பெரும்பாலானோருக்கு மாலை நேரத்தில் தேநீருடன் சிற்றுண்டியாக ரஸ்க் சேர்த்து சாப்பிடுவது பிடிக்கும், இதுதவிர சிலர் தங்களது பசியை கட்டுப்படுத்தவும் சில சமயங்களில் ரஸ்க் சாப்பிடுகின்றனர், பலரும் விரும்பி சாப்பிடும் இந்த ரஸ்க் ஆரோக்கியமானது தானா என்பதை பற்றி நாம் யோசித்திருக்கமாட்டோம்.
ரஸ்க்கில் சுத்திகரிக்கப்பட்ட மாவு, சர்க்கரை, மலிவான எண்ணெய்கள், கூடுதல் க்ளூட்டன் மற்றும் சில தீங்கு விளைவிக்கும் உணவு சேர்க்கைகள் உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | அடிக்கடி கண்களில் வலி ஏற்படுகிறதா? இந்த தவறை மட்டும் பண்ணாதிங்க!


ரஸ்க்கை தினசரி சாப்பிடுவதால் உங்கள் உடலில் குளுக்கோஸ் அளவுகள் மற்றும் வளர்சியத்தை மாற்றத்தில் பெரியளவில் பாதிப்பு அடைகிறது.  இதுதவிர ரஸ்க் உங்கள் குடலில் கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, செரிமானமின்மை, ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுதல் மற்றும் பசி போன்றவற்றை ஏற்படுத்துகிறது.  மேலும் அதிகளவு ரஸ்க் சாப்பிடுவது உடலில் கெட்ட கொழுப்புகள், மன அழுத்தம் மற்றும் சோம்பலை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது 



ரஸ்க் செய்ய பயன்படுத்தப்படும் மாவில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் இல்லை.  நீங்கள் நாள் முழுவதும் சர்க்கரையை சாப்பிடாமல் இருந்தாலும், இரண்டு ரஸ்க் சாப்பிட்டால் வழக்கமாக நீங்கள் ஒரு நாளில் எடுத்துக்கொள்ளும் சர்க்கரையா விட இது அதிகமாக இருக்கும். வெப்ப சிகிச்சை மூலம் மிகவும் பதப்படுத்தப்படும் ரஸ்க்கில் எந்த நன்மைகளும் இல்லை, இதனை சாப்பிடுவதால் உங்கள் உடல் வீக்கமடையும்.  ரஸ்க்கிற்கு பழுப்பு நிறம் கொடுக்க பெரும்பாலும் கேரமல் சேர்க்கப்படுகிறது, இது முழுமுழுக்க சர்க்கரையால் ஆனதாகும்.  கோதுமை ரஸ்க் சாப்பிடுவதற்கு பதிலாக ரவை கலந்த ரஸ்க் சாப்பிடுவது நல்லது என்று கூறப்படுகிறது.


மேலும் படிக்க | இந்த அறிகுறிகள் தோன்றினால் ஜாக்கிரதை: இவை கொலஸ்ட்ராலின் அபாய அறிகுறிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ