எச்சரிக்கை... ‘இந்த’ உணவுகளை எலுமிச்சையுடன் எடுத்துக் கொண்டால் பிரச்சனை வரும்..!!
எலுமிச்சம் பழம் அல்லது எலுமிச்சை, ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் அற்புதமான பழங்களில் ஒன்று. நல்ல புளிப்பு சுவையை கொண்டுள்ள எலுமிச்சை, பல உடல்நல பிரச்சனைகளுக்கு மருந்தாகும் அமைகிறது.
எலுமிச்சம் பழம் அல்லது எலுமிச்சை, ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் அற்புதமான பழங்களில் ஒன்று. வைட்டமின் சி மற்றும் தாது சத்துக்கள் மட்டுமல்லாது, இதில் அதிக அளவு ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன. நல்ல புளிப்பு சுவையை கொண்டுள்ள இந்த எலுமிச்சை, பல உடல்நல பிரச்சனைகளுக்கு மருந்தாகும் அமைகிறது.
உணவில் புளிப்பு சுவையை சேர்க்க, சிறந்த தேர்வாக உள்ள எலுமிச்சம் பழத்தை பிடிக்காதவர்களை பார்ப்பது அரிது. எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டு எலுமிச்சை, உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்றும் ஆற்றலையும் கொண்டது. உணவிற்கு சுவையையும் மணத்தையும் கொடுக்கும் எலுமிச்சை, குறிப்பிட்ட சில உணவுகளுடன் சேரும்போது, ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்த கூடும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். சில உணவுகளில் எலுமிச்சை சேர்ப்பதால், உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தி நோயுற செய்யும். பாதிப்பை ஏற்படுத்தும் அத்தகைய உணவுப் பொருட்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
இனிப்பு சுவை கொண்ட பழங்கள்
வாழைப்பழம், மாம்பழம், தர்பூசணி, நன்கு பழுத்த ஸ்ட்ராபெரி போன்ற பழ வகைகளில் எலுமிச்சை சாறு சேர்ப்பதால், உடலில் வீக்கம் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என எச்சரிக்கின்றனர் ஆரோக்கிய வல்லுநர்கள்.
காரம் அதிகம் உள்ள உணவுகள்
அதிக காரம் கொண்ட உணவுகளில் அல்லது அதிக மசாலா சேர்த்த உணவுகளில் எலுமிச்சை சேர்ப்பதால், (Side Effects of Lemon) அதன் சுவை கெட்டுப் போய்விடும். மேலும் செரிமான பிரச்சனைகளும் ஏற்படலாம்.
மீன் உணவுகள்
சில வகை மீன் உணவுகள் மற்றும் இறைச்சி உணவுகளில், எலுமிச்சை சாறு கலந்தால் அவற்றின் சுவை கெட்டுவிடும் என்பதோடு செரிமான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
பால் மற்றும் தயிர்
பாலுடன் எலுமிச்சை சேரவே சேராது. எலுமிச்சை சாறு பட்ட உடனே பால் திரிந்து போய்விடும். மேலும் லாக்டிக் அமில கூறுகளை கொண்ட தயிருடன், எலுமிச்சை அல்லது எலுமிச்சை ஜூசை கலந்து அருந்தினால், அமிலத்தன்மை மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். மோரில் கூட எலுமிச்சை சேர்த்தால் செரிமானத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
மேலும் படிக்க | 100 வயதை கடந்து வாழ ஜப்பானியர்கள் செய்யும் 6 விஷயங்கள்! என்னென்ன தெரியுமா?
முட்டை
உணவுகளுடன் எலுமிச்சை சாறு கலப்பது நல்லதல்ல. இதனால் முட்டையில் உள்ள புரதம் கரைவதோடு, முட்டையின் தன்மையும் மாறிவிடும். எனவே இதை தவிர்ப்பது நல்லது.
அளவிற்கு அதிகமாக எலுமிச்சை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள்
அமிர்தமே என்றாலும் எதுவுமே அளவோடு இருந்தால் தான் நன்மை தரும். எலுமிச்சையும் அதற்கு விதிவிலக்கல்ல. அளவிற்கு அதிகமான எலுமிச்சை அல்லது எலுமிச்சை ஜூஸ் அருந்துவதால் நெஞ்செரிச்சல் ஏற்படும். அதிலும் அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வைட்டமின் சி அளவுக்கு அதிகமாகும் பாதிப்பை ஏற்படுத்தும். அழகுக்கு அதிகமான எலுமிச்சையினால், இரும்பு சத்து தேவைக்கு அதிகமாக உடலில் அதிகரித்தால், அது உள் உறுப்புகளை சேதப்படுத்தலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | மிருகங்களிடமிருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஹெல்தியான பழக்கங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ