கிட்னி - லிவரை காலி செய்யும் வலி நிவாரணிகள்... எச்சரிக்கும் மருத்துவர்கள்
மாத்திரைகளால், வலிகளில் இருந்து நிவாரணம் கிடைத்தாலும், அளவுவிற்கு அதிகமாகும் போதும், அடிக்கடி அதனை எடுத்துக் கொள்வதினாலும், அது உடலில் மிகவும் மோசமான பக்க விளைவை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
உடலின் எந்தப் பகுதியிலும் ஏற்படும் சிறிய அளவிலான மற்றும் கடுமையான வலியைக் குறைக்க வலி நிவாரணிகள் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வலி ஏற்படும் போது எல்லாம், அடிக்கடி வலி நிவாரணிகள் உண்ணுவதை வழக்கமாக கொள்வது உங்களை சிக்கலில் தள்ளும். மாத்திரைகளால், வலிகளில் இருந்து நிவாரணம் கிடைத்தாலும், அளவுவிற்கு அதிகமாகும் போதும், அடிக்கடி அதனை எடுத்துக் கொள்வதினாலும், அது உடலில் மிகவும் மோசமான பக்க விளைவை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்
தில்லியில் உள்ள சர்வதேச வலி மையத்தின் இயக்குநர் டாக்டர் அமோத் மனோச்சா கூறுகையில், வலியைக் கட்டுப்படுத்த வலி நிவாரணிகளை அதிகமாகப் பயன்படுத்துவது பல கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்கிறார். உடம்பில் ஏதேனும் ஒரு பகுதியில், வலி ஏற்பட்டால், டாக்டரிடம் ஆலோசனை செய்யமால், மருந்து கடைகளுக்கு சென்று, அவர் பரிந்துரைக்கும் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் பழக்கம் பலருக்கு உள்ளது. வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும், மேலும் மருத்துவரின் ஆலோசனையின்றி அவற்றை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
வலி நிவாரணிகளை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்
சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம்
நீண்ட காலமாக வலிநிவாரணிகளை தொடர்ந்து உட்கொள்வது சிறுநீரகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக, சிறுநீரகத்திற்கு இரத்த ஓட்டம் சரியாக கிடைக்காமல், சிறுநீரக பாதிப்பு, நாள்பட்ட நோய் அல்லது சிறுநீரக செயலிழப்பு போன்ற அபாயத்தை அதிகரிக்கிறது. அதிலும் சர்க்கரை நோயாளிகள் மற்றும் உயர் ரத்தம் அழுத்தம் உள்ளவர்கள், அளவிற்கு அதிகமான வலி நிவாரணிகள் எடுத்துக் கொள்வதால் சிறுநீரகம் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாகும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இரைப்பை குடல் பிரச்சினைகள்
ஆஸ்பிரின் மற்றும் இப்யூபுரூஃபன் போன்ற ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளை (NSAID வகை வலி நிவாரணிகள்) நீண்ட காலத்திற்கு தொடர்ந்து உட்கொள்வது வயிற்றில் எரிச்சல், புண்கள் மற்றும் உடலில் உட்புறத்தில் இரத்தப்போக்கு கூட ஏற்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கல்லீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம்
பாராசிட்டமால் மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டால், அது கல்லீரல் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். சில தீவிர நிகழ்வுகளில், வலி நிவாரணிகள் கல்லீரல் செயலிழப்பை கூட ஏற்படுத்தும்.
தலைவலி
சிலருக்கு, வலி நிவாரணிகளின் அதிகப்படியான பயன்பாடு காரணமாக, அடிக்கடி தலைவலி ஏற்படலாம். மேலும் பக்க விளைவின் காரணமாக ஏற்படும் தலைவலி கடுமையானதாகவும் இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
மேலும் படிக்க | சுகர் லெவல் சொன்னபடி கேட்க இரவில் இதை குடிங்க போதும்
வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளும்போது இதை நினைவில் கொள்ள வேண்டியவை
1. மருத்துவரின் பரிந்துரை மற்றும் மருந்து சீட்டு இல்லாமல், இப்யூபுரூஃபன், டிக்ளோஃபெனாக், நாப்ராக்ஸன் போன்ற ஸ்டெராய்ட் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் அதிகம் எடுத்துக் கொள்வதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
2. பெரும்பாலான வலி நிவாரணிகளை நான்கு முதல் ஆறு மணி நேர இடைவெளியில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
3. இதனுடன், வாரத்திற்கு 2-3 முறைக்கு மேல் உட்கொள்ள கூடாது.
4. வலி நீண்ட காலமாக நீடித்தால் அல்லது அடிக்கடி ஏற்பட்டால், மருத்துவரை அணுகி, அவர் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
5. அதோடு வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வது அவசியம்.
6. வலி நிவாரணி மாத்திரைகளை எப்போதாவது எடுத்துக் கொண்டால் உடல் நலத்திற்கு எந்தவித பாதிப்பும் இருக்காது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | நிபா வைரஸால் இந்தாண்டில் 2வது பலி... பள்ளி, கல்லூரிகள் மூடல் - கட்டுபாடுகள் விதிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ