இதய நோய் முதல் செரிமானம் வரை... முட்டையுடன் ‘இதை’ எல்லாம் சாப்பிடாதீங்க... !
BAD Food Combination with Egg: முட்டையில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். புரதச்சத்து நிறைந்த முட்டை சூப்பர் புட் என அழைக்கப்படுகிறது. எனினும், முட்டையுடன் ஒத்துப் போகாத சில உணவுகளை முட்டை சாப்பிட்ட பின், அல்லது அதனுடன் சாப்பிடுவதால், உங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.
BAD Food Combination with Egg: முட்டையில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். புரதச்சத்து நிறைந்த முட்டை சூப்பர் புட் என அழைக்கப்படுகிறது. முட்டையின் வெள்ளை கரு புரோட்டீன் நிறைந்தது. மஞ்சள் கலவிலும் கூட புரதம் இருக்கிறது. அது மட்டும் அல்ல ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள், மினரல்கள் என ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக முட்டை திகழ்கிறது. மூளை ஆரோக்கியம், இதய ஆரோக்கியம் முதல் உடல் பருமனை குறைப்பது வரை, முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பெரிய பட்டியல் போடலாம்.
நரம்பு மண்டலம் முதல் எலும்புகள் வரை: முட்டையின் ஆரோக்கிய நன்மைகள்
முட்டையில் உள்ள கோலைன் என்ற பொருள், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மூளைக்கு ஆற்றலை கொடுக்கிறது. கையில் எலும்பை வலுப்படுத்தும் முக்கிய ஊட்டச் சத்தான வைட்டமின் டி மற்றும் கால்சியம் உள்ளது. மேலும் முட்டையில் உள்ள லுடீன் உள்ளிட்ட சில கரோட்டின் நிறைந்த கலவைகள், கண்புரை நோய் வருவதை தடுத்து, கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. குறைந்த கலோரி கொண்ட என்பதால், கெட்ட கொலஸ்ட்ராலை (LDL Cholesterol) குறித்து உடல் எடையை கட்டுக்குள் வைக்கிறது.
முட்டை பக்க விளைவுகள்
உடலுக்கு ஆற்றலையும் நோய் எதிர்ப்பு சக்தியும் அள்ளிக் கொடுக்கும் முட்டையின் பலனை முழுமையாக பெறவும், அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை தடுக்கவும், முட்டை சாப்பிட்ட பின் சில சாப்பிட உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். முட்டையுடன் ஒத்துப் போகாத சில உணவுகளை, முட்டை சாப்பிட்ட பின், அல்லது அதனுடன் சாப்பிடுவதால், உங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.
முட்டையுடன் எலுமிச்சை
வேக வைத்த முட்டை அனைவருக்கும் பிடித்து ஒரு காலை உணவு. இதில் கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது. ஆனால் சிலர் அதில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாப்பிடுவார்கள். அந்த பழக்கம் இருந்தால் இன்று விட்டு விடுவது நல்லது. முட்டையுடன் எலுமிச்சம் பழத்தை சேர்த்து சாப்பிடும் போது, அது ரத்த நாளங்களில் பாதிப்பை ஏற்படுத்தி, இதயம் தொடர்பான நோய்கள் உருவாவதற்கான வாய்ப்பு உள்ளது என்று வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
முட்டையுடன் சீஸ்
வேகவைத்த முட்டையுடன் சீஸ் உணவை சாப்பிடுவதால், செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் முட்டை சைஸ் இரண்டிலுமே ஏராளமான புரதச்சத்து உள்ளது. ஓகே அதிகப்படியான புரதம் வயிறு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே வேகவைத்த முட்டையுடன் சீஸ் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
முட்டையுடன் வாழைப்பழம்
முட்டை சாப்பிட்ட பின் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதல்ல. இது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். மலச்சிக்கல், அசிடிட்டி மற்றும் குடல் பிரச்சனைகள் ஏற்படும்.
மேலும் படிக்க | மலச்சிக்கலுக்கு மரண அடி கொடுக்கும் சூப்பர் டிரிங்க்! பல சிக்கல்களை போக்கும் பானம்!
முட்டை மற்றும் பால்
முட்டை சாப்பிட்ட பின் பால் அருந்துவது உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் செரிமான பாதிக்கப்பட்டு வாந்தி பிரச்சனை ஏற்படலாம். அதே போன்று பலர் முட்டிஅ சாப்பிட்ட பின் டீ சாப்பிடுவார்கள். ஆனால் இவை இரண்டையும் உடனுக்கு உடன் சாப்பிடுவதால், மலச்சிக்கல் பிரச்சனை வரலாம்.
முட்டை மற்றும் இறைச்சி
சிலர் முட்டை மற்றும் சமைத்த இறைச்சியை ஒன்றாக சாப்பிடுவார்கள். இவை இரண்டிலும் புரதமும் கொழுப்பும் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த காரணத்தினால், இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடும் போது சோம்பல் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. உடனடி ஆற்றலைத் தரும் முட்டையுடன் இறைச்சியை சாப்பிடுவதால், மந்தமான உணர்வு ஏற்படும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | மருத்துவச் செலவுக்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு திட்டம் - பெறுவது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ