அதிக கொலஸ்ட்ரால் அறிகுறிகள்: கொலஸ்ட்ரால் அதிகரிப்பது நமது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இது இரத்த நாளங்களில் பிளேக் படிவத்தை ஏற்படுத்துகிறது. இதனால் அடைப்பு ஏற்படுகிறது. இது உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும். கொலஸ்ட்ரால் என்பது நமது கல்லீரலில் உற்பத்தியாகும் ஒரு ஒட்டும் பொருளாகும். இது ஆரோக்கியமான செல்களை உருவாக்க உதவுகிறது. இருப்பினும், நீங்கள் அதிக எண்ணெய் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் உருவாகத் தொடங்குகிறது. இது ஆபத்துக்கு காரணமாகிறது.
இந்த சிக்கலை சரியான நேரத்தில் அடையாளம் காண வேண்டியது அவசியம். கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது நம் உடல் என்ன சமிக்ஞைகளை அளிக்கிறது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
அதிக கொலஸ்ட்ரால் அறிகுறிகள்
1. நெஞ்சு வலி
கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான முக்கிய அறிகுறி மார்பு வலி ஆகும். உங்களுக்கு திடீரென நெஞ்சுவலி வர ஆரம்பித்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும். இந்த வலி சில நாட்களுக்கு இருக்கும். நெஞ்சு வலி இதய நோய்களின் அறிகுறியுமாகும். இது மிகவும் ஆபத்தானது.
மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் இருந்தால் இவ்வளவு ஆபத்தா? ஜாக்கிரதை!
2. அதிகமாக வியர்த்தல்
வெயில் காலத்திலும், அதிக உடற்பயிற்சிகள் செய்த பிறகும் வியர்ப்பது சகஜம். ஆனால் சாதாரண நிலை அல்லது குளிர்காலத்தில் கூட அதிக வியர்வை இருந்தால், இவை அதிக கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய்களின் அறிகுறிகள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
3. எடை அதிகரிப்பு
உங்கள் எடை வேகமாக அதிகரித்துக் கொண்டிருந்தால், கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் இது நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த அறிகுறியை புறக்கணிக்காதீர்கள். முடிந்தவரை உடல் செயல்பாடுகளை அதிகரிப்பது நன்மை பயக்கும். ஆரோக்கியமான உணவை மட்டுமே உட்கொள்வது நல்லது.
4. தோல் நிறம் மாற்றம்
கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, நமது உடல் சருமத்தின் நிறத்தை மாற்றுவது உட்பட பல சமிக்ஞைகளை அளிக்கிறது. கொலஸ்ட்ரால் அதிகரித்தால் நிற மாற்றம் தோலில் காணப்படலாம். இந்த அறிகுறி இருந்தால், உடனடியாக லிப்பிட் ப்ரொஃபைல் சோதனை செய்ய வேண்டியது அவசியமாகும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்து விட்டது என்பதை உணர்த்தும் எச்சரிக்கை அறிகுறிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ