சில காய்கறிகள் அனைவரும் விரும்பும் சுவையான காய்கறியாக இருக்கும். அதில் ஒன்று தக்காளி ஆகும். சோலனேசே குடும்பத்தை சேர்ந்த இந்த பழத்தை விரும்பாதவர்கள் மிகவும் சொற்பமே. ஆனால் உணவிலிருந்து, அழகு வரை அனைத்திற்கும் பயன்படும் இந்த பழத்தில் நிறைய ஆபத்துக்களும் உள்ளது. தக்காளியை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளும்போது அது உடலில் பலவித எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தக்காளிகள் (Tomato) நம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறினாலும், அளவுக்கு அதிகமாக இந்த தக்காளியை உட்கொள்வதும் தீங்கு விளைவிக்கும் மற்றும் உடலை பல வழிகளில் சேதப்படுத்தும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பதிவில் தக்காளியை உணவில் அதிக அளவு சேர்த்துக்கொள்ளும்பது ஏற்படும் ஆபத்துக்கள் என்ன என்பதை பார்க்கலாம்.


ALSO READ | வெல்லத்திற்கு இளமைக்கும் சம்பந்தம் உள்ளதா; நிபுணர்கள் கூறுவது என்ன..!!!


நெஞ்செரிச்சல்: தக்காளியில் அதிக அளவு மாலிக் மற்றும் சிட்ரிக் அமிலங்கள் உள்ளது. செரிமானம் தொடங்கியவுடன் தக்காளி இரைப்பையில் அதிக அமிலத்தாக்கங்களை ஏற்படுத்தும். இதனால் உணவுக்குழாயில் அதிக அமிலப்போக்கு ஏற்பட்டு நெஞ்செரிச்சல் ஏற்படும். 


குடல் வீக்கம்: தக்காளியின் செரிமானம் அடையாத தோல் மற்றும் விதைகள் உங்கள் வயிற்றின் செயல்பாடு மற்றும் குடல் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இவை குடலில் ஒட்டிக்கொண்டு வீக்கத்தை ஏற்படுத்தும். உலகளவில் குடல் இயக்கங்களை பாதிக்கும் முக்கிய உணவாக தக்காளி நம்பப்படுகிறது. 


அலர்ஜிகள்: ஹிஸ்டமைன் என்பது தக்காளியில் உள்ள முக்கியமான சேர்மம் ஆகும். இதுதான் நமது உடலில் ஏற்படும் பலவித அலர்ஜிகளுக்கான காரணமாகும். எனவே உங்களுக்கு சருமம் சிவப்பாக தடித்தல், தொண்டை எரிச்சல் போன்றவை தெரிந்தால் உடனடியாக தக்காளி சாப்பிடுவதை நிறுத்திவிடவும்.


சிறுநீரக கற்கள்: இந்த பழத்தில் கால்சியம் மற்றும் ஆக்சலேட் அதிகம் உள்ளது. இந்த சத்துக்களை உறிஞ்சுவதும், அவற்றை வெளியேற்றுவதும் மிகவும் கடினமான ஒன்று. இது நம் உடலில் அதிகம் சேர்வது சிறுநீரக கற்களை ஏற்படுத்தும், இது மிகவும் ஆபத்தான ஒன்று.


மூட்டு வலி: தக்காளியில் காரப் பொருட்கள் காணப்படுகின்றன, இது மூட்டு வலியை அதிகரிக்கும். இதனுடன், தக்காளியில் காணப்படும் சோலனின் என்ற உறுப்பு உடலின் திசுக்களில் கால்சியத்தை உருவாக்குகிறது, இது மூட்டு வலி மற்றும் வீக்க சிக்கல்களை அதிகரிக்கிறது.


ALSO READ | என்ன செய்தாலும் வெயிட் குறையலையா; பப்பாளி காய் ஒன்றே போதும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR