பீட்சா என்பது சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் தீங்கு விளைவிக்கும் உணவுகளில் ஒன்று. ஆனால் மிகவும் பிரபலமான இத்தாலிய உணவாகும். நாம் அனைவரும் பீட்சாவை ரசித்தாலும், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவருக்கு இது ஆகவே ஆகாது.
பீட்சாவில் பொதுவாக அதிக அளவு கலோரிகள், கொழுப்புகள் மற்றும் சோடியம் உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கச் செய்து இதய நோய் அபாயத்தை அதிகரிக்கச் செய்யும். மாறாக, பீட்சாவை சாப்பிட்டு உடல் எடையை குறைத்த நபரைப் பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. உடல் பயிற்சியாளரான ரியான் மெர்சர், 30 நாள்கள் தினமும் 10 பீட்சாவை உட்கொண்டு, ஒரு வினோதமான சவாலை எடுத்துக்கொண்டு, தினமும் அதன் முடிவுகளை ஆன்லைனில் வெளியிட்டிருந்தார்.
மேலும் படிக்க | துருக்கி நிலநடுக்கம்! வாட்ஸ்அப் ஸ்டேடஸால் இடிபாடுகளில் இருந்த மீட்கப்பட்ட நபர்!
காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு பீட்சா சாப்பிட்ட போதிலும், 34 வயதான மெர்சர், ஒரு மாதத்தில் மூன்றரை கிலோவைக் குறைக்க முடிந்தது வியப்பாக இருந்தது. மேலும் அவர் தொடங்கியதை விட இப்போது அவர் இன்னும் அதிகமாக உடல்எடை குறைந்து காணப்படுவதாக கூறுகிறார்.
இன்ஸ்டாகிராமில் தனது எடைக் குறைப்பு குறித்து பகிர்ந்து கொண்ட அவர், "இப்போது 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், பீட்சா சாப்பிட்டாலும் உடல் கொழுப்பைக் குறைக்க முடியும் என்று அறிந்திருக்கிறார்கள். கொழுப்பு குறைக்க முயற்சிக்கும்போது, அதில் முன்னேற்றம் காண உங்களுக்கு பிடித்த உணவுகளை உண்ணாமல் கட்டுப்படுத்த வேண்டியதில்லை என்பதை நிரூபிக்க இந்த சவாலை ஏற்றுக்கொண்டேன்" என பதிவிட்டிருந்தார்.
கொழுப்பு உடலில் படிவாகாமல், அவரால் அதிக தசையை வளர்க்க முடிந்தது. பீட்சாவை மட்டும் உண்ணும் சவாலை மட்டுமே மெர்சர் தேர்வு செய்தார். கலோரி பற்றாக்குறை மற்றும் ஆரோக்கியத்தைப் பற்றி ஒரு ப உருவாக்க, அவர் அனைத்து வகை துரித உணவுகள் மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை சாப்பிடுவதை கைவிட்டார். அவர் நாள் முழுவதும் பீட்சா சாப்பிட்டாலும், அவர் இன்னும் ஜிம்மிற்குச் செல்கிறார் என்பது நினைவுக்கூரத்தக்கது.
மேலும் படிக்க | உணவால் வரும் வயிற்றுப் புற்றுநோய்... தவிர்ப்பது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ