ஜாக்பாட்...! ரேஷன் கார்டுதாரர்களுக்கு இனி இலவச ரேஷனுடன் பணமும் வரும்!

Ration Card Latest: கார்டு வைத்திருப்பவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் அவ்வப்போது பல வசதிகள் செய்து தரப்படுகிறது. இப்போது அரசாங்கமும் உங்களுக்கு ரேஷன் பொருள்களுடன் பணத்தையும் தரும்.

Written by - Sudharsan G | Last Updated : May 16, 2023, 10:52 PM IST
  • இந்த வசதி சில கார்டுகளுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
  • இலவச ரேஷன் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும்.
  • ஹரியானா அரசு மக்களுக்கு ரேஷன் மூலம் பலம் வழங்குகின்றது.
ஜாக்பாட்...! ரேஷன் கார்டுதாரர்களுக்கு இனி இலவச ரேஷனுடன் பணமும் வரும்! title=

Ration Card Latest: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.  நீங்களும் ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்தால், இப்போது உங்களுக்கு இலவச ரேஷன் மற்றும் மத்திய அரசின் பணமும் கிடைக்கும். 

ஆம்... கார்டு வைத்திருப்பவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் அவ்வப்போது பல வசதிகள் செய்து தரப்படுகிறது. இப்போது அரசாங்கமும் உங்களுக்கு ரேஷன் பொருள்களுடன் பணத்தையும் தரும். ஆனால் அதன் பலன் சில ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

ஹரியானா அரசு அறிவிப்பு

மத்திய அரசுடன் இணைந்து, ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாநில அரசால் பல வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில், ஹரியானா அரசு பிபிஎல் கார்டு வைத்திருப்பவர்களுக்கும், அந்த்யோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கும் (AAY) இரண்டு லிட்டர் கடுகு எண்ணெயை இலவசமாக வழங்குவதாக முன்னர் அறிவித்தது. 

மேலும் படிக்க | ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை! கோதுமை - அரிசி 1ம் தேதி முதல் நிறுத்தம்!

முன்பு ரூ. 250...

இது தவிர, ஜூன் 2021இல் எண்ணெய் விலை உயர்வு காரணமாக, அரசாங்கம் எண்ணெய் விநியோகத்தை நிறுத்தியது. அதற்கு பதிலாக அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.250 வழங்குவதாக அறிவித்தது. தற்போது, இந்த தொகையை அதிகரிக்க மாநில அரசு பரிசீலித்து வருகிறது.

அரசாங்கம் எவ்வளவு ரூபாயை உயர்த்த முடியும் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இந்த 250 ரூபாயை அதிகரிக்க அரசாங்கம் தொடர் ஆலோசனைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த தொகை குறித்த பல ஆலோசனைகளுக்கு பின் ஹரியானா அரசு அதனை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. 250 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மாநில அரசின் இந்த மாற்றத்தின் பலனை பிபிஎல் மற்றும் ஏஏஒய் ரேஷன் கார்டுதாரர்கள் பெறுவார்கள். இதன் மூலம் சுமார் 32 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும்.

இலவச ரேஷன் விரைவில் 

இது தவிர, மத்திய அரசின் இலவச ரேஷன் திட்டத்தின் கீழ், கார்டுதாரர்களுக்கு இலவச கோதுமை மற்றும் அரிசி வசதியும் கிடைத்து வருகிறது. நடப்பு ஆண்டிலேயே இலவச ரேஷனை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது, அதாவது நீங்கள் ஆண்டு முழுவதும் ரேஷனுக்காக பணம் செலவழிக்க வேண்டியதில்லை.

மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட், இம்மாதம் இருமுறை ரேஷன் வினியோகம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News