ் மற்றும் பருப்பு வகைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். 

குறைந்த இரத்த அழுத்தத்தின் சில அறிகுறிகள்:

* குறைந்த இரத்த அழுத்தம் இருக்கும்போது நீங்கள் பலவீனமாகவும் சோர்வாகவும் உணர்வீர்கள்.
* தலைசுற்றல் என்பது குறைந்த இரத்த அழுத்தத்தின் ஒரு பொதுவான அறிகுறியாகும். 
* குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் நீரிழப்புக்கு இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. 
* குறைந்த இரத்த அழுத்தம் உங்கள் உடலை குளிர்ச்சியாகவும், வியர்வையாகவும் மாற்றக்கூடிய அதிர்ச்சியை ஏற்படுத்தும். உங்கள் சுவாசிக்கும் விகிதம் கூட அதிகரிக்கும் மற்றும் உங்கள் இதயத்துடிப்பு பலவீனமடையும். இந்த அறிகுறியை நீங்கள் கண்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Cardamom Benefits: ஏலக்காயை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News