வெறும் வயிற்றில் க்ரீன் டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி... அது சரியான வழி தானா அல்லது அது  உடலுக்கு தீங்கு விளைவிக்குமா என்பது குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எடை குறைப்பு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், உடலின் இயல்பான வெப்பநிலையை சீராக்குவது போன்ற அற்புதமான பண்புகள் கொண்டுள்ள கிரீன் டீ மிகவும் பிரபலமானது. ஒரே வார்த்தையில் கூறுவது என்றால்- ஆரோக்கியமான நடைமுறைகளைப் பின்பற்றும் ஒருவர்,  நிச்சயமாக கடைபிடிக்க வேண்டிய உணவு பழக்கம் கிரீன் டீ குடிப்பது என்ற பொதுவான புரிதல் அனைவரிடமும் உள்ளது. ஆனால், கிரீன் டீயின் அனைத்து ஆரோக்கிய நன்மைகளை பெற சரியான முறையில், சரியான நேரத்தில் குடிக்க வேண்டும். கிரீன் டீயைக் குடிப்பதற்கு எது சரியான நேரம், எந்த அளவில் அதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம். 


வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிக்க கூடாது


ஆம்,  நம்பமுடியாததாக இருந்தாலும், இது உண்மை தான். க்ரீன் டீ குடிப்பது நல்லது. ஆனால் காலையில் வெறும் வயிற்றில் அதை சாப்பிடவே கூடாது என்கின்றனர் நிபுணர்கள். காலையில் க்ரீன் டீ குடிப்பது வயிற்றின் சமநிலையை பாதிக்கும். க்ரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வலுவான பாலிபினால்கள் நிறைந்துள்ளன. இது வயிற்று அமில உற்பத்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உங்கள் உடலின் செரிமான அமைப்பை சீர்குலைத்து, வீக்கம், வாயு போன்றவற்றுக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கிரீன் டீயை உணவுக்கு இடையில் அல்லது உணவு உண்ட பிறகு  எடுத்துக் கொண்டால் மட்டுமே ஆரோக்கிய பலன்களை அடையலாம். 


மேலும் படிக்க | Health Alert: சாப்பிட்ட பின் ஒரு போதும் செய்யக் கூடாதவை


அதோடு, கிரீன் டீயுடன் சில பிஸ்கட்கள் அல்லது சில சிற்றுண்டிகளை சாப்பிடலாம். ஆனால், அதை வெறும் வயிற்றில் நிச்சயம் குடிக்கவே கூடாது. மேலும், கிரீன் டீ வேகமாக உடல் எடையை குறைக்க உதவும் என்பதால், அதீத ஆர்வம் காரணமாக நாள் முழுவதும் க்ரீன் டீ குடித்துக்கொண்டே இருக்க கூடாது. 



நாள் ஒன்றுக்கு எவ்வளவு கிரீன் டீ குடிக்க வேண்டும்?


ஒரு நாளைக்கு 1-2 கப் க்ரீன் டீ குடிப்பது நல்லது. கிரீன் டீயை அளவுக்கு அதிகமாக குடிக்க கூடாது என்கின்றனர் நிபுணர்கள். அதிகப்படியான கிரீன் டீ, வயிற்றில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் அல்லது உங்கள் கல்லீரலை சேதப்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று கோப்பைகளுக்கு மேல் சாப்பிடாமல் இருப்பது நல்லது. மேலும், சாப்பிட்ட உடனேயே  க்ரீன் டீயைக் குடிக்காதீர்கள். இதன் காரணமாகவும் அமிலத்தன்மை, வீக்கம் ஆகியவை ஏற்படலாம்.  எனவே, உங்கள் உணவு சாப்பிட்ட 30-45 நிமிடங்களுக்கு பின் கிரீன் டீ அருந்துவது நல்லது.


மேலும் படிக்க | மிதமிஞ்சிய உப்பு உயிருக்கே ஆபத்து; எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR