பீட்ஸா அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை அறிவோமா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துரித உணவு பிரியர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக கருதப்படும் உணவு வகை பீட்ஸா. இத்தாலியின் உணவு வகையான இது, இப்போது இந்தியர்கள் அடிக்கடி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்றாக மாறி விட்டது. இதை அடிக்கடி சாப்பிடுவதனால் உடலில் பல வித பாதிப்பு ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 


இதய நோய்களுக்கான அபாயம்:


மைதாவை வைத்து செய்யப்படும் பீட்ஸாவில் நிறைய செரிவூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் நிறைந்துள்ளது. சீஸ் மற்றும் கரி வகை டாப்பிங்க்சினால் உங்கள் கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் பீட்ஸா காரணமாக இருக்கின்றது. அடிக்கடி, மூன்று அல்லது நான்கு ஸ்லைஸ் பீட்ஸாக்களை சாப்பிடுவதால் இதயம் சம்பந்தப்பட்ட நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது. 


உடல் பருமன்:


சீஸ் பீட்ஸாவின் ஒரு துண்டில், சுமார் 400 கொழுப்பு அடங்கியிருக்குமாம். இரண்டு அல்லது மூன்று துண்டுகள் 800 முதல் 1200 வரை கொழுப்பின் அளவை அதிகரிக்குமாம். இதற்கு மேல் நீங்கள் பெப்பரோனி டாப்பிங்ஸ் போட்டு சாப்பிட்டால் மேற்கூறிய அளவுக்கு மேலே உங்களுக்கு கொழுப்பு அதிகரிக்கும். ஒரு நாளைக்கு, ஒருவர் 2000 அளவிலான கலோரிகளையே உட்கொள்ள வேண்டும் என ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில், அடிக்கடி பீட்ஸாவை சாப்பிட்டால் நாம் தினசரி எடுத்துக்கொள்ளும் கொழுப்பின் அளவு 40 முதல் 60 சதவிகிதம் வரை அதிகரிக்கும். இதனால், உடல் பருமன் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு அதிக லாபத்தை தரும் 2 வங்கிகள்... முழு விவரம்!


புற்றுநோய் அபாயம்?


பீட்ஸாவுடன் சேர்த்து அதிக அளவிலான பதப்படுத்தப்பட்ட கறி வகைகள் , பெப்பரோனி, பேக்கன் மற்றும் இதர இணைப்புகளை சேர்த்து சாப்பிட்டால் கண்டிப்பாக பெருங்குடல் புற்று நோய் அல்லது வயிற்று புற்று நோயில் கொண்டு போய் விடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 


வேறு எப்படித்தான் பீட்ஸாவை சாப்பிட வேண்டும்?


பீட்ஸாவை அடிக்கடி சாப்பிடாமல் எப்போதாவது சாப்பிட்டால், அதன் பிறகு கொழுப்பு சேராமல் இருக்க நீங்கள் சில முயற்சிகளை மேற்கொண்டால் எந்த பிரச்சனையும் ஏற்படாது. அதிகமாக பீட்ஸா சாப்பிட்டால்தான் உடலில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். பீட்ஸா, மைதா மாவினால் செய்யப்படுவதால் அது செரிமான கோளாறுகளை உண்டு செய்யும்.


ஹெல்தியான பீட்ஸாக்கள்:


நாம், பீட்ஸாவை ஹெல்தியாகவும் சாப்பிடலாம். பீட்ஸா செய்கையில், அதில் கொழுப்பு சேர்க்கக்கூடிய பொருட்களை மிகவும் குறைந்த அளவிலேயே உபயோகியுங்கள். உதாரணத்திற்கு சீஸ், மோட்சரெல்லா ஆகியவற்றை குறைவாக பயன்படுத்துங்கள். 


நிறைய காய்கறிகளை தூவுங்கள்:


குடை மிளகாய் மட்டுமல்லாது, நீங்கள் இன்னும் நிறைய காய்கறிகளையும் பீட்ஸாவில் சேர்த்துக்கொள்ளலாம். அதில் வரைமுறை இல்லாமல், சுவைக்கு ஏற்றவாறு காய்கறிகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | ஜாக்பாட்...! ரேஷன் கார்டுதாரர்களுக்கு இனி இலவச ரேஷனுடன் பணமும் வரும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ