இதய தமனிகளில் சேரும் கொலஸ்ட்ராலை எரிக்க ... உதவும் ‘சில’ உணவுகள்!

உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பது மாரடைப்பு, பக்க்வாதம் போன்ற அபாயங்களை பெருமளவு அதிகரிக்கிறது. கொலஸ்ட்ராலில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால் பிரச்சனை இல்லை. ஆனால், கெட்ட கொலஸ்ட்ரால், நாளடைவில் அதிக உடல் பிரச்சனைகளை உண்டாக்கி, இதய தமனிகளை சேதப்படுத்தும். 

LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதோடு இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. கொலஸ்ட்ரால் என்பது உடலின் செல்களில் காணப்படும் ஒரு மெழுகுப் பொருளாகும். 

1 /8

இதய ஆரோக்கியத்தினை மேம்படுத்தும் HDL (High Density Lipoprotein) என்பது அதிக அடர்த்தி கொண்ட கொலஸ்ட்ரால் ஆகும். ஆனால், LDL (low-density lipoprotein) என்னும் கெட்ட கொலஸ்டிரால் இதய நரம்புகள் குறுக்கி, ரத்த ஓட்டத்தினை பாதிக்கிறது. இந்நிலையில், கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்கும் பானங்களை அறிந்து கொள்ளலாம்.

2 /8

அதிக அளவு அல்லிசின் கொண்ட பூண்டு, கொலஸ்ட்ராலை எரிக்க மிகவும் உதவும். தினமும் காலையில் இரண்டு பச்சைப் பூண்டு பற்களை சாப்பிட்டு வந்தால், நமது இரத்தத்தில் சேர்ந்துள்ள கொழுப்புஎரிக்கப்பட்டு, மாரடைப்பு அபாயம் பெருமளவு குறையும்.

3 /8

கொலஸ்டிராலை எரிக்கும் திறனை கொண்ட மஞ்சளை தினமும் வெந்நீரில் கலந்து குடித்து வந்தாலும், அல்லது மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்த பாலை குடித்து வந்தாலும், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கலாம்.

4 /8

க்ரீன் டீயில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளதால், இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்க உதவுகிறது. கேட்டசின் கலவைகள் கொண்டுள்ள, க்ரீன் டீ யை தினமும் குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை எளிதில் குறைக்கலாம்.

5 /8

தனியா அல்லது கொத்தமல்லி விதையில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். இதில் ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி, ஏ மற்றும் பீட்டா கரோட்டின் உள்ள நிலையில், தினமும் காலையில் தனியா நீரை குடித்து வந்தால், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவதோடு, உடல் எடையையும் குறைக்கலாம்.  

6 /8

கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உணவில் அதிக நார்ச்சத்து உணவுகளைச் சேர்க்க வேண்டும். நார்சத்துக்களின் ஆதாரமான தானியங்கள், ஓட்ஸ், பருப்பு வகைகள் மற்றும் பழங்கள் கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்க உதவும்.

7 /8

அதிக அளவு ஆல்பா லினோலெனிக் அமிலம் கொண்ட ஆளி விதைகள் கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டிற்கு மிகவும் உதவும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, ஆளி விதைகளை தினமும், சரியான அளவில் உட்கொண்டால், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைக்கலாம்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.